Home 2024
Yearly Archives: 2024
பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 3 பேர் பரிதாப பலி
உத்திரப் பிரதேச மாநிலம் சித்தார்த்தநகர் மாவட்டம் அருகே உள்ள சர்காவா பாலத்தில் நேற்று மாலை சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த பேருந்தில், 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 22 பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா, பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயம் தொடக்கம்: முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கருத்து
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 15, 16 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் அண்ணனும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், இந்திய நிருபர்களுக்கு இஸ்லாமாபாத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவரது வருகை நல்ல தொடக்கம் ஆகும். இங்கிருந்தே இரு நாடுகளும் முன்னேறி செல்ல வேண்டும்....
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் வெளிநாட்டு தீவிரவாதி; மோசடி செய்து குடியுரிமை பெற்றுவிட்டார்: கனடா எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு
‘‘கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார், வெளிநாட்டு தீவிரவாதி. போலி ஆவணங்கள் மூலம் அவர் எப்படியோ கனடா குடியுரிமை பெற்றுள்ளார்’’ என்று எதிர்க்கட்சித் தலைவர் மேக்சிம் பெர்னியர் குற்றம் சாட்டியுள்ளார்.
கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். அத்துடன் கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி, கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் உட்பட 6 அதிகாரிகளை வெளியேற்றினார். இந்தக் குற்றச்சாட்டுகளை...
நில முறைகேடு வழக்கு: சித்தராமையாவின் மைத்துனர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு விவகாரத்தில் அவரது மைத்துனரின் வீடு, மைசூரு நகர மேம்பாட்டு கழக அலுவலகம் ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக, மைசூரு மாநகர மேம்பாட்டு கழகம் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட,மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சித்தராமையா மீது நிலமுறைகேடு வழக்கு தொடரப்பட்டது. அமலாக்கத்துறையும், லோக்ஆயுக்தா போலீஸாரும் இவ்வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து, சித்தராமையாவின் மனைவி...
ஆம் ஆத்மி மூத்த தலைவர் சத்யேந்திர ஜெயினுக்கு 2 ஆண்டுக்குப் பின் ஜாமீன்!
அமலாக்கத் துறை தொடர்ந்த பணமோசடி வழக்கில் 18 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லியின் முன்னாள் அமைச்சருமான சத்யேந்திர ஜெயினுக்கு டெல்லி நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின் தாமதம் மற்றும் நீண்ட நாட்கள் சிறைவாசம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பின்போது சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே, "விசாரணையில் தாமதம், 18 மாதங்கள் நீண்ட சிறைவாசம் மற்றும் வழக்கு விசாரணை தொடங்க நீண்ட நாட்களாகும் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு,...
பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் அமல்படுத்த வேண்டும்: ஒய்.எஸ். ஷர்மிளா வலியுறுத்தல்
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா நேற்று விஜயவாடா பேருந்து நிலையத்தில் இருந்து தெனாலி வரை அரசு பஸ்ஸில் டிக்கெட் எடுத்து சக பெண் பயணிகளுடன் பயணம் செய்தார்.
ஒய்.எஸ். ஷர்மிளாஅப்போது அவர் பேசியதாவது: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பதவியேற்று 5 மாதங்கள் ஆகின்றன. ஆனால், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை அமல்படுத்தவில்லை. அவர் அளித்த சூப்பர் சிக்ஸ் தேர்தல் வாக்குறுதி என்னவானது? அவர் உடனடியாக அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
இதிலும் ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் இலவச...
பாக். ஆதரவு கோஷம்; தேசிய கொடியை வணங்கி வாழ்த்து சொல்ல வேண்டும்: குற்றவாளிக்கு ம.பி. நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட குற்றத்துக்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து மத்திய பிரதேசம் போபால் நகரின் மிஸ்ரோத் காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டவர் ஃபைசல் என்கிற ஃபைசான். இதுதவிர இவர் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட 14 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்மந்தப்பட்ட நபர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி டி.கே.பாலிவால் கூறியதாவது: மனுதாரர் அவர் பிறந்து வளர்ந்த நாட்டுக்கு எதிராக பொதுவில் கோஷம் எழுப்பியதாக தெரியவந்துள்ளது....
வேகமான பொருளாதார வளர்ச்சி; கார்பன் வாயு வெளியேற்றம் இந்தியாவில் அதிகரிக்கும்: மூடிஸ் ஆய்வறிக்கையில் தகவல்
“இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிற நிலையில், கார்பனை மையப் படுத்திய தயாரிப்புகளின் தேவை அதிகரித்து வருகிறது” என்று சர்வதேச நிதி ஆய்வு நிறுவனமான மூடீஸ் தெரிவித்துள்ளது.
இந்தியா 2070-ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்யமாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் பகுதியாக 2030-க்குள் குறிப்பிட்ட அளவில் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறது.
ஆனால், இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவை இந்த இலக்கை அடைவதற்கு சவாலாக இருக்கும் என்று மூடீஸ் அறிக்கை வழியே தெரியவந்துள்ளது....
மழைக்கால மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு நோய் தொற்றுகளை தடுக்கும் மருந்து: பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
மழைக்கால மீட்பு பணிகளில் பணியாற்றியவர்களுக்கு நோய்த் தொற்றுகளை தடுக்கும் வகையில் தடுப்பு மருந்துகளை வழங்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:
மழைக்கு பிந்தைய பாதிப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கையை வெளியிட்ட உடனேயே, அதற்கான முன்னேற்பாடுகளை மேற் கொள்ளுமாறு சுகாதாரத் துறைஅதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மழைக்குப் பிந்தைய பாதிப்புகளைத் தடுப்பதற்கான செயல் திட்டத்தை பொதுசுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.
நோய் தொற்றுகளையும், குறிப்பாக, எலிக் காய்ச்சலையும்...
விபத்துகளுக்கு கவனக்குறைவே காரணம் எனும் நிலையில் பணி நேரத்தை குறைக்க கோரி சென்ட்ரலில் ரயில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நேரத்தைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார், தென்மண்டல காப்பீட்டு தொழிலாளர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஆனந்த், அகில இந்திய லோகோ ரன்னிங் ஊழியர் சங்க மத்திய அமைப்பு செயலாளர் வி.பாலச்சந்திரன் உள்ளிட்டோர் பேசியதாவது: சமீபத்தில் பல ரயில் விபத்துக்களுக்கு ரயில் ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமாகக் கூறப்படுகிறது.அதேசமயம் தொடர் இரவுப் பணிகள், போதுமான ஓய்வின்மை, நீண்ட...














