Home 2024
Yearly Archives: 2024
அனைத்து ரயில் நிலையங்களிலும் க்யூஆர் குறியீடு கட்டண முறை
சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் க்யூஆர் குறியீடு கட்டண முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
முன்பதிவில்லாத டிக்கெட்கள், நடைமேடை டிக்கெட்கள், முன்பதிவு டிக்கெட் என அனைத்து டிக்கெட் கவுன்ட்டர்களிலும் க்யூஆர் குறியீடு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. பணம் செலுத்தும் முறையை நெறிப்படுத்தவும், பணம் கையாளுதல் தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்கவும் பயணச் சீட்டுகள் விநியோக முறையை எளிதாக்கும் நோக்கிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பயணச்சீட்டு மையங்களில் உள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்த பிறகு, யுபிஐ செயலிகளின் மூலம் டிக்கெட் கட்டணத்தை செலுத்தலாம். கட்டணம் செலுத்தப்பட்டு உறுதி...
மந்தகதியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணி: விபத்து அச்சத்தில் வேப்பம்பட்டு பொதுமக்கள்
திருவள்ளூர்: வேப்பம்பட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணி மந்தகதியில் நடைபெறுவதால், கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மக்களிடம் விபத்து அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம் வழியாக சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை விரிவாக்கம் செய்யும் பணி, நெடுஞ்சாலைத் துறை மூலம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலையின் ஓரத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
ஆனால், இந்தப் பணி கடந்த15 நாட்களுக்கும் மேல் நடைபெறாததால், சாலையில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்குச் செல்லும் பொதுமக்கள் மிகுந்த...
தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை: தமிழக அரசு உத்தரவு
தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நவ.1-ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இவ்வாண்டு தீபாவளியை அக்.31-ம் தேதி கொண்டாடும் பொருட்டு, தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவ.1ம் தேதி அன்று ஒருநாள் மட்டும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள்,...
தீபாவளிக்கு முன்னதாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என முதல்வருக்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.கதிரேசன் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் பெரும்பாலானோருக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்துடன் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அரசு நிறுத்திவிட்டது. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தியபோதும் அரசு கண்டு கொள்ளவில்லை.
இந்த விவகாரத்தில் ஓய்வூதியர் நலச் சங்கங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என...
தஞ்சை தமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடிய ஆளுநர்
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இன்று (அக்.19) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் பங்கேற்றதால், தமிழக அமைச்சர்கள் அந்த நிகழ்வில் பங்கேற்பதை புறக்கணித்தனர். அதேசமயம், இன்றைய தமிழ்ப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் முழுமையாகப் பாடினார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழா இன்று (அக்.19) நடைபெற்றது. இவ்விழாவுக்கு வந்தவர்களை பல்கலைக் கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் வரவேற்றார். விழாவில், முனைவர் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், முதுகலை, இளங்கலை பட்டங்களைப் பெற்ற 668 மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி...
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நாட்டுக்கே வழிகாட்டும் வகையில், மக்கள் நலன் கருதி பல முன்னோடி நலத் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இப்பணியில் பெரும் பங்காற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.இதற்கிடையே, மத்திய அரசு பணியாளர்களுக்கு கடந்த...
அரசு நிகழ்வுகளில் பங்கேற்கும்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலாச்சார உடை அணிய கோரி வழக்கு
தமிழக துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின், அரசு நிகழ்வுகளில் பங்கேற்கும்போது தமிழ் பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் முறையான உடை அணிய உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை சேலையூரை சேர்ந்த வழக்கறிஞர் எம்.சத்யகுமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திமுக உறுப்பினரான எனது தாத்தா சுந்தரராம ரெட்டியார், முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். விவசாயிகள் சங்க தலைவராகவும் இருந்தார்.
கடந்த 1967-ம் ஆண்டு திமுக முதன்முறையாக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தபோது, முதல்வராக இருந்த அண்ணாதுரையும், அதன்பிறகு...
குலசேகரம்: மாயமான நர்சிங் மாணவி காதலனுடன் திருமணம்
குமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் மகள் ஸ்ரீதிவ்யா (19). குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் 2 -ம் ஆண்டு படித்து வருகிறார். பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்தவர் சபீர் (27) அந்த பகுதியில் இறைச்சி வெட்டும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சபீருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஸ்ரீ திவ்யா படித்து வரும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றார்.
அப்போது இருவரும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்...
உன்னங்குளம்: நுண்ணுயிர் குப்பைக் கிடங்கு இடமாற்றம்
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை ஊராட்சிக்குட்பட்ட உன்னங்குளம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கிராமத்தில் ஆற்றங்கரை ஓரமாக மூன்று சாலைகள் சந்திக்கும் புறம்போக்கு நிலத்தில் கிராம திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கழிவு குப்பைகளை தரம் பிரித்து நுண்ணுயிர் உரம் பிரித்தெடுக்கும் வகையில் குப்பைக் கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துவங்கியுள்ளது. இதற்காக அவ்விடத்தை சுற்றி கம்பிகள் அமைத்து மேற்கூரைகள் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில், நேற்று (18-ம் தேதி) உன்னங்குளம் கிராம மக்கள் குப்பைக் கிடங்கு அமைக்க...
தேங்காபட்டணம்: ராட்சத கடல் அலை சீற்றம் காரணமாக பாலம் சேதம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கடலோர கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதில் குறிப்பாக தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு உட்பட்ட இரையுமன்துறை பகுதியில் கடலின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த அலை தடுப்பூச்சுவர் மற்றும் துறைமுக நுழைவு பகுதி போன்றவை கடலில் அடித்து செல்லப்பட்டு துறைமுக பாதையில் கடும் சேதம் ஏற்பட்டது. தற்போது சுமார் 224 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த பணிகள் அனைத்தும் அலையால் சேதமடைந்து, பெரிய பாறாங்கற்கள் மற்றும் கோர் லாக் கட்டைகள் அனைத்தும் கடலில்...














