Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மழையால் தவிக்கும் மக்களுக்கு உதவ ‘ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்’ மீண்டும் அமைப்பு: பழனிசாமி அறிவிப்பு

சென்னை: சென்னையில் கனமழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ‘ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்’ (Rapid ResponseTeam) மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதியில் உள்ளஅதிமுக தன்னார்வலர்களை எப்போது வேண்டுமானாலும் மக்கள் அணுகி உதவி பெறலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பழனிசாமி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மழை வெள்ளத்தால் தலைநகர் சென்னை தத்தளித்ததையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசு மக்களைக் கைவிட்ட அவலத்தையும் சென்ற ஆண்டே பார்த்தோம். எனவேதான், மக்களுக்கு உதவ அதிமுக தகவல் தொழில்நுட்ப...

தமிழகம் முழுவதும் கனமழையால் 891 குளங்கள் நிரம்பின: 90 அணைகள், நீர்த்தேக்கங்களில் 60 சதவீதம் நீர்இருப்பு

சென்னை: தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் சுமார் 60 சதவீதம் நீர்இருப்பு உள்ளது. 38 மாவட்டங்களில் உள்ள மொத்த ஏரிகளில் 891 குளங்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. தொடங்கியது முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கெனவே நிரம்பியுள்ள நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீர் உபரி நீராக அப்படியே வெளியேற்றப்படுகிறது. உபரிநீர் வெளியேறும் நீர்நிலைகளை உன்னிப்பாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு...

தமிழகம் முழுவதும் பெய்த கனமழையில் 200-க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டன

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழையில், 200-க்கும்மேற்பட்ட பாம்புகள் தீயணைப்பு துறையினர் மற்றும் பாம்பு பிடிப்பவர்களால் பிடிக்கப்பட்டன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்தால் உடனடியாக அழைக்க வேண்டிய அவசர உதவி எண்ணும் தீயணைப்பு துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் நேற்று முன்தினம் பெய்தமழையில் மாநிலம் முழுவதும் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புகட்டுப்பாட்டு அறைக்கு, பாம்புகளை பிடிக்க வேண்டும் என்றவகையில் மட்டும் 211 அழைப்புகள் பெறப்பட்டன. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பிற 2 மாவட்டங்களை உள்ளடக்கிய...

சென்னையில் கனமழை பெய்தபோதிலும் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை: ஆவின் மேலாண்மை இயக்குநர் தகவல்

சென்னை: கனமழை பெய்தபோதிலும், மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வினீத் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு பால் விநியோகம் தடையின்றி கிடைக்க, ஆவின் நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 2 நாட்களாக, மழையால் பால் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, ஆவின் நிறுவனம் மூலம்...

கஸ்தூரி எஸ்டேட், போயஸ் கார்டன் சாலைகளில் சிறு மழைக்கே தண்ணீர் தேங்குவதால் அவதி: விரைவில் தீர்வு காண கோரிக்கை

சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி எஸ்டேட் மற்றும் போயஸ் கார்டனில் உள்ள சாலைகளில் சிறு மழைக்கே தண்ணீர் தேங்குவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி எஸ்டேட் மற்றும் போயஸ் கார்டன் பகுதிகளில் அண்மைக் காலமாக சிறுமழை பெய்தாலே அப்பகுதி களில் உள்ள பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கிவிடுகிறது. வடிகால்களால் பயனில்லை: பல மணி நேரத்துக்கு பிறகேமழைநீர் வடிகிறது. இப்பகுதி களில் மழை நீர் வடிகால்கள் புதிது புதிதாக கட்டப்படுகிறது. இருப்பினும் இப்பகுதியில் மழைநீர் வடியாமல் தேங்கிவிடுகிறது. குறிப்பாக கஸ்தூரி ரங்கன் சாலை...

சிஐடியு ஆலோசனை கூட்டம்: சாம்சங் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப முடிவு

காஞ்சிபுரம்: சாம்சங் நிறுவனத்தின் சிஐடியு தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைவரும் பணிக்கு திரும்புவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு சிஐடியு அமைப்பின் தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலச் செயலர் முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். சிஐடியு தொழிலாளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்புவது என்று முடிவு செய்தனர். சிஐடியு நிர்வாகிகள் தமிழகஅமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் பணிக்கு திரும்புவதாக முடிவு...

நாகர்கோவிலில் பேரிடர் குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு மற்றும் உதவிகள் குறித்த செயல்முறை விளக்கம் தீயணைப்பு துறை சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (அக்.,15) நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு உட்பட்ட பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் வைத்து பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் உதவிகள் செய்வதற்கான கனமழை வெள்ள மீட்பு முறைகள் பற்றிய வகுப்பு நடந்தது. இதற்கு உதவி மாவட்ட அலுவலர் துரை தலைமை தாங்கினார். இதில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு...

குமரி: மகிஷாசுரமர்த்தினி கோயிலில் கொள்ளை முயற்சி

குமரி மாவட்டம் வால்வச்சகோஷ்டத்தில் மகிஷாசுரமர்த்தினி கோயில் அமைந்துள்ளது. மன்னர்கள் போருக்கு புறப்படுவதற்கு முன் இந்த கோவிலில் வாள் வைத்து வணங்கி செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததால் இந்த ஊருக்கு வாள்வச்சகோஷ்டம் என்ற பெயர் வந்ததாக கூறுகிறது.   இந்து சமய அறநிலை துறைக்கு உட்பட்ட இந்த கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் ஏராளமானவர் வந்து செல்கிறார்கள். நேற்று (அக்.,15) காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோயில் பிரகாரத்திற்கு உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த...

திருவட்டாறு: குருசடியில் காணிக்கை பெட்டி உடைப்பு

திருவட்டாறை அடுத்த முளவிளை பகுதியில் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளது. அதன் அருகில் ஆலயத்துக்குட்பட்ட புனித அந்தோணியார் சிற்றாலயமும், குருசடியும்  ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குருசடிக்கு வெளியே காணிக்கை பெட்டி உண்டு.   இந்த நிலையில் நேற்று (அக்.,15) காலை  காணிக்கை பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் திருவட்டாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். காணிக்கை பெட்டியில் பூட்டு மட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே இருந்த மற்றொரு கதை திறக்க முடியவில்லை. இதனால் காணிக்கை பணம்...

கம்ரன் குலாம் சதம் விளாசல்: பாகிஸ்தான் அணி 259 ரன்கள் சேர்ப்பு

முல்தான்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்தது. கம்ரன் குலாம் சதம் விளாசினார். முல்தானில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. அப்துல்லா ஷபிக் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக் லீச் பந்தில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத் 3 ரன்களில் ஜேக் லீச் பந்தில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...