Google search engine
Home 2024

Yearly Archives: 2024

பயிர் கழிவுகள் எரிப்பதை ஏன் தடுக்கவில்லை? – ஹரியானா, பஞ்சாபுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டுக்கு அண்டை மாநிலங் களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில் காற்று தர மேலாண்மை ஆணைத்தின் உத்தரவுகள், குறிப்பாக தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் கடைபிடிக்கப்படவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, ஏ.ஜி. மசிக், ஏ.அமானுல்லா ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: பயிர் கழிவுகளை எரிப்பவர்கள் மீது ஹரியானா, பஞ்சாப் அரசுகள் வழக்குப் பதிவு...

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் கொலை மிரட்டல்: நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: மும்பை அந்தேரியில் கடந்த சனிக்கிழமை தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக்சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலைக்கு, சிறையில் இருக்கும் சர்வதேச கிரிமினல் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்றார். பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்லவிருப்பதாக கடந்த 2018-ல் லாரன்ஸ் பிஷ்னோய் அறிவித்தார். சல்மானை கொலைசெய்யும் லாரன்ஸ் கும்பலின்முயற்சி 2 முறை முறியடிக்கப்பட் டுள்ளது. மும்பை பாந்த்ராவில் நடிகர் சல்மான்கான் வசிக்கும்அடுக்கு மாடி குடியிருப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நடிகர் சல்மான் ஏற்கெனவே மத்திய அரசு சார்பில் ஒய் ப்ளஸ் பாதுகாப்பில் உள்ளார். கொல்லப்பட்ட பாபா சித்திக், சல்மான் கானின்...

காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரான உமர் அப்துல்லா நேற்று பதவியேற்றுக் கொண்டார். ஜம்மு-காஷ்மீரில் மொத்த முள்ள 90 தொகுதிகளுக்கு மூன்றுகட்டங்களாக நடைபெற்ற பேரவைதேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டுக் கட்சி42, காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் ஓரிடத்தில் வென்றன. இந்நிலையில், இக்கூட்டணிக்கு 4 சுயேச்சைகளும், ஆம் ஆத்மியும் கட்சி எம்எல்ஏ ஒருவரும் ஆதரவு தெரிவித்ததால் அந்தக் கூட்டணிக்கு பேரவையில் பலம் 54-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவை தேசிய மாநாட்டுக்...

பெங்களூருவில் கன‌மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: வீடுகள், நிறுவனங்களில் வெள்ளம்

0
பெங்களூரு: பெங்களூருவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இரவிலும் பகலிலும் விட்டுவிட்டு பெய்துவரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஒசூர் சாலை, ஹெப்பால் சாலை, மைசூரு சாலை ஆகியவற்றில் கடும் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டது. எனவே அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகினர். ஒயிட் ஃபீல்ட், ஐடிபிஎல், மான்யதா ஆகிய‌ பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளாகத்தில் மழை வெள்ளம் புகுந்தது. அங்கு பணியாற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் காரில் செல்ல முடியாமல், முழங்கால் வரையிலான‌ நீரில் இறங்கி...

ஆந்திராவில் தொடரும் கனமழை: சித்தூர், திருப்பதி, நெல்லூர், கடப்பா மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

திருப்பதி: வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி-நெல்லூர் இடையே இன்று காலை கரையை கடக்க கூடுமென விசாகப்பட்டினம்வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் சித்தூர், திருப்பதி, நெல்லூர் மற்றும் கடப்பாவுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை இலாகாவின் எச்சரிக்கையால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் மட்ட அரசுஅதிகாரிகளுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படியும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி, முகாம்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிடம், மருத்துவவசதிகளை...

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மழைநீர் புகாமல் இருக்க மணல் மூட்டைகளை வாசலில் அடுக்கி வைத்த நிறுவனங்கள்

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நிறுவனங்களுக்குள் மழைநீர் புகாமல் இருக்க வாசலில் மணல்மூட்டைகளை அடுக்கி வைத்தும், சுமார் 2 அடி உயர தடுப்புச் சுவர்எழுப்பியும் தொழில் நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டன. கனமழை பெய்யும்போது, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிப்பது ஒவ்வோர் ஆண்டும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப் போட்டது. தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்களில் மழைநீர் உள்ளேபுகுந்து நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றது. குறிப்பாக குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பைச்...

மின்தடை புகார்களுக்கு தீர்வு காண மின்னகத்தில் கூடுதல் ஊழியர்கள்: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

சென்னை: மின்தடை மற்றும் மின்பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு விரைந்து தீர்வு காண்பதற்காக, மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மின்சாரத் துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மின்துறை அமைச்சர்செந்தில் பாலாஜி, சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டுவரும் ‘மின்னகம்’ சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது: தமிழ்நாடு மின்வாரிய தலைமையகமான சென்னையில், ‘ஷிப்ட்’ ஒன்றுக்கு 65 பேர் வீதம் 3‘ஷிப்டு’களாக மின்னகம் இயங்கி வந்த...

சென்னையில் மழை தொடர்ந்திருந்தால் திமுக அரசின் சாயம் வெளுத்திருக்கும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை: ராயபுரம் ராம்நாயக்கன் தெருவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உணவு வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர்களே மாறி,மாறி பேசி வருகிறார்கள். மழைக் காலத்தில் யாராவது மழைநீர் வடிகால்வாய்பணிகளை மேற்கொள்வார்களா? வேளச்சேரி பாலத்தில், மக்கள் பயந்துபோய் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த ஆட்சி மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததையே இது காட்டுகிறது. அரசைப் பொறுத்தவரை வேலைபார்ப்பது போல காட்டிக் கொள்கிறார்கள். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியிலும், முதல்வரின் கொளத்தூர்...

சென்னையில் மழைநீர் எங்கும் நிற்காததே வெள்ளை அறிக்கை: பழனிசாமிக்கு துணை முதல்வர் உதயநிதி பதில்

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வெள்ளை அறிக்கை கோரியிருந்தார். "தற்போது சென்னையில் மழைநீர் தேங்காமல் உள்ளதே, அதுதான் வெள்ளை அறிக்கை" என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் கடந்த அக்.14-ம் தேதி இரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. அன்று நள்ளிரவு முதலே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையின் பல்வேறுஇடங்களுக்குச் சென்று ஆய்வுமேற்கொண்டார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினமும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆய்வு செய்து, மழைநீர் தேங்காமல் தடுக்கும் பணிகளை...

சென்னை மாநகராட்சியில் செயல்படும் 388 அம்மா உணவகங்களில் இன்றும் இலவச உணவு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் 388 அம்மா உணவகங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவையடுத்து, நேற்று வழங்கப்பட்டதுபோல், இன்றும் இலவசமாக உணவு வழங்கப்பட உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘‘அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...