Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மார்த்தாண்டம்: சர்வீஸ் ரோடு சீரமைப்பு; எம்எல்ஏ பார்வை

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள சர்வீஸ் ரோடு ஒருவழி பாதியாக உள்ளது. காந்தி மைதானத்தில் இருந்து செல்லும் அனைத்து டவுன் பஸ்களும் சர்வீஸ் ரோடு வழியாக சென்று வருகின்றன. இந்த ரோடு வழியாக தினசரி நூற்றுக்கணக்கான கார்கள், பள்ளி வாகனங்கள், பைக்குகளும் சென்று வருகின்றன.       இந்த நிலையில் ரோடு சுமார் ஆறு மாதமாக பல்லாங்குழிகளாக படுமோசமாக காணப்பட்டது. சில பகுதிகளில் குழிகள் ஒரு அடி ஆழத்துக்கு மேல் உள்ளது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. எனவே இதை  சீரமைக்க...

கீழ்குளம்: அரசு சுகாதார நிலையத்திற்கு சலவை இயந்திரம்

கீழ்குளம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் நோயாளிகள் பயன்படுத்தும்  படுக்கைகள், போர்வைகள், தலையணை உறைகள் தூய்மை இல்லாமல் காணப்பட்டது. அங்கு தூய்மை பணியாளர் யாரும் இல்லை.   இதனை அடுத்து ராஜேஷ்குமார் எம்எல்ஏ தனது சொந்த  நிதியிலிருந்து ஒரு சலவை இயந்திரம் வழங்க முடிவு செய்து,நேற்று (21-ம் தேதி) வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், கீழ் குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால், திமுக ஒன்றிய செயலாளர் கோபால், வட்டார மருத்துவ அலுவலர் ஸ்டாலின் ஜோஸ் உட்பட...

தூத்தூர்: கலைஞர் நூற்றாண்டு கால்பந்தாட்ட போட்டி

தூத்தூர் புனித யூதா கல்லூரியில் குமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் நிறைவு  விளையாட்டு போட்டிகள் நேற்று (21-ம் தேதி) நடந்தன.        விளையாட்டு மேம்பாட்டு  அணி அமைப்பாளர் ஜூட் தேவ்  தலைமை வகித்தார். இதில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. குமரி மாவட்டத்தை சேர்ந்த 10 பள்ளிகள் பங்கெடுத்தன. இறுதிப்போட்டியில் மார்த்தாண்டன்துறை  புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியும், பயஸ் மேல்நிலைப்பள்ளியும்  மோதின.         இதில் மார்த்தாண்டன் துறை...

வெள்ளிப் பதக்கம் வென்றார் தீபிகா குமாரி

டிலாக்ஸ்கலா: மெக்சிகோ நாட்டில் உள்ள டிலாக்ஸ்கலா நகரில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ரீகர்வ் பிரிவு இறுதி சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் தீபிகா குமாரி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன அணியில் இடம் பிடித்திருந்த லி ஜியாமனுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் தீபிகா குமாரி 0-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். உலகக் கோப்பை வில்வித்தை தொடரில் தீபிகா குமாரி பதக்கம் வெல்வது இது 5-வது முறையாகும்.

மிர்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வியான் முல்டர், ரபாடா வேகத்தில் 106 ரன்களுக்கு சுருண்டது வங்கதேச அணி

எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மிர்பூர் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணியானது வியான் முல்டர், காகிசோ ரபாடா ஆகியோரது வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்களை பறிகொடுத்தது. ஷத்மான் இஸ்லாம் (0), மொமினுல் ஹக் (4), கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (7) ஆகியோர் வியான் முல்டர் பந்தில் நடையை...

சொந்த மண்ணில் 13 டெஸ்டில் 19 விக்கெட்கள்: வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ் தடுமாறுவது ஏன்?

நியூஸிலாந்து அணிக்கு எதிராக பெங்களூருவில் முடிவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல்திறனை வெளிப்படுத்தவில்லை. நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்ட நிலையில் முகமது சிராஜின் பந்து வீச்சு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. 30 வயதான ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது சிராஜ், இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 80 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இதில் 61 விக்கெட்கள் வெளிநாடுகளில் (தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா) நடைபெற்ற 17 டெஸ்ட் போட்டிகளில்...

100 சதவீதம் வலி இல்லை: சொல்கிறார் முகமது ஷமி

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், அதன் பின்னர் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் முகமது ஷமியின் காலில் வீக்கம் இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். இதனால் அடுத்த மாத இறுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஷமி விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் நீடித்த...

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

 ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம், ககான்கிர் பகுதியில் கட்டுமான தொழிலாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்கை லடாக்குடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் ககான்கிர் - சோனாமார்க் இடையே அனைத்து பருவ காலத்திலும் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் 6.5 கி.மீ. தொலைவுக்கு வாகன சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. உ.பி.யை சேர்ந்த தனியார் நிறுவனம் இதன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் தொழிலளர்கள் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு அருகில் தங்கியிருந்தனர். இந்நிலையில் இவர்களின் முகாம் மீது...

திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரத்தில் சர்ச்சை கருத்து: பவன் கல்யாண் நேரில் ஆஜராக ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவு

திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் ஆஜராக வேண்டும் என ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவில் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுபிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பும், மீன் எண்ணெயும் கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இது ஏழுமலையான் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ இயக்குநரின் கண்காணிப்பின் கீழ் 5உறுப்பினர்களை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உச்ச நீதிமன்றம்...

கன்னடர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும்: பெங்களூரு மாநாட்டில் எடியூரப்பா வேண்டுகோள்

கர்நாடகாவில் கன்னடர் - தமிழர் இடையே எந்த வேறுபாடும் இல்லாமல், ஒற்றுமையாக வாழ வேண்டும் என அம்மாநில முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா கேட்டுக்கொண்டார். பெங்களூருவில் தாய்மொழி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் தலைமையில் கன்னடர்- தமிழர் ஒற்றுமை மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் எடியூரப்பா பேசியதாவது: எனது ஆட்சிக் காலத்தில் கர்நாடகாவில் கன்னடர்- தமிழர் இடையே ஒற்றுமை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...