Home 2024
Yearly Archives: 2024
காந்தியடிகள் 200 நாட்கள் தங்கிய டெல்லி வால்மீகி கோயிலில் ராகுல் தரிசனம்
புதுடெல்லி: ராமாயணம் இதிகாசத்தை இயற்றிய மகரிஷி வால்மீகியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள வால்மீகி கோயிலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சென்றார்.
அங்குள்ள வால்மீகி சிலையை வழிபட்டவர் பின்னர் அதே கோயில் வளாகத்துக்குள் இருக்கக்கூடிய அறைகளைப் பார்வையிட்டார். அதிலும் காந்தியடிகள் 200 நாட்களுக்கு மேல் தங்கிய ஓர் அறைஅந்த கோயிலில் உள்ளது. அங்குகாந்தியடிகளின் பலவிதமானபுகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை ராகுல் காந்தி நேற்று பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.
இது குறித்து ராகுல் காந்தி தனது முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவு: இன்று காலை...
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி இல்லை?
புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என எதிர்பார்க்கப்படுகிறது. இண்டியா கூட்டணியை பலம் பெறச் செய்வதற்காக ஆம் ஆத்மி இம்முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி உள்ளது. சமீபத்திய ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் இக்கட்சி போட்டியிட்டது. ஹரியானாவில் முற்றிலும் தோல்வி அடைந்தாலும் ஜம்முவில் ஒரு தொகுதி கிடைத்தது. ஜம்முவின் தோடா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் மெஹ்ராஜ் மல்லீக் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கெனவே குஜராத் மற்றும் கோவாவில் ஆம் ஆத்மிக்கு...
பாலி மொழிக்கான செம்மொழி அந்தஸ்து புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை போற்றும்: பிரதமர் மோடி பெருமிதம்
புதுடெல்லி: பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துரைக்க உதவும் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புத்தரின் போதனைகளை போற்றும் சர்வதேச அபிதம்மம் திவஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இதுகுறித்து கூறியதாவது: தொன்மையான பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது, புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துக்காட்ட உதவும். அதேநேரம், சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை போற்றாமல் புறக்கணிப்பு செய்ததை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய...
நிவாரண முகாம்கள், அம்மா உணவகங்களில் 15.88 லட்சம் பேருக்கு உணவு வழங்கல்
சென்னை: பெருமழை காரணமாக அக் 16,17 ஆகிய இரு தினங்களிலும் நிவாரண முகாம்களில் 14.60 லட்சம் பேருக்கும், அம்மா உணவகங்கள் மூலம் 1.28 லட்சம் பேருக்கும் உணவுவழங்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகரை அச்சுறுத்திய சிவப்பு எச்சரிக்கை மழை அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநகரிலுள்ள அம்மா உணவகங்களில் 16, 17 ஆகிய இரண்டு நாட்களில் கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மழை காரணமாக வேலைக்குச் செல்லாத ஏழைகளுக்கு இந்த அறிவிப்பு பெரிதும் உதவியாக...
அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக பேரவை தலைவர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும்? – உயர் நீதிமன்றம்
சென்னை: அதிமுக எம்எல்ஏ-க்கள் 40 பேர் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக பேரவைத் தலைவர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என்பது குறித்து விளக்கமளிக்க வழக்கு தொடர்ந்துள்ள அதிமுக நிர்வாகிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்று பேசிய பேரவைத் தலைவர் மு.அப்பாவு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், ஆனால், அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.
பேரவைத் தலைவரின் இந்த...
நாகர்கோவிலில் இருந்து கோவை சென்ற ரயிலில் படுக்கை பலகை விழுந்து சிறுவன் படுகாயம்
ரயிலில் படுக்கை பலகை கொக்கி அறுந்து விழுந்ததில் காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன்.
மதுரை: நாகர்கோவில்-கோவை ரயிலில் இரும்பு கொக்கிகள் அறுந்ததால் படுக்கை பலகை விழுந்து, சிறுவன்பலத்த காயமடைந்தார்.
கோவை அண்ணா ஆசிரியர் காலனியைச் சேர்ந்த மேத்யூ மனைவி புவிதா(29). அங்குள்ள வங்கியில் மேலாளராகப் பணிபுரிகிறார். இரு தினங்களுக்கு முன்புசொந்த ஊரான தூத்துக்குடிக்கு வந்து விட்டு, பின்னர் தனது 4 வயது மகன் ஜாய்சன் தாமஸுடன் கோவை செல்வதற்காக நேற்று முன்தினம் வாஞ்சி மணியாச்சி நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.
நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்-7...
மழை வெள்ளத்தை திமுக அரசு அறிவியல் ரீதியாக அணுகவில்லை: முன்னாள் ஆளுநர் தமிழிசை குற்றச்சாட்டு
சென்னை: மழை வெள்ளத்தை திமுக அரசு அறிவியல் ரீதியாக அணுகவில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். சென்னை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ ஆலோசனை, மதிய உணவு உள்ளிட்டவற்றை முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 10 செமீ மழையிலேயே தெருக்கள் நிரம்பத் தொடங்கிவிட்டன. மேம்பாலத்தில் கார்களை நிறுத்த அவசியமில்லாத வகையில் மேம்படுத்த வேண்டியவை குறித்து திட்டமிடப்படவில்லை. துணை முதல்வர் சொல்வது போல் நீர் வடிந்திருப்பதே வெள்ளை அறிக்கை என்றால், நீர்...
கல்வி, சுகாதார துறைக்கு நிதி வெகுவாக குறைப்பு: தமிழக அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு
திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
நடப்பாண்டில் கல்விக்கு ரூ.44 ஆயிரம் கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ.20,198 கோடி நிதிமட்டுமே தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. திமுக ஒதுக்குவதாக கூறிய தொகையில் 3-ல் ஒரு பங்குக்கும் இது குறைவானது.
அதிமுக ஆட்சியில் கல்விக்கு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1.65 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் 1.39 சதவீதம் நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதேபோல, சுகாதாரத் துறைக்கு அதிமுக ஆட்சியில் 0.76 சதவீதம் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 0.64...
நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்கி அரசாணை பிறப்பிப்பதில் தாமதம் ஏன்? – போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
மதுரை: நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்கி அரசாணை பிறப்பிப்பதில் தாமதம் ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிறுவனம், கூடுதல் வட்டி,நிலம் தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் பல்லாயிரம் கோடி முதலீடு வசூலித்து மோசடி செய்தது. இது தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி,நிறுவன இயக்குநர்கள் கமலக்கண்ணன், கபில், வீரசக்தி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரைக் கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சார்லஸ், இளையராஜா ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி ஜெயின்குமார் உள்ளிட்டோர்...
தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை மீறியதாக வழக்கு : சுற்றுலாத்துறை செயலர் ஆஜராக உத்தரவு
சென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை மீறியதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், சுற்றுலாத்துறை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாக கூறி சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது....














