Home 2024
Yearly Archives: 2024
அதிமுக உடையவில்லை; பதவி ஆசை பிடித்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்: கே.பி.முனுசாமி கருத்து
அதிமுக உடையவில்லை; பதவிஆசை பிடித்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயல் வீரர்கள்மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் அதிமுக துணைபொதுச்செயலாளர் முனுசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு பேசியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுகவின் 53-ம் ஆண்டுதொடக்கவிழாவும், செயல்வீரர்கள் கூட்டமும் சிறப்பாக நடந்து வருகின் றன. அவற்றில் ஒற்றுமையுடன் நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்....
மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்தில் மார்பக புற்றுநோய் குறித்து பெண்கள் சுய பரிசோதனை செய்வது அவசியம்
மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்தில் பெண்கள் சுய மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 30 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், ராணிப்பேட்டை, ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த 4 மாவட்டங்களில் இதுவரை 5.24 லட்சம் பேருக்கு வாய் புற்றுநோய் பரிசோதனை நடத்தப்பட்டதில் 2,555 பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டது. அதேபோல, 2.20...
பாஜக உட்கட்சி தேர்தல் நவம்பரில் தொடக்கம்: பொறுப்பாளர்களுக்கு டெல்லியில் பயிற்சி
சென்னை: நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தமிழகத்திலும் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணிகளை மாநில, மாவட்ட நிர்வாகிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கிளைகளிலும் 200 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜகவினர் பணியாற்றி வருகின்றனர்.
ஆனாலும், பாஜவினர் எதிர்பார்த்ததுபோல உறுப்பினர் சேர்க்கை இல்லை என பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது. தற்போதுவரை 30 லட்சம் அளவிலேயேஉறுப்பினர்கள் இணைந்திருப்பதாகவும், அதனால், உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரி பாஜகமேலிடத்தில், தமிழக நிர்வாகிகள் கோரிக்கை வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில்,...
அறநிலைய துறையை பக்தர்கள் பாராட்டுகின்றனர்: இலவச திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகின்றனர். பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு பயன்படுத்துபவர்களால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று 379 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு 31 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்து, ரூ.60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
விழாவில் முதல்வர் பேசியது: திமுக...
தாம்பரம் மாநகராட்சி மன்ற கூட்டம்: ப்ளீச்சிங் பவுடர் பாக்கெட்களுடன் அதிமுகவினர் வெளிநடப்பு
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளிலும் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என பல உறுப்பினர்களும் ஒருமித்து குரல் எழுப்பினர்.
குறிப்பாக, தாம்பரத்தில் பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு கொடுக்கும் பணியை, ஒப்பந்ததாரர் சரியாக செய்வதில்லை. அவரை தொடர்புகொள்ளவும் முடியவில்லை. அதனால் அனகாபுத்தூர் போன்று தாம்பரத்திலும் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு வேறு ஒப்பந்ததாரர் மூலம் திட்டத்தை முடிக்க வேண்டும்.
மாநகராட்சியில் பசுமை உரக்கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. அவை முறையாக செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது....
‘தீபாவளிக்காக அரசு கட்டணத்தில் தனியார் பேருந்துகள்’ – அமைச்சர் விளக்கம்
சென்னை: தீபாவளியை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்குவது குறித்து அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, “தீபாவளியை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 5.80 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இது தவிர, தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி இயக்க உள்ளோம்.
வெளிப்படையான ஒப்பந்தம் அடிப்படையில் அவர்களுக்கு இயக்க கட்டணம் ரூ.51.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு பேருந்துகளில் என்ன கட்டணம் தருவார்களோ, அதே கட்டணத்தை தரலாம். ‘அரசு ஏற்பாடு செய்தது’ என அந்த பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்”...
விசிகவில் இருந்து அருந்ததியரை பிரிக்க சதி: திருமாவளவன் குற்றச்சாட்டு
சென்னை: விசிகவில் இருந்து அருந்ததியின மக்களை வெளியேற்ற ஆர்எஸ்எஸ்சதித்திட்டம் தீட்டுவதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் கூறியதாவது: மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் விசிக, அங்குள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அருந்ததியர் என்பதே,ஆர்எஸ்எஸ் அமைப்பு சொல்லித்தான் அருந்ததியர் சமூகத்துக்கே தெரியும். அவர் ஒரு ஆர்எஸ்எஸ்காரர். படித்த காலத்தில் இருந்தேஆர்எஸ்எஸ் தொண்டனாகத்தான் வளர்ந்தார். அரசியலில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவராகவேதான் ஈடுபட்டார். அவர் ஒருபோதும் தன்னை அருந்ததியர் என்று காட்டிக்கொண்டது...
நாகர்கோவில்: முதியோர் உதவித்தொகை பெற வந்த 110 வயது மூதாட்டி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த சரஸ்வதி என்ற 110 வயதுடைய மூதாட்டியை அவரது மகன் நேற்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். தனது தாய்க்கு முதியோர் உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை என்பதால், அவர் இறக்கும் முன்பாவது கிடைக்க வேண்டும் என்பதற்காக மூன்று சக்கர நாற்காலியில் அழைத்து வந்ததாக தெரிவித்தார். ஆனால் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விடுமுறை என்பதால் திரும்பிச் சென்றார்.
மண்டைக்காடு: இந்திய அணி சார்பில் தங்க பதக்கம் பெற்ற மாணவி
குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஜெயசேகர் மகள் ஜோஷிகா. இவர் பூட்டான் நாட்டில் 2023 - 24 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய மகளீர் அட்யா - பாட்யா சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த மாதம் 13 முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் கலந்து கொண்டார். இதில் இவர் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றார்.
இவர் நாகர்கோவில் இந்து கல்லூரியில் சோசியாலஜி துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் அதே...
அருமனை: இருளில் பயணிகளை தவிக்க விட்ட அரசு பேருந்து
மார்த்தாண்டத்திலிருந்து பத்துகாணி மலை கிராம பகுதிக்கு நேற்று (20-ம் தேதி) இரவு 8: 30 மணி அளவில் அரசு பஸ் ஒன்று சென்றது. ஆலஞ்சோலை அருகாமையில் ரப்பர் எஸ்டேட் பகுதியில் அரசு பஸ் பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால் கை குழந்தைகளுடன் இருந்த பெண்கள் உட்பட பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.
மாற்று பேருந்து ஏற்பாடு செய்யாததால் பயணிகள் இருளில் பல மணி நேரம் தவித்தனர். அவர்களுக்கு அடுத்த பேருந்து இரவு 10: 30 மணிக்கு தான் வரும் என்பதால்,...














