Google search engine
Home 2024

Yearly Archives: 2024

சுய உதவிக் குழுக்கள் தயாரித்த மதி தீபாவளி பரிசு பெட்டகம்: அக்.25 வரை விற்பனை

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் பல்வேறு பொருட்களைத் தயாரித்து வருகின்றன. இப்பொருட்கள் விழாக் காலத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இனிப்பு, கார வகைதின்பண்டங்கள் அடங்கிய ‘மதி தீபாவளி பரிசு பெட்டகம்’ தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பரிசு பெட்டகத்தில் இனிப்பு,கார வகைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தீபாவளி பண்டிகைக்கு பரிசளிக்கும் வகையில் அலங்கார பரிசு பொருட்கள் ஆகியவையும் விற்கப்படுகின்றன. இவற்றை மொத்தமாகவோ, சிறிய அளவிலோவாங்க விரும்பும் பொதுமக்கள், www.tncdw.org என்ற இணையதளம், 76038...

கடவுள் அருள் இல்லாததால்தான் சசிகலாவால் முதல்வராக முடியவில்லை: திண்டுக்கல் சீனிவாசன் கருத்து

கடவுள் அருள் இல்லாததால்தான் சசிகலாவால் தமிழகத்தின் முதல்வராக முடியவில்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் தலைமை வகித்தார். முன்னாள் மேயர் மருதராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்துவிடமுடியாது. திமுகவில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தந்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர்...

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் அக்.29-ல் தொடக்கம்: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இன்று ஆலோசனை

 வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் அக்.29-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ ஆலோசனை நடத்துகிறார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகள் வரும் அக்.29-ம் தேதி தொடங்குகிறது. அன்று காலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பட்டியல் அடிப்படையில், திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வரும் நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறுவதையொட்டி...

தமிழகத்தில் கைம்பெண்களுக்காக சிறப்பு நலத்திட்டங்கள்: அரசு வெளியிட்ட அறிக்கையில் பெருமிதம் 

சென்னை: தமிழகத்தில் கைம்பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி சிறப்பாக நடைமுறைப்படுத்துவதுடன், தேவையான நிதியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ‘இந்து தமிழ் திசை' நாளிதழின் தலையங்க பக்கத்தில் கடந்த அக்.22-ம் தேதி ‘கைம்பெண்களின் கண்ணீரைத் துடைப்பது எப்போது?’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருந்தது. இக்கட்டுரை தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம், பல்லாயிரக்கணக்கான பெண்கள் அதிலும் கைம்பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். சமூக பாதுகாப்பு திட்டங்களின்கீழ் உயர்த்தப்பட்ட மாதஓய்வூதியம் ரூ.1,200-ஐ இதுவரை 8 லட்சத்து 10,985...

பாஜகவில் 27 லட்சம் சிறுபான்மையினர் உறுப்பினர்களாக இணைந்ததாக தமிழிசை தகவல்

சென்னை: பாஜகவில் 27 லட்சம் சிறுபான்மையினர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்தார். பாஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை தி.நகர் கமலாலயத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழிசை, மாநில துணை தலைவர்கள் எம்.சக்கரவத்தி, கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது தமிழிசை கூறியதாவது: பாஜகவில் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், அவர்களுக்கென்று சில உறுப்பினர்களை சேர்த்து, கட்சிக்கு ரூ.100 கட்டணம் செலுத்தி அவர்கள் தீவிர உறுப்பினர்களாக மாறவேண்டும். இந்த முறை 27 லட்சம்...

புதிய சக்திகளை சேர்த்து விசிகவை வலுப்படுத்த வேண்டும்: திருமாவளவன் அறிவுறுத்தல்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் பேசியது: தமிழகம் முழுவதும் 234 மாவட்டச் செயலாளர்களை அறிவிக்க இருக்கிறோம். இவர்களோடு சேர்த்து மாவட்ட நிர்வாகமும் முழுமையாக அறிவிக்கப்பட இருக்கிறது. மாவட்ட நிர்வாக பொறுப்புகளை ஆய்வு செய்து தலைமைக்கு பரிந்துரை செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூன்று முதல் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட இருக்கிறது. இந்தக்குழு ஆய்வு செய்து ஒவ்வொரு பொறுப்புக்கும் மூன்று பெயர் களை தலைமைக்கு பரிந்துரை செய்யும். அப்படி பரிந்துரை செய்யப்படும் மூவரில் ஒருவர் ஒருபொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக...

பளுகல்: கேரள நிறுவனத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

குமரி மாவட்டம்,  பளுகல் பேரூராட்சிக்கு உட்பட்ட மணிவிளையில் நூற்றாண்டு பழமையான அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியை ஒட்டிய கேரள பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த நிறுவனம் அரசு பள்ளி நிலத்தையும், தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு  சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து செய்து கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருவதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்.       இந்த நிலையில் கேரள நிறுவனத்தின் கட்டுமான பணிகளை தடுக்க கோரி நேற்று (22-ம் தேதி)  அந்த பகுதியில் கவுன்சிலர்...

குமரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 24 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 3, 719 பேர் அடையாள அட்டை இல்லாமல் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு தனித்த தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இந்த முகாம் வரும் நவம்பர் மாதம் முடிய பல்வேறு பகுதிகளில் நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கடை: வீடு புகுந்து மின் சாதனங்கள் திருட்டு; ஒருவர் கைது

புதுக்கடை அருகே கிள்ளியூர், பருத்தித்காட்டு விளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெர்சன் மனைவி பெமி (36). ஜெர்சன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ஊரில் புதிய வீட்டு வேலை நடந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவ தினம் புதிய வீட்டில் வைத்திருந்த மின் வயர்கள் மற்றும் எலக்ட்ரிக் சுவிட்ச் போர்டுகளை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதன் மதிப்பு சுமார் 50 ஆயிரம் ரூபாய் என தெரிய வந்தது.   இது சம்மந்தமாக பெமி புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை...

தக்கலை: 1. 5 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

தக்கலை மதுவிலக்கு போலீசார் தோட்டியோடு, நுள்ளிவிளைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி, அவரை சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட அரை கிலோ கஞ்சா பாக்கெட் இருந்தது தெரிய வந்தது.        விசாரணையில். அவர் சுங்கங் கான் கடை பகுதி சேர்ந்த ஜான்ரோஸ் (44) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து  தொடர்ந்து நடத்திய விசாரணையில் கஞ்சா பொட்டலத்தை திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...