Google search engine
Home 2024

Yearly Archives: 2024

தேங்காபட்டணம்: மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் கரை ஒதுக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இன்று குமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளது.   இதையடுத்து தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இன்று (அக்.,17) படகுகள் கரையொதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் நேற்று (அக்.,16) அதிகாரிகளின் அறிவுரையை மீறி சிறு படகுகளில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகம் முகத்துவாரத்தில் உள்ளே நுழைய முடியாமல் தவித்தனர்.இதையடுத்து  சிறு படகுகளிலும் இன்று (அக்.,17) மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிள்ளியூர்: அங்கன்வாடிக்கு அடிக்கல் நாட்டிய எம்.எல்.ஏ

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிள்ளியூர் பேரூராட்சி, வட்டக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள  அங்கன்வாடி  மையம் 113 -   வாடகை கட்டிடத்தில்   செயல்பட்டு வருகிறது. இதனால்  இந்த  அங்கன்வாடி  மையத்திற்கு  புதிய கட்டிடம்  கட்டிதர  வேண்டும்  என்று  இப்பகுதி காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள்  மற்றும்  அங்கன்வாடி  பணியாளர்  ஆகியோர்  கிள்ளியூர்  சட்டமன்ற  உறுப்பினர்  ராஜேஷ் குமார் -டம்  கோரிக்கை  விடுத்தனர். இதையடுத்து அங்கன்வாடி கட்டிடம் அமைக்க சட்டமன்ற  உறுப்பினர்  தொகுதி மேம்பாட்டு திட்ட  நிதியில்  இருந்து  ரூ. 14. 50 - லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்....

ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய்?

நடிகர் விஜய்யின் 69-வது படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதிரடியான ஆக் ஷன் கதையை கொண்ட இந்தப் படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அரசியலில் நடிகர் விஜய் முழு வீச்சில் ஈடுபட இருப்பதால் இது அவரது கடைசிப் படம் என்று தெரிகிறது. இந்தப் படத்தில் முக்கியமான சமூகப் பிரச்சினை ஒன்றை...

ஜிம்மில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் காயம்

தமிழில் ‘தடையற தாக்க', ‘என்னமோ ஏதோ', ‘ஸ்பைடர்', 'தீரன் அதிகாரம் ஒன்று', சமீபத்தில் வெளியான ‘இந்தியன் 2’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது அஜய் தேவ்கன் மற்றும் ஆர். மாதவனுடன் ‘தே தே பியார் தே 2’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஜிம்மில் ​​80 கிலோ எடையை தூக்கும் போது பலத்த காயம் அடைந்தள்ளார். வழக்கமாகக் குனிந்து அதிகமான எடையைத் தூக்கும்போது இடுப்பு பெல்ட் அணிவது வழக்கம். ஆனால், ரகுல்...

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியுடன் சென்னையின் எஃப்சி இன்று பலப்பரீட்சை

குவாஹாட்டி: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2024-25 சீசன் 11 நாட்கள் ஓய்வுக்கு பிறகு தற்போது மீண்டும் திரும்ப உள்ளது. இதன்படி இன்று (17-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் உள்ள இந்திரா காந்தி தடகள மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே தங்களது கடைசி ஆட்டங்களை டிரா செய்திருந்தன. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவாவுடன் மோதியிருந்தது. இந்த ஆட்டம் 3-3 என்ற...

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணி 366 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

முல்தான்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 366 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முல்தானில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷபிக் 7, கேப்டன் ஷான் மசூத் 3, சவுத் ஷகீல் 4 ரன்களில் நடையை கட்டினர். அறிமுக வீரரான கம்ரன் குலாம் 118, சைம் அயூப் 77...

மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அரை இறுதியில் இன்று மோதல்

துபாய்: ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி 8-வது முறையாக இறுதிப் போட்டியில் நுழையும் முனைப்பில்...

இந்தியா – நியூஸிலாந்து டெஸ்ட் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து

பெங்களூரு: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டது. டாம் லேதம் தலைமை யிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்த தொடரின் முதல்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. ஒன்றரை...

ஆந்திராவில் 40 பயணிகளை காப்பாற்றி மாரடைப்பால் இறந்த பேருந்து ஓட்டுநர்

குண்டூர்: ஆந்திராவில் நேற்று 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. எனினும் பேருந்தை ஒரு வயலில் இறக்கி பயணிகளின் உயிரை காப்பாற்றி, அவர் மரண மடைந்தார். ஆந்திர மாநிலம், குண்டூர் அடுத்துள்ள பாபட்லா பணிமனையை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சாம்பசிவ ராவ் (48). இவர் வழக்கம்போல் நேற்று காலை ரேபல்ல எனும் ஊரில் இருந்து சீராலா எனும் ஊருக்கு பேருந்தில் பயணிகளுடன் புறப்பட்டார். பேருந்தில் சுமார் 40 பேர் இருந்தனர். இந்நிலையில் வழியில் சாம்பசிவ ராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே...

பாஜக உறுப்பினர் பதிவை புதுப்பித்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: பாஜக கட்சியின் முதல் உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவை நேற்று புதுப்பித்தார். பாஜக கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கி வைத்தார். முதல் நாளிலேயே 47 லட்சம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர். கடந்த செப்டம்பர் 2-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்ற முதல்கட்ட உறுப்பினர் சேர்க்கையில் 6 கோடி பேர் பதிவு செய்து கொண்டனர். உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசத்தில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். குஜராத்தில் 85 லட்சம்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...