Home 2024
Yearly Archives: 2024
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டி: ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் குமார் ஜா அறிவிப்பு
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடும்சூழ்நிலை உருவானாலும் இந்தியாகூட்டணி வேட்பாளர்களுக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் எம்.பி.யும், செய்தித் தொடர்பாளருமான மனோஜ் குமார் ஜா தெரிவித்துள்ளார். இதுகுறி்த்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
ஜார்க்கண்ட் மாநிலத்தை பொறுத்தவரையில் 18-20 தொகுதிகள் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் கோட்டையாக விளங்குகிறது. இங்கு, பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரேநோக்கம். அதில் உறுதியாக உள்ளோம். இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு துளியும் இல்லை. ஜார்க்கண்ட் தேர்தலில் தனித்து போட்டியிடும்...
உத்தராகண்டில் ரூ.100 மட்டுமே வாடகை செலுத்தி 58 ஆண்டுகளாக குடியிருந்த வீட்டை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலைச் சேர்ந்தவர் கடற்படை கேப்டன் மிருதுல் ஷா (53). இவருடைய பெற்றோர் ஒரு வீட்டை 1966-ம் ஆண்டு விமானப்படை கேப்டன் ஹர்பால் சிங் என்பவர் ரு.100-க்கு வாடகைக்கு விட்டுள்ளனர். ஹர்பால் சிங் உயிரிழந்த பிறகு அவரது மனைவி மற்றும் மகள்(நீலம் சிங்) அங்கு தொடர்ந்து வசித்து வந்துள்ளனர்.
தாய் உயிரிழந்த பிறகு நீலம் சிங் வாடகைதாரராகி உள்ளார். ஆனால், அவர் தொடர்ந்து வெறும்100 ரூபாயை மட்டுமே வாடகை செலுத்தி வந்துள்ளார்.
இதனிடையே, பெற்றோரின் வீடு மிருதுல் ஷாவுக்கு சொந்தமாகி விட்டது. தனக்கு தேவைப்படுவதால்...
65 வயதுக்கு உட்பட்ட ஓய்வுபெற்ற ஊழியர்களை மறுநியமனம் செய்யும் ரயில்வே
புதுடெல்லி:ரயில்வே துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிற நிலையில், அதை ஈடு செய்ய25,000 இடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்யும் நடவடிக்கையை ரயில்வே வாரியம் முன்னெடுத்துள்ளது. இந்த இடங்களுக்கு, ஏற்கெனவே ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற 65 வயதுக்குட்பட்ட நபர்களையும் மறுநியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரயில்வேயில் ஓய்வுபெற்ற 65 வயதுக்குட்பட்டவர்கள், சூப்பர்வைசர் முதல் டிராக் மேன் வரையில் பல்வேறு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
உடல் தகுதி: அவர்களின் கடைசிஐந்து ஆண்டுகால பணி நடத்தைஅலசப்பட்டு, அவர்களின் உடற்தகுதியைப் பொறுத்து வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். 2ஆண்டுகள் வரையில் அந்த வேலையில் தற்காலிக...
இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு உலக விண்வெளி விருது: சந்திரயான் 3 திட்ட பணிகளுக்காக அங்கீகாரம்
பெங்களூரு: இந்த ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் ஐஏஎப் உலக விண்வெளி விருது, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் மிகவும் மதிக்கப்படும், இந்த விருதை பெற்றுள்ள அவருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.
ஐஏஎப் உலக விண்வெளி விருது வழங்கும் விழா மற்றும் சர்வதேச விண்வெளி கருத்தரங்கம் இத்தாலி நாட்டின் தலைநகரான மிலன் நகரில் அண்மையில் நடந்தது. இதில் இஸ்ரோ அமைப்பின் சார்பில் இந்தியா முன்னெடுக்கும் விண்வெளி ஆய்வு பணிகளுக்கும், சந்திரனின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான் 3 திட்ட பணிகளுக்கும் வெகுவாக...
பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் அக்.28-ல் தொடக்கம்: பிப்.11 வரை நடைபெறுகிறது
பள்ளி மாணவர்களுக்கான தடகள, குழு விளையாட்டு போட்டிகள் வரும் 28-ம் தேதி முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன.இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: நடப்பு (2024-25) கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் குடியரசு தின தடகள போட்டிகள், பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள், குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் ஆகியவை அக்டோபர் 28-ம் தேதி முதல் 2025 பிப்ரவரி 11-ம் தேதி வரை...
கடந்த ஆண்டை போலவே தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு
சென்னை: தீபாவளி தினத்தில் காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அக்.31-ம் தேதி தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதில் கடந்த சில ஆண்டுகளாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், தீபாவளி தினத்தின்போது காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு...
தமிழகத்தில் நிலுவையில் உள்ள 30,000 விவசாய மின் இணைப்புகளை அடுத்த மார்ச்சுக்குள் வழங்க அனுமதி
சென்னை: கடந்த ஆண்டில் நிலுவையில் உள்ள 30 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை வழங்க மின்வாரியத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
விவசாயத்துக்கு சாதாரணம், சுயநிதி என 2 பிரிவுகளில் தமிழக மின்வாரியம் மின் இணைப்பு வழங்குகிறது. இதில், சாதாரண பிரிவில் மின் வழித்தட செலவு, மின் விநியோகம் ஆகிய அனைத்தும் இலவசம். சுயநிதி பிரிவில் மின்சாரம் மட்டும் இலவசம். வழித்தட செலவில் ஒரு பகுதியை விவசாயிகள் ஏற்க வேண்டும்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கும் இலவச மின்சாரம் வழங்குவதால் மின்வாரியத்துக்கு...
டிஜிபி அலுவலகத்தில் வீரவணக்க நாள் நிகழ்வுகள்: மெரினாவில் இன்று காலை போக்குவரத்து மாற்றம்
சென்னை: டிஜிபி அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்வுகள் நடைபெறுவதால், மெரினா பகுதியில் இன்று காலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் இன்று (அக்.21) அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, சென்னை மெரினா டிஜிபி அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவிடத்தில் தலைமை டிஜிபி சங்கர் ஜிவால், காவல் அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகின்றனர். அணிவகுப்பு மரியாதையும் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக, மெரினாவில் இன்று காலை 8...
திருவள்ளூர் அருகே மப்பேடு ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயிலில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த இரு செப்பேடுகள் கண்டெடுப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயிலில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் அருகே மப்பேடு கிராமத்தில் ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இக்கோயில், இந்துசமய அறநிலையத் துறை யின் கீழ் உள்ளது.
இந்நிலையில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் செயல் அலுவலரும், ஸ்ரீசிங்கீஸ் வரர் கோயிலின் பொறுப்பு செயல் அலுவலருமான பிரகாஷ், சமீபத்தில் கோயில் வளாகத்தில் உள்ள லாக்கர்களில் சோதனையில் ஈடுபட்டார்.
அச்சோதனையில், விஜயநகர சாம்ராஜ்யத்தின் முத்திரையை கொண்ட வளையத்தில் இணைக் கப்பட்ட இரு செப்பேடுகள்...
காவலரின் மரணம் குறித்து விசாரணை: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னை: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வமுருகன்(29). இவர் சென்னை புதுப்பேட்டையில் ஆயுதப்படை காவலராகப் பணியாற்றிவந்த நிலையில், கடந்த 18-ம் தேதி காவலர் குடியிருப்பில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பிவிட்டதா? என்பதைப் பார்ப்பதற்காக மாடிக்கு சென்றுள்ளார்.
அப்போது 14-வது மாடியில் இருந்து கிழே விழுந்து உயிரிழந்தார். அவர் கால் தவறி விழுந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் அவரது மரணம் மர்மமான முறையில் ஏற்பட்டதாகவும், அதுகுறித்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தென்காசி...














