குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தமிழக அரசு முத்திரையுடன் போலி பாசுகளுடன் வந்த பல்வேறு கனிமவள லாரிகள் சிக்கியது. இதில் சுமார் 10 பேர் வரை இதுவரை கைதாகி உள்ளனர்.
இது சம்பந்தமாக கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் நேற்று கொல்லங்கோடு காவல் நிலைய எல்லைக்குட்ப பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனையில், ஹாலோ பிளாக் நிறுவனத்தின் பெயரில் அதன் உரிமையாளருக்கு தெரியாமல் பாஸ் போட்டு வந்தது தெரிய வந்தது. தாசில்தார் சோதனையில் இந்த லாரிகள் சிக்காமல் இருந்திருந்தால் தமிழகத்தில் உள்ள நிறுவனங்களின் பெயரில் பாஸ் போட்டு கேரளாவுக்கு கடத்தியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஊரம்பு என்ற இடத்தில் பெயர் மட்டும் பதித்த பாஸூடன் ஒரு டாரஸ் டிப்பர் லாரி வந்தது. அந்த லாரி விசாரித்த போது டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அந்த டாரஸ் டிப்பர் லாரி பறிமுதல் செய்து கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் தாசில்தார் ஒப்படைத்தார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.