Google search engine
Home 2024

Yearly Archives: 2024

சென்னை – பெங்களூரு இடையே சிறப்பு ரயில்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து அக்.30, நவ.3 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணிக்கு சிறப்பு ரயில் (06209) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து அக்.30, நவ.3 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.55 மணிக்கு சிறப்பு ரயில் (06210) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.50 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூருவை அடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், தாம்பரம் -...

வயநாடு மக்களை ஏமாற்றிவிட்டது நேரு குடும்பம்: பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் குற்றச்சாட்டு

நேரு குடும்பம் வயநாடு மக்களை ஏமாற்றி விட்டதாக பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இவர் தேர்தலில் போட்டியிடுவது இதுதான் முதல் முறை. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் சத்யன் மோகேரியும் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர். வயநாடு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ள பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ்...

உ.பி. இடைத்தேர்தல்: காங்கிரஸ் – சமாஜ்வாதி பேச்சுவார்த்தை

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: உத்தர பிரதேச இடைத் தேர்தல் நவம்பர் 13-ல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாதி களம் காணஉள்ளது. இதற்காக, அந்த கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கர்ஹல் தொகுதி சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக உள்ளது. இந்த தேர்தலில் கர்ஹல்மக்கள் எங்களது கட்சிக்குவரலாற்று வெற்றியை தேடித்தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் எங்களது கட்சி சார்பில் போட்டியிட தேஜ் பிரதாப் சிங்யாதவ் மனு தாக்கல் செய்துள்ளார்....

மகாராஷ்டிரா தேர்தலில் களமிறங்குகிறார் மராட்டியர் இடஒதுக்கீடு போராளி மனோஜ்: மஹாயுதி, எம்விஏ கூட்டணிகளுக்கு சிக்கல்

 மகாராஷ்டிராவில் ஷிவ்பா சங்கட்னா என்ற மராட்டிய சமூக அமைப்பின் தலைவர் மனோஜ் ஜாரங்கி பாட்டீல் (41). ஜெய்னா மாவட்டம் அந்தர்வாலி சராத்தி கிராமத்தைச் சேர்ந்த இவர், மராட்டிய சமூகத்தினருக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி போராடி வருகிறார். இதற்காக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இருமுறை நடத்தினர். இந்நிலையில், மனோஜ் ஜாரங்கி நேற்று கூறும்போது, ‘‘மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மராட்டிய சமூகத்தினர் உறுதியாக வெல்லும் தொகுதிகளில் போட்டியிடுவோம். இதில் விருப்பம் உள்ள மராட்டிய சமூகத்தினர் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இவர்களில்...

“பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது” – பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்ட பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு `பிரிக்ஸ்' (BRICS) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷ்யாவின் தலைமையில் நடைபெற உள்ளது. ரஷ்யாவில் உள்ள காசான் பகுதியில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் உச்சிமாநாடு...

முதல்வர் அரசு இல்லத்தை ரூ.100 கோடியில் அலங்கரித்த அர்விந்த் கேஜ்ரிவால்: ரூ.5.6 கோடி ஜன்னல் திரை; ரூ.15 கோடி சானிட்டரி பிட்டிங்ஸ்

புதுடெல்லி: டெல்லி முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் பதவி வகித்தபோது, அவர் வாழ்ந்த வீட்டை ரூ.100 கோடிசெலவில் அலங்கரித்து உள்ளார். ரூ.5.6 கோடிக்கு ஜன்னல் திரைகள், ரூ.15 கோடிக்கு குளியல் அறை, கழிவறை, சமையல் அறைக்கான பொருட்கள் வாங்கப்பட்டு உள்ளன. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 2015 பிப்ரவரி முதல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதிவரை டெல்லி முதல்வராக பதவிவகித்தார். அப்போது டெல்லியின் சிவில்லைன்ஸ் பகுதி பிளாக்ஸ்டாப் சாலையில் உள்ள அரசு இல்லத்தில் அவர் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். இது 21,000 சதுர...

குரூப்-1 தேர்வில் சான்றிதழ் பதிவேற்ற நவ.2 வரை அவகாசம்

குரூப்-1 தேர்வில் விடுபட்ட சான்றிதழ்களை தேர்வர்கள் நவம்பர் 2-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குருப்-1 தேர்வில் சில தேர்வர்கள், தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாமல்இருப்பதும், சிலவற்றை முழுமையாக பதிவேற்றம் செய்யாமல் விட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்கள் நவம்பர் 2-ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் சான்றிதழ்களை...

முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை; திராவிட இயக்க படைப்புகள், படைப்பாளிகளுக்கு பரிசு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு திராவிட இயக்க படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் திமுக முப்பெரும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘முரசொலி’ நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனுமான செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த அக்.10-ம் தேதி காலமானார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி, சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முரசொலி செல்வத்தின் படத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்...

பொதுப்பணி, நீர்வளத் துறைகளில் தினக்கூலி பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்: சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழக பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை (என்.எம்ஆர்) பணி வரன்முறை செய்திடக் கோரி தமிழ்நாடு தொழில்நுட்ப களப் பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைபெற்றது. பொதுப்பணித் துறை மற்றும் நீர்வளத் துறையில் தினக்கூலி பணியாளர்களாக (என்.எம்.ஆர்)10 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை பணியாற்றிய பணியாளர்களுக்கு, 10 ஆண்டு பணி முடித்திருந்தால் பணி ஆணை வழங்க வேண்டும் என்று அரசின் விதிமுறை உள்ளது. இதைப் பின்பற்றி பணியாளர்கள் பணியில் சேர்ந்த நாள்முதல் கணக்கிட்டு கல்வித்...

கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு: திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி பகுதியில் உள்ள 169 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோலடி ஏரி, ஆக்கிரமிப்பு காரணமாக 112 ஏக்கராக குறைந்துள்ளது. தொடர்ந்து ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில், கோலடி ஏரியை ஆக்கிரமித்துள்ள வீடுகளை அகற்ற முடிவு செய்த வருவாய்த் துறை அதிகாரிகள், முதல் கட்டமாக கடந்த 2 நாட்களில் போலீஸ் பாதுகாப்புடன் அன்பு நகர், செந்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரியை ஆக்கிரமித்து புதிதாக கட்டப்பட்டு வந்த வீடுகள் மற்றும் ஆள் இல்லாமல் உள்ள வீடுகள் என, 33 வீடுகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...