Home 2024
Yearly Archives: 2024
ராஜாக்கமங்கலம்: புதிய வீடுகள் கட்டி தருமாறு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ராஜாக்கமங்கலம் துறை சுனாமி காலணியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தற்போது பெய்து வரும் மழையால் சுவர் இடிந்து விழும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. எனவே புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி நாகர்கோவிலில் நேற்று (அக்.,15) விவசாய சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் செய்தனர்.
நித்திரவிளை: மேற்கு கடற்கரை சாலையில் தோண்டிய பள்ளம்
நித்திரவிளை சந்திப்பு வழியாக குமரி மேற்கு கடற்கரை சாலை செல்கிறது. இந்த சாலையில் உள்ள ஒரு வணிக வளாகம் கழிவுநீர் தொட்டி அமைக்க அதன் உரிமையாளர் நேற்று முன்தினம் இரவு சாலையை சேதப்படுத்தி சுமார் 15 அடி ஆழத்தில் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டியுள்ளார். இரவு 10 மணிக்கு மேல் பணி நடந்ததால் பொதுமக்கள் யாரும் இதை கவனிக்கவில்லை. இரவு ரோந்து போலீசரும் கவனிக்கவில்லையாம்.
இந்த நிலையில் நேற்று (அக்.,15) காலை பார்த்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கொல்லங்கோடு நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்....
நித்திரவிளை: தீ விபத்தில் சிக்கியவர் உயிரிழப்பு
நித்திரவிளை அருகே காஞ் சாம்புறம் பகுதியில் தூத்தூர் பகுதியை சேர்ந்த ரொனால்டோ என்பவர் சைக்கிள் கடை வைத்துள்ளார். இந்த கடையில் கடந்த 9- ம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் மின்கசிவு காரணமாக திடீரென தீ பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது இந்த கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பள்ளம் மதுசூதனபுரம் பகுதியை சேர்ந்த வைரவன் (66) என்பவர் புகையில் சிக்கினார்.
தீயை அணைக்க வந்த தீயணைப்பு வீரர்கள் வைரவனை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு...
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா – நியூஸிலாந்து முதல் டெஸ்டில் இன்று மோதல்
பெங்களூரு: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
டாம் லேதம் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றிருந்தது. அதேவேளையில் நியூஸிலாந்து அணியானது இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என...
ஹாட்ரிக் கோல் பதிவு செய்த மெஸ்ஸி: பொலிவியாவை வீழ்த்திய அர்ஜெண்டினா
பியூனஸ் அயர்ஸ்: 2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று போட்டியில் பொலிவியா அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் பதிவு செய்து மெஸ்ஸி அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான தகுதி சுற்று போட்டிக்கான இந்த ஆட்டம் அர்ஜெண்டினாவில் நடைபெற்றது. கணுக்கால் காயம் காரணமாக சமீபகால போட்டிகளில் பங்கேற்காத 37 வயதான நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி, அண்மையில் அணிக்கு திரும்பினார்.
இதில் 19, 84, 86 ஆகிய...
“அப்பா இருந்திருந்தால் கொண்டாடியிருப்பார்” – ஏ.பீம்சிங் 100-வது பிறந்தநாளில் பிரபு நெகிழ்ச்சி
தமிழில் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை இயக்கியவர், ஏ.பீம்சிங். குடும்பப் படங்களை யதார்த்தமாக இயக்குபவர் எனக் கூறப்படும் இவர், சிவாஜி நடிப்பில் மட்டும் 19 படங்களை இயக்கியுள்ளார். அதில்பாசமலர், பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பாவ மன்னிப்பு உட்பட 15 ‘பா’ வரிசை படங்களும் உண்டு. பீம்சிங்கிற்கு நேற்று நூறாவது பிறந்தநாள். இதையொட்டி, நடிகர் பிரபு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “அப்பா நடித்த படங்களில் உதவி இயக்குநராக இருந்தவர், பீம்சிங். அவரை ‘செந்தாமரை' படத்தில் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் முடிய...
புதிய தோற்றத்தில் கமல்ஹாசன் – வைரலாகும் புகைப்படம்
நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார். அவருடன் சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், அபிராமி என பலர் நடித்துள்ளனர். ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு ஏஐ தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்ள இருக்கும் அவர், அடுத்து, சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் கமல்ஹாசனின் புதிய...
அடர் வனப்பகுதிகளில் படமான ‘அலங்கு’
‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் அடுத்து இயக்கும் படம், ‘அலங்கு’. இதில் நாயகனாக குணாநிதி நடிக்கிறார். மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி என பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. எஸ்.பாண்டிகுமார்ஒளிப்பதிவு செய்துள்ளஇந்தப் படத்துக்கு அஜீஷ் இசை அமைக்கிறார். டிஜி பிலிம் கம்பெனி மற்றும் மக்னாஸ்புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.சபரீஷ், எஸ்.ஏ.சங்கமித்ரா தயாரிக்கின்றனர்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “மனிதர்களுக்கும், நாய்களுக்கும்...
ராணுவப் பின்னணியில் உருவாகும் ‘பரிசு’
அறிமுக இயக்குநர் கலா அல்லூரி எழுதி இயக்கியுள்ள படம், ‘பரிசு’. நாயகியை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஜான்விகா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெய்பாலா, கிரண் பிரதீப், ஆடுகளம் நரேன், சென்ராயன், சச்சு உட்பட பலர் நடித்துள்ளனர். கலா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சங்கர் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் கலா அல்லூரி கூறும்போது, “ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான தந்தை, மகளையும் ராணுவத்தில் சேர சொல்கிறார். அப்பாவின் விருப்பப்படி சேர்கிறார் மகள். பிரச்சினைகளையும், தடைகளையும் எதிர்கொண்டு எப்படி வெற்றி பெறுகிறார்...
இந்தி நகைச்சுவை நடிகர் அதுல் பர்சுரே காலமானார்
பிரபல இந்தி மற்றும் மராத்தி பட நகைச்சுவை நடிகர் அதுல் பர்சுரே காலமானார். அவருக்கு வயது 57.
நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர் இந்தியில், ஜிந்தகி 50 50, லவ் ரெசிபி, கட்டா மிட்டா, கல்கத்தா மெயில் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் பங்கேற்று வந்த அவர், புகழ்பெற்ற சின்னத்திரை நிகழ்ச்சியான கபில் சர்மா காமெடி ஷோவிலும் பங்கேற்றிருந்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் அதுல் பர்சுரேவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதற்காக சிகிச்சை பெற்றுக் குணமடைந்தார். இந்நிலையில் சில...














