Home 2024
Yearly Archives: 2024
பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2 – தாண்டவம்’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
போயபதி சீனு - பாலகிருஷ்ணா இணையும் ‘அகண்டா 2 - தாண்டவம்’ படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
போயபதி சீனு இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த படம் ‘அகண்டா’. இதில் ப்ரக்யா ஜைஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்த இப்படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார். 2021-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இந்தப் படம் வெளியானது.
2021-ம் ஆண்டு அதிக வசூல் செய்த தெலுங்குப் படங்களில் ஒன்றாக அமைந்தது. இதன் பின்னணி இசை, ஆக்ஷன் காட்சிகள் என வெகுவாக...
ரசிகர் கொலை வழக்கில் கைதான தர்ஷன், பவித்ரா ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
பெங்களூரு: ரசிகர் கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை பெங்களூரு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கன்னட முன்னணி நடிகர் தர்ஷன் (44) தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய ரேணுகா சுவாமி (33) என்ற ரசிகரை கடத்தி கொலை செய்ததாக கடந்த ஜூன் 11ம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் மேலாளர் நாகராஜ் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில்...
ரூ.32,000 கோடி மதிப்பில் 31 ப்ரீடேட்டர் டிரோன்கள் வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்
புதுடெல்லி: சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளஅமெரிக்காவிடம் இருந்து ரூ.32,000 கோடி மதிப்பில் 31 ப்ரீடேட்டர் டிரோன்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்க தயாரிப்பான எம்க்யூ-9பி ப்ரீடேட்டர் டிரான்களை தற்போது அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் மற்றும் நோட்டோ நாடுகள் சில பயன்படுத்துகின்றன. செயற்கைகோள் கட்டுப்பாட்டில் நீண்டநேரம் பறக்கும் இந்த டிரோன்கள் ஆப்கானிஸ்தான் உட்பட சில நாடுகளில் மிகதுல்லிய தாக்குதல்களை நடத்தியுள்ளன.ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த ‘ஹன்ட்டர் -கில்லர்’ டிரோன்கள் ‘ஹெல்ஃபயர்’ ஏவுகணைகள் மற்றும்ஜிபியு-39பி குண்டுகளை வீசும் திறன் உடையது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்களின்...
இலவச அறிவிப்புகள் குறித்த வழக்கு: மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புதுடெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சஷாங்க் ஜே. ஸ்ரீதரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநிவாசன் ஆஜரானார். அப்போது அவர் வாதிடும்போது, “தேர்தல்பிரச்சாரத்தின்போது பல்வேறு இலவசப் பொருட்களை வழங்குவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளிக்கின்றன. இந்த இலவசப் பொருட்களை அளிப்பதாக அரசியல் கட்சிகள் அறிவிப்பதைத் நிறுத்தவேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்தை கேட்டுக்...
உ.பி.யில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவுடன் இரவில் 16 கி.மீ. தேடி 8 வயது பெண் குழந்தையை மீட்ட போலீஸார்
லக்னோ: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது பெண் குழந்தையை ரயில்வே போலீஸார், உ.பி. போலீஸார் சுமார் 16 கிலோமீட்டர் தேடி மீட்டனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் லலித்பூர் தடத்தில் அண்மையில் தந்தையுடன் ரயிலில் பயணம் செய்த 8 வயது பெண் குழந்தை எமர்ஜென்சி ஜன்னல் வழியாக தவறி கீழே விழுந்துவிட்டது. இதையடுத்து, உடனடியாக ரயில்வே போலீஸாருக்கு அந்த குழந்தையின் தந்தை தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு அங்கு உள்ளூர் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் ரயில்வே போலீஸாரும் தண்டவாளத்தின் வழியே...
இணையவழியில் பதிவு செய்யாதவர்களும் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்யலாம்: முதல்வர் பினராயி விஜயன் உறுதி
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான வருடாந்திர மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
இக்கோயிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்கள், தரிசனம் மற்றும்பிரசாத டிக்கெட்களை இணையவழியில் முன்கூட்டியே பெற்றுக்கொள்ளலாம். அதேநேரம், முன்பதிவு செய்யாதவர்கள் சபரிமலைக்கு சென்ற பிறகு தேவசம்வாரியம் சார்பில் குறிப்பிட்ட இடங்களில் செயல்படும் மையங்களில் தரிசன டிக்கெட் (ஸ்பாட் புக்கிங்) பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில், இந்த ஆண்டுநேரில் தரிசன டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்றும் இணைய வழியில் மட்டுமே தரிசனம் மற்றும் பிரசாத டிக்கெட் வழங்கப்படும் எனவும் கேரள...
45% பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு உள்ளவர்களும் எம்பிபிஎஸ் படிக்கலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடெல்லி: பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு 45 சதவீதம்வரை இருக்கக்கூடிய மாணவர் ஒருவர் தனக்கு மருத்துவப் பட்டப்படிப்புக்கான இடம் மறுக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியதாவது: உடல் ரீதியான குறைபாடு 44 முதல் 45 சதவீதம்வரை இருக்கும் ஒரே காரணத்துக்காக மாணவர் ஒருவருக்கு எம்பிபிஎஸ் சீட் மறுக்கப்படுவதா? இதை காரணம் காட்டி மருத்துவப் பட்டப்படிப்பில் சேரும் உரிமை பறிக்கப்படுவதை இந்த நீதிமன்றம் ஏற்காது.
சட்டத்துக்கு...
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ஈடுபட்ட தைவான் நாட்டினர் 4 பேர் உட்பட 17 பேர் கைது
அகமதாபாத்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ஈடுபட்டு வந்த 17 பேரை குஜராத் போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் தைவான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களைக் குறிவைத்து டிஜிட்டல்அரெஸ்ட் மோசடி மேற்கொள்ளப் படுகிறது. மோசடியில் ஈடுபடுபவர்கள், தங்களை விசாரணை அதிகாரிகள் என கூறி சம்பந்தப்பட்ட தனிநபருக்கு வீடியோ கால் செய்து, அவர்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக தெரிவிப்பார்கள். பண மோசடி, போதைப் பொருள் கடத்தல் போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், தாங்கள்சொல்வதற்கு ஒத்துழைக்காவிட்டால் சிறை...
வக்பு வாரிய திருத்த மசோதா விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தை புறக்கணித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
புதுடெல்லி: நாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை, ரயில்வே ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக நிலங்கள் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தச் சொத்துகளை கண்காணிக்க, கடந்த 1954-ல் நாடாளுமன்றத்தில் வக்பு சட்டம் இயற்றப் பட்டது. அதன் பிறகு, அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்பிறகு கடந்த 1995-ம் ஆண்டுவக்பு சட்டம் விரிவுப்படுத்தப் பட்டது.
இந்நிலையில், வக்பு வாரிய நிர்வாக நடவடிக்கைகளை மேம் படுத்தவும், வக்பு வாரியம் தொடர் பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர மத்தியில் ஆளும்பாஜக அரசு முடிவு...
ஆந்திராவில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அமராவதி: கடந்த திங்கட்கிழமை இரவு முதல் ஆந்திராவில் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லூரில் 146 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து மேலும் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், நெல்லூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறையை அறிவித்துள்ளார். கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் திருமலையில் சுவாமியை தரிசிக்க செல்லவும், தங்கும் அறைகளுக்கு திரும்பவும் போதிய வாகன வசதிகள்...














