Google search engine
Home 2024

Yearly Archives: 2024

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி – நெல்லூர் இடையே கரையை கடந்தது: இன்று 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி- நெல்லூர் இடையே நேற்று அதிகாலை கரையைக் கடந்தது. தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வட தமிழகம் - தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியில் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே...

பொது போக்குவரத்து பயணச்சீட்டு பெறும் வசதி; மாநகர பேருந்துகளில் விரைவில் அறிமுகம்

சென்னை: மாநகரப் பேருந்துகளில் பொது போக்குவரத்து பயணச்சீட்டு பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை செயலர் க.பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில் ஆகிய அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் பயணிக்க என்சிஎம்சி (நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு) எனப்படும் ஒரே பயண அட்டையை பயன்படுத்தும் வசதியை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக எஸ்பிஐ வங்கி உதவியுடன் மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கும் முறை கடந்த ஏப்ரல்...

அனுமதி மறுக்க ஆளுநருக்கு தார்மீக உரிமை இல்லை: ஆயுள் கைதியின் முன்விடுதலை மனுவை அரசு மீண்டும் பரிசீலிக்க கோர்ட் உத்தரவு

சென்னை: ஆயுள் கைதியை முன்கூட் டியே விடுதலை செய்ய ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், அவரது மனுவைஅரசு மீண்டும் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு இடைக்கால ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆளுநருக்கு எந்ததார்மீக உரிமையும் இல்லை.அமைச்சரவையின் முடிவுக ளுக்கு அவர் கட்டுப்பட்டவர் என்றும் நீதிபதிகள் தெரிவித் துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த வீரபாரதி என்பவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட் டுள்ளார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில்இவர் தாக்கல் செய்த மனு வில் கூறியிருந்ததாவது: ஜாமீன் கோரி மனு:...

உயர் அதிகாரிகளின் சுணக்கத்தால் பதவி உயர்வின்றி ஓய்வுபெறும் காவல் அதிகாரிகள்

சென்னை: உயர் அதிகாரிகளின் சுணக்கத்தால், பதவி உயர்வின்றி டிஎஸ்பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் அடுத்தடுத்து ஓய்வு பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும், இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் 40-க்கும்மேற்பட்ட கூடுதல் எஸ்.பி பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், போதிய தகுதி இருந்தும் அந்த இடங்களில் பணியமர்த்தப்படாமல் டிஎஸ்பி எனப்படும் துணை கண்காணிப்பாளர்கள் (1996-ல் நேரடிஎஸ்.ஐ.யாக தேர்வு செய்யப்பட்ட வர்கள்) ஓய்வு பெறுகின்றனர். இந்தப் பதவி உயர்வு வழங்கப்படாததால் அதன்கீழ் தமிழகம் முழுவதும் உள்ள இன்ஸ்பெக்டர்கள் (1997-ம் ஆண்டு நேரடி எஸ்.ஐ), டி.எஸ்.பி.யாகப் பதவி உயர்வு பெற முடியாமல், அவர்களும்...

அமெரிக்காவில் ஏலம் விடப்பட உள்ள போக சக்தி அம்மன் சிலையை மீட்க வேண்டும்: பொன் மாணிக்கவேல் வலியுறுத்தல்

கும்பகோணம்: அமெரிக்காவில் ஏலம் விடப்படும் நிலையில் உள்ள போக சக்தி அம்மன் சிலையை மீட்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஓய்வுபெற்ற ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கோவில் தேவராயனபேட்டையில் உள்ள சுகுந்த குந்தளாம்பிகை அம்மன் உடனாய மச்சபுரீஸ்வரர் கோயிலுக்கு நேற்று வந்திருந்த ஓய்வுபெற்ற ஐ.ஜி.பொன் மாணிக்கவேல், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தக் கோயிலின் இறைவியான போக சக்தி அம்மனின் பஞ்சலோக சிலை 1974-ம் ஆண்டு காணாமல்போனது. தற்போது அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் மேன்ஹாட்டனில் உள்ள ஏலக் கூடத்தில் உள்ள...

