Home 2024
Yearly Archives: 2024
பேட்டிங் வரிசை கோலியால் மாறியதா? – சாதாரண ‘டிஃபன்ஸ்’ மறந்த இந்திய அணி!
பெங்களூருவில் நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளில் நேற்று தொடங்கிய போது ‘கம்பீர்’, ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்களும், மோர்னி மோர்கெல் உள்ளிட்ட பெருந்தலைகள் இருந்தும் பிட்ச் எப்படி என்பதைப் புரிந்து கொள்ளாமல் கோட்டை விட்டனர்.
மேலும் 3-ம் நிலையில் விராட் கோலி தானே இறங்கியதாகவும் கூறப்படுகிறது. இதோடு சாதாரண தடுப்பாட்ட உத்தியையும் அடிப்படை டெக்னிக்கும் இல்லாமல் ஒரு மட்டரகமான டி20 அணி ஆடியது போல் ஆடி 46 ரன்களுக்குச் சுருண்டு புதிய உள்நாட்டு எதிர்மறைச் சாதனையைப்...
புரோ கபடி லீக் இன்று தொடக்கம்
ஹைதராபாத்: புரோ கபடி லீக் 11-வது சீசனின் முதற்கட்ட போட்டிகள் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபவுலி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரில் புனேரி பல்தான், முன்னாள் சாம்பியன்கள் பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யுபி யோதாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், தெலுகு டைட்டன்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.
2-வது கட்ட போட்டிகள் நொய்டாவிலும், 3-வது கட்ட போட்டிகள் புனேவிலும் நடைபெறுகின்றன. டிசம்பர் 24-ம் தேதி வரை...
2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணிக்கு 297 ரன்கள் இலக்கு
முல்தான்: 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 297 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி.
முல்தானில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 366 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 53 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 114 ரன்கள் விளாசினார். ஸாக் கிராவ்லி 27, ஆலி போப் 29, ஜோ ரூட் 34, ஹாரி புரூக் 9,...
அரசியலில் எம்ஜிஆர்தான் எனக்கு ரோல் மாடல்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து
அமராவதி: அரசியலில் தனக்கு எம்ஜிஆர்தான் ரோல் மாடல் என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் அதிமுகவின் 53-வதுஆண்டு விழாவுக்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நேற்று சமூக வலைதளம் மூலம்அதிமுகவின் 53-வது ஆண்டு விழாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில் அவர், “எம்ஜி. ராமசந்திரன் எனும் எம்ஜிஆர் அதிமுக எனும் கட்சியை நிறுவி,தமிழக அரசியலில் தோல்வியையே சந்திக்காத வரலாற்றை படைத்தவர். பல ஏழை, எளியவர்களுக்கு வாழ்வளித்தவர். அவரது ஆட்சியில்...
ஏழுமலையான் கோயிலுக்கு பல வளர்ச்சிப் பணிகள் செய்த ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் 495-வது நினைவு தினம் அனுசரிப்பு
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள், விஜயநகர பேரரசர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், காக்கதீயர்கள், சாளுக்கியர்கள், சுல்தான்கள்,ஆற்காடு நவாபுகள், மஹந்துக்கள்என பலர் ஆட்சியிலும் எவ்வித சிதிலமும் அடையாமல் பாதுகாக்கப்பட்டது.
இதில், ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி கோட்டையிலும் வாசம்செய்துள்ளார். அவர் விஜயநகரத்தில் இருந்து சந்திரகிரிக்கு வரும் போதெல்லாம், திருமலைக்கு தனது பட்டத்து ராணிகளான திருமல தேவி மற்றும் சின்னமாதேவி ஆகியோருடன் திருமலைக்கு பல்வேறு காணிக்கைகளுடன் நடந்து சென்று சுவாமியை தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இவ்வாறு ஸ்ரீ...
சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக அருண் குமார் நம்பூதிரி தேர்வு
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயில்மேல்சாந்தியாக (தலைமை அர்ச்சகர்) அருண் குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை 1-ம் தேதி மண்டல பூஜைகள் தொடங்கி நடைபெறும். இதற்கு முன்னதாக, ஐயப்பன் கோயில் மற்றும் மாளிகைப்புரம் மஞ்சமாதா கோயிலுக்கு மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) தேர்வு செய்யப்படுவது வழக்கம். மேல்சாந்தி பணிக்கு ஏராளமானோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பலகட்ட தேர்வுக்கு பிறகு அதில் இருந்து ஐயப்பன் சன்னதிக்கு 24 பேரும், மாளிகைப்புரம் சன்னதிக்கு 15 பேரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன்...
பிஹாரில் கள்ள சாராயம் குடித்த 25 பேர் உயிரிழப்பு: நிதிஷ் குமார் அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்
பாட்னா: பிஹாரில் கள்ளச் சாராயம் குடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 25 ஆக உயர்ந்தது. இதற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்தார்.
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். பிஹார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனாலும், அடிக்கடி கள்ளச்சாராயம் குடித்துஉயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கிறது. இந்நிலையில் சிவான் மாவட்டம், பகவான்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மதர் கிராமத்தை சேர்ந்த பலர் கடந்த செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை குடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து வீட்டுக்கு சென்ற அவர்களுக்கு...
காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி வழக்கு: விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்டது. அப்போது ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையுடன்கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டன.
இந்த சூழலில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி ஜாகுர் அகமது பட், குர்ஷாத் அகமது மாலிக் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தனர்....
கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாகக் கூறி கேரள காங்கிரஸ் நிர்வாகி பி.சரின் நீக்கம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் கேரள காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ராகுல் மம்கூடதில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு மாநில காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.சரின் எதிர்ப்பு தெரிவித்தார்.
பின்னர் சரின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கேரள மாநில காங்கிரஸ் பிரிவு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் உட்பட 3 பேரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கட்சி பிரமுகர்கள் தங்கள் கருத்துகளை கூற அவர்கள் வாய்ப்பு...
கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 13-வது நாளை எட்டியது
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதுநிலை பெண்பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் போராட்டம்13-வது நாளை எட்டியது.
உயிரிழந்த மருத்துவருக்கு நீதிகிடைக்க வேண்டும், மாநில சுகாதார செயலாளரை மாற்ற வேண்டும், மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்,அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் 50 மூத்த மருத்துவர்கள் கடந்த...














