Google search engine
Home 2024

Yearly Archives: 2024

தக்கலை: கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது

தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு பகுதியில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் மாணவர்களுக்கு சப்ளை செய்வதாக தக்கலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று (20-ம் தேதி)  போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் மற்றும் போலீசார் திருவிதாங்கோடு அரசு தொடக்கப்பள்ளி பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.      அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் ஓட்டம் பிடித்தார். அங்கு நின்ற 4 பேரை பிடித்து தக்கலை போலீஸ் நிலையம்  கொண்டு வந்து விசாரித்ததில் அவர்கள் திருவிதாங்கோட்டை சேர்ந்த சல்லாஹூதின், முகமது அசாத்,...

புதுக்கடை: இலவச கண்சிகிட்சை முகாம்

குமரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கீழ்குளம் முதல் நிலை பேரூராட்சி, பெஜான் சிங் கண் மருத்துவமனை  இணைந்து நடத்திய இலவச மாபெரும்  கண் சிறப்பு முகாமை பேரூராட்சி தலைவர் சரளா கோபால் துவக்கி வைத்தார்.         இந்த நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் கிருஷ்ணன்,  லாசர், அல்போன்சள், ஷோபா, கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பி கோபால் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பெஜான்சிங் கண் மருத்துவர் செவிலியர்கள் கலந்து கொண்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு...

தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய மெரினா புரட்சி

2017 ஜனவரி 17 தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் லட்சக்கணக்கில் இளைஞர்கள் கூட்டம் கூடியது. ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தடையை முற்றிலும் நீக்கும் இந்த சட்ட மசோதாவுக்கான தீர்மானம், பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்தது.

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வி கண்டது ஏன்? – கிரிக்கெட் நிபுணர்கள் அலசல்

பெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது. வெற்றி வாய்ப்பு இருந்தபோதும் அதை இந்திய அணியினர் சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் தோல்வி கண்டதாக கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வந்தது. மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்தான நிலையில் இரண்டாம் நாளன்று பேட்டிங் செய்த...

சர்வதேச விண்வெளி ஆய்வு மாநாடு:  கட்டுரைகள் சமர்ப்பிக்க யுஜிசி அழைப்பு

சென்னை: இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மாநாட்டுக்கு கட்டுரைகளை அனுப்பலாம் என்று விஞ்ஞானிகள், கல்வியாளர்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு (ஐஏஎப்) அதன் உறுப்பு நிறுவனங்களுடன் இணைந்து, விண்வெளி குறித்த சர்வதேச மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு டெல்லியில் அடுத்த ஆண்டு மே 7 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பொறியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள் பங்கேற்று...

நாக்பூரிலிருந்து வெடிபொருள் ஏற்றுமதி அதிகரிப்பு

நாக்பூர்: இந்தியாவில் வெடிபொருள் மற்றும் வெடிமருந்துத் தயாரிப்பு மையமாக நாக்பூர் திகழ்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும்ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான வெடிபொருள்கள் நாக்பூர் ஆலைகளிலிருந்து ஏற்றுமதியாகியுள்ளன. மேலும் ரூ.3,000 கோடிக்கு ஆர்டர்கள் வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கேரியா, ஸ்பெயின், ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, போலந்து, வியட்நாம், பிரேசில், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் நாக்பூரிலிருந்து மிக அதிக எண்ணிக்கையில் வெடிபொருள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கிசேமித்து வருகின்றன. இந்த நாடுகளிலிருந்து போரில்ஈடுபடும் நாடுகளுக்கு வெடிபொருள்கள் அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பெங்களூருவில் நாளை இந்திய உயிர் சக்தி வேளாண் மாநாடு தொடக்கம்

பெங்களூரு: இந்திய உயிர் சக்தி வேளாண் கூட்டமைப்பு ‘BIODYNAMIC ASSOCIATION OF INDIA’ (BDAI) அக்டோபர் 22, 23-ம் தேதிகளில் இந்திய அளவிலான உயிர் சக்தி வேளாண் மாநாட்டை பெங்களூருவில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில், ‘இந்தியாவின் வருங்கால உயிர் சக்தி வேளாண்மை வடிவமைத்தல்’ என்ற தலைப்பில் சர்வதேச மற்றும் இந்தியாவில் உள்ளபல ஆராய்ச்சியாளர்கள், உயிர் சக்தி வேளாண் விவசாயிகள், சிந்தனையாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டு தங்கள்அனுபவங்களையும், அவர்களின் தொலைநோக்கு நுண்ணறிவையும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். இதுஇயற்கை விவசாயத்தை ஒட்டியது என்று அகில...

பெண்ணின் வயிற்றில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2 கத்தரிக்கோல் அகற்றம்

காங்டாக்: சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் காங்டாக்கிலுள்ள சர் துடோப் நாம்கியால் நினைவு மருத்துவமனையில் (எஸ்டிஎன்எம்) மருத்துவமனையில் அண்மையில் வயிற்றுவலி காரணமாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவரது வயிற்றுப்பகுதியை எக்ஸ்-ரே எடுத்து பார்த்தபோது அதில் 2 கத்தரிக்கோல்கள் இருந்தது தெரியவந்தது. அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, 12 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2012-ல் இதே எஸ்டிஎன்எம் மருத்துவமனையில் குடல்வால் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகத் தெரிவித்தார். குடல்வால் அறுவை சிகிச்சையின்போது சிகிச்சை செய்தடாக்டர்கள் மறந்து அந்த கத்தரிக்கோல்களை வயிற்றிலேயே வைத்து தைத்துவிட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து எஸ்டிஎன்எம் மருத்துவமனை...

நாங்கள் ஒரு கரப்பான் பூச்சியைக்கூட கொன்றதில்லை: சல்மான் தந்தை கருத்துக்கு பிஷ்னோய் சமூகத் தலைவர் எதிர்ப்பு

புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸின் மூத்ததலைவரான பாபா சித்திக் மும்பையில் கடந்த 12-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு சர்வதேச குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது. இதைதொடர்ந்து, பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொல்ல லாரன்ஸ் கும்பல் குறி வைத்துள்ள விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது. இதற்கு ராஜஸ்தானின் ஜோத்பூரில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த படப்பிடிப்பின் போது நடிகர் சல்மான் சிங்காரா மான்வேட்டையில் ஈடுபட்டது காரணம் என தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் பிஷ்னோய் சமூகத்துக்கு சொந்தமாக ஜோத்பூரில் உள்ள குரு ஜம்பேஷ்வர் கோயிலுக்கு வந்து சல்மான் மன்னிப்பு...

காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளிகள் 6 பேர், உள்ளூர் மருத்துவர் ஒருவர் சுட்டுக் கொலை

கந்தர்பால்: ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உள்ளூர் மருத்துவர் ஒருவர், புலம்பெயர்ந்த தொழிலாளிகள் 6 பேர் என மொத்தம் 7 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கந்தர்பால் மாவட்டத்தில் சோனம்மார்க் எனுமிடத்தில் ஞாயிறு மாலை இத்தாக்குதல் நடந்துள்ளது. அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் பணிபுரிய வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் தீவிரவாதிகள் இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது. அப்பகுதியை சுற்றிவளைத்துள்ள பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்கிடையே பயங்கரவாதி ஒருவர்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...