Home 2024
Yearly Archives: 2024
நாடாளுமன்ற கூட்டு குழு தலைவருக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மிரட்டல்: சபாநாயகரிடம் பாஜக எம்.பி. புகார்
நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் மற்றும் சாட்சியம் அளிக்க வந்த கர்நாடகா சிறுபான்மையினர் ஆணைய முன்னாள் தலைவர் அன்வர் ஆகியோரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மிரட்டினர் என பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா புகார் அளித்துள்ளார்.
வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து ஆலோசிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பல தரப்பினரின் கருத்துக்களை கேட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 14-ம் தேதி, நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. இங்கு நடைபெற்ற சம்பவம் குறித்து மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லாவுக்கு பாஜக எம்.பி....
இந்தி மொழிக்கு மட்டும் விழா எடுப்பது நாட்டின் பன்முக தன்மையை பாதிக்கும்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்திக்கு மட்டும் விழா எடுத்தால் அது நாட்டின் பன்முகத்தன்மையை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள்:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: நாடு முழுவதும் இந்திமாதம் என்ற ஒன்றை மத்திய அரசுகொண்டாடி வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை தொலைக் காட்சி நிலையத்தில் இந்தி மாத கொண்டாட்டங்களில் நிறைவு விழாநடைபெற்றிருக்கிறது. இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிக்கும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை மத்திய அரசு முன்னெடுப்பது...
1,000 டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கவுன்ட்டர்: ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்
தினசரி ரூ.2 லட்சத்துக்கு மேல் மது விற்பனை நடக்கும் ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கவுன்ட்டர்களை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு 60 சதவீதம் அளவுக்கு குவாட்டர் மதுபாட்டில்கள் விற்பனையும், 25 சதவீதம் ஆஃப், 15 சதவீதம் அளவுக்கு ஃபுல் மதுபாட்டில்கள் விற்பனையும் நடந்து வருகிறது. கூட்டம் அதிகமாக வரும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் 2 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும், இடப்பற்றாக்குறை, பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, அனைத்து கடைகளிலும் இதை...
ரவுடிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது சட்ட நடவடிக்கை: டிஜிபி
ரவுடிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டால் வழக்கறிஞர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரித்துள்ளார்.
தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியான சங்கர் ஜிவால், அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், ஐ.ஜிக்கள், டி.ஐ.ஜிக்கள் மற்றும் எஸ்.பி.க்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அண்மையில் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 20 வரை தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 84 ரவுடிகளை 396 வழக்கறிஞர்கள், 1987 முறை சந்தித்துள்ளனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 15 ரவுடிகளை மட்டும் 546...
நாகர்கோவிலில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெள்ளமடம் பகுதியை சேர்ந்தவர் எட்வின் ராஜ் (வயது 41), காவலாளி. எட்வின் ராஜிடம் இடலாக்குடி பகுதியை சேர்ந்த தொழிலாளியான கனகசபாபதி (52) அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து எட்வின்ராஜ் தனது நண்பர் ஜெகனுடன் சென்று கனகசபாபதியிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது அவர்களை கனகசபாபதி தாக்கியது தெரிகிறது. இதுகுறித்து எட்வின்ராஜ் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் கனகசபாபதி மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி...
திருவிதாங்கோடு: மகான் மாலிக் முகமது சாகிப் ஒலியுல்லாஹ் விழா
குமரி மாவட்டம் திருவிதாங்கோடு மகான் மாலிக் முஹம்மது சாகிப் ஒலியுல்லாஹ் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் நேற்று (17-ம் தேதி) இரவு தொடங்கியது. வருகிற 25-ம் தேதி வரை தினசரி இரவு மனிதர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி பயான் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நேற்று மாலை அழகிய மண்டபம் புகாரி பள்ளிவாசலில் இருந்து மக்ரிப் தொழுகை முடிந்ததும், 6. 30 மணி அளவில் கொடி. ஊர்வலம் தொடங்கி திருவிதாங்கோடு மகான் மாலிக் முகமது சாகிப் ஒலியுல்லா பள்ளிவாசல் வந்து சேர்ந்தது.
பின்னர் பள்ளி வளாகத்தில் கொடியை ஏற்றி வைக்கப்பட்டு...
குமரி: விஜய்வசந்த் எம்பி கடற்கரை பகுதி மக்களிடம் ஆறுதல்
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை அழிக்கால், பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடல் நீர் குடியிருப்புகளை சூழ்ந்து கொண்டது. குடியிருப்புகளை சூழ்ந்த கடல் நீர் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்ததால் உடமைகள் சேதமடைந்ததோடு பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளச்சல் தீயணைப்பு வீரர்கள் குழந்தைகள் உட்பட 70-க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டு அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்நிலையில் தகவல் அறிந்த குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்...
மார்த்தாண்டம்: மேம்பாலத்தில் கனரக வாகனங்களுக்கு நிரந்தர தடை
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் நேற்று (17-ம் தேதி) விளவங்கோடு தொகுதியில் 24 மணி நேர ஆய்வு பணிகள் ஈடுபட்டார். தொடர்ந்து மார்த்தாண்டம் பஸ் நிலையம், மார்த்தாண்டம் மேம்பாலம் போன்ற பகுதிகளை பார்வையிட்டார். அவருடன் நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் மற்றும் ஊழியர்கள கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது: - களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை தற்போது தமிழக நெடுஞ்சாலை துறையிடம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை 14. 6 கோடி ரூபாய் செலவில்...
இரையுமன்துறை: துறைமுக பகுதியை பார்வையிட்ட கலெக்டர்
குமரி மாவட்டம் இரையுமன்துறை, தேங்காய்பட்டணம் கடற்கரை பகுதிகளில் 3- வது நாளாக இன்றும் (18-ம் தேதி) கடல் ஆக்ரோஷமாக காணப்பட்டு ராட்சத அலைகள் வான் உயரத்திற்கு எழும்பி கடல்நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பலத்த சேதங்களை ஏற்படுத்திய நிலையில் உள்ளது. இதில் தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் இரையுமன்துறை முகத்துவார பகுதியும் ராட்சத அலையில் சிக்கி பலத்த சேதமடைந்து உடைந்தது.
இதனால் தற்போது 253 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வந்த மறுசீரமைப்பு பணிகள் முழுவதம் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு, மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்த...
புதுக்கடை: 700 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகள் வழியாக படகுகளுக்கு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் கேரளாவுக்கு கடத்தபபடுவதாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்த நிலையில் நேற்று (17-ம் தேதி) மாலை இனயம் அருகேயுள்ள ஹெலன் நகர் பகுதியில் மானிய விலை மண்ணெண்ணெய் கடத்தப்படுவதாக புதுக்கடை போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சென்று விசாரித்தனர். அப்போது ஒரு பொலீரோ வாகனத்தை கண்டு நிறுத்தினர். போலீசை கண்டதும் வாகனத்தில் இருந்தவர்கள் இறங்கி...