குமரி: அரசு உதவிபெறும் பள்ளிகளின் உரிமை மீட்பு குழு ஆலோசனை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத அரசு உதவிபெறும் பள்ளிகளின் உரிமை மீட்பு குழு கூட்டம் நேற்று (அக்.,16) நடைபெற்றது. அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதை போல 7. 5 % உயர் கல்வி இட ஒதுக்கீட்டை உதவி பெறும் பள்ளிகளுக்கு முழுமையாக விரிவுபடுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைப்பெற்றது.

நாகர்கோவிலில் தண்டவாளத்தை கடந்து செல்லும் பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் செல்கின்றன. இந்த ரயில்களில் பயணம் செய்ய இருக்கும் பயணிகள் நடை மேம்பாலம் வழியாக செல்வதை தவிர்த்து தண்டவாளத்தில் இறங்கி அடுத்த நடை மேடைக்கு செல்லும் நிலை இருந்து வருகிறது. இது ஆபத்தானது என்பதால் அவர்கள் நடை மேம்பாலம் வழியாக நடந்து செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குளச்சல்: கடல் சீற்றத்தால் சிறுவர் பூங்காக்கள் சேதம்

குமரி மாவட்டத்தில் நேற்று (அக்.,16) முதல் தேங்காபட்டணம், குளச்சல், குறும்பனை தொட்டில்பாடு பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சச அலைகள் எழுந்தன. இதில் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்திய பலரின் விசைப்படகுகள் சேதமடைந்தது. இதுபோல் தேங்காபட்டணம் அருகே உள்ள ஹெலன் காலனி பகுதியில் உள்ள குருசடி அருகில் சிறுவர்களுக்கான பூங்கா ஒன்று பொது மக்களால்  உருவாக்கப்பட்டு இருந்தது. இதில் தினமும் அந்தப் பகுதியில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் ஏராளம் பேர் சென்று பொழுதை கழிப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று (அக்.,16) ஏற்பட்ட...

படந்தாலுமூடு: நடைப்பெற்ற பாரம்பரிய வர்ம பயிற்சி

குமரி மாவட்டம் படந்தாலுமூட்டில் சிவராமன் ஆசான் நினைவு வர்ம பயிற்சி மையம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் தனித்தனி தலைப்புகளில் வர்ம பயிற்சி நடந்து வருகிறது. 2024-ம் ஆண்டில் அக்டோபர் மாதத்திற்கான வர்ம பயிற்ச்சியில் வாதம், பித்தம், கபம் உள்ளிட்ட மூன்று விதமான நோய்களை அடிப்படையாக கொண்டு நோயாழிகளுக்கு வர்ம மருத்துவம் செய்ய கூடிய ரகசிய முறைகள், கற்பிக்கப்பட்டது. இதில் களரி ஆசான்கள், சித்த, ஆயூர்வேத, மருத்துவ குருகுல மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.     படந்தாலுமூடு அனுக்கிரக சித்த...

குமரி மாவட்டம் திரும்பி வந்த நவராத்தி விக்கிரகங்கள்

குமரி மாவட்டத்தில்  திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்து நவராத்திரி பூஜைக்காக குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து முன் உதித்த நங்கை அம்மன், குமாரகோவிலில் இருந்து முருகன், பத்மனாபபுரத்தில் இருந்து சரஸ்வதி தேவி உள்ளிட்ட சுவாமி விக்கிரகங்கள் கொண்டு செல்வது வழக்கம். இவ்வாண்டு நவராத்திரி பூஜைக்கு எழுந்தருளிச் சென்ற சுவாமி விக்கிரகங்கள் பூஜை முடிந்து நேற்று முன்தினம் அங்கிருந்து திரும்பி வந்து நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோயல் வந்து இரவு தங்கியது. நேற்று (அக்.,16) காலை அங்கிருந்து திரும்பி உதியன் குளம்கரை, பாறசாலை வழியாக தமிழக -கேரளா...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...