Home 2024
Yearly Archives: 2024
பிஹார் இடைத்தேர்தலில் நிதிஷ்குமார், லாலு பிரசாத் கட்சிக்கு நெருக்கடி
புதுடெல்லி: பிஹாரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நிதிஷ், லாலு கட்சிகளுக்கு புதிய நெருக்கடி உருவாகி உள்ளது.
பிஹார் சட்டப்பேரவையில் காலியாக உள்ள ராம்கர், தராரி, பேலாகஞ்ச், இமாம்கஞ்ச் ஆகிய 4 பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களாக இரண்டு கூட்டணிகள் உள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான மெகா கூட்டணி ஆகியவை 2 முக்கிய கட்சிகளாக உள்ளன.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரவியூக நிபுணர்...
காஷ்மீர் முதல்வராக பதவியேற்கிறார் உமர் அப்துல்லா: ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்காது என தகவல்
ஸ்ரீநகர்: காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா இன்று (அக்.16) பதவியேற்கிறார். இந்நிலையில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கேற்காது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டும் கூட காங்கிரஸ் அதனைப் புறக்கணித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இன்றைய பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இன்றைய பதவியேற்பு விழாவில் உமர் அப்துல்லாவுடன் 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது....
இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டுள்ள முதல் பன்னோக்கு கப்பல் ‘சமர்த்தக்’ – காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கடலில் செலுத்தப்பட்டது
சென்னை: இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டுள்ள முதலாவது பன்னோக்கு கப்பல் ‘சமர்த்தக்’ சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து கடலில் செலுத்தப்பட்டது.
இந்திய கடற்படைக்காக எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனம் கட்டிய முதலாவது பன்னோக்கு கப்பல் இதுவாகும். இதுபோல 2 கப்பல்கள் கட்ட எல் அண்டு டி நிறுவனத்துடன் கடற்படை ஒப்பந்தம் செய்துள்ளது. அவற்றில் இது முதலாவது கப்பலாகும். இக்கப்பலை கடற்படை மரபுகளின்படி, கடற்படை தளபதியின் மனைவியும், கடற்படை மனைவியர் நலச்சங்க தலைவருமான சசி திரிபாதி கடலுக்கு செலுத்தினார். கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ்...
‘நான் உங்களுக்கு உதவலாமா?’ – அறிவிப்பு பலகை வைத்து மக்களுக்கு உதவ வேண்டும்: பொது சுகாதார துறை உத்தரவு
சென்னை: அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ‘நான் உங்களுக்குஉதவலாமா?’ என்ற அறிவிப்புபலகையை வைத்து, வழிக்காட்டுநரை நியமிக்க பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 13,527 சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சேவை, கர்ப்பகால முன்கவனிப்பு, பிரசவம், தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பிறவி குறைபாடு, ஊட்டசத்து பற்றாக்குறை உள்ளிட்டற்றை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி, மற்றும் மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட...
தீவுத்திடலில் பட்டாசு கடை டெண்டர் நடைமுறைகளுக்கு தடை
சென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க டெண்டருக்கு விண்ணப்பித்த சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கத்தின் டெண்டர் விண்ணப்பத்தை நிராகரித்த தமிழக அரசு, தகுதியில்லாத சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் டெண்டர் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டுமென கோரியும் சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், எந்தவொரு வெளிப்படைத்தன்மையும் இல்லாமல்...
டிஎன்பிஎஸ்சி மேல்முறையீட்டு வழக்கில் வழக்கறிஞர் வில்சன் குறித்த கருத்து நீக்கம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தொடர்பான வழக்கு நடைபெற்றது. இதில், டிஎன்பிஎஸ்சி தரப்பில் காணொலியில் ஆஜரான மூத்தவழக்கறிஞரும், திமுக எம்.பி.யுமான வில்சனின் செயல்பாடுகுறித்து நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் அதிருப்தி தெரிவித்து, விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இது தொடர்பானவீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, மூத்த வழக்கறிஞரிடம் நீதிபதி கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சென்னைஉயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார்கள் அளிக்கப்பட்டன.
இதனிடையே, டிஎன்பிஎஸ்சி...
சென்னையில் 300 இடங்களில் மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரம்: துணை முதல்வர் உதயநிதி தகவல்
சென்னை: சென்னையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய வெள்ளநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், துணை முதல்வர் உதயநிதி நேற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டை மண்டலம் ஜானி ஜக்கான் முதல் தெரு, முசிறி சுப்பிரமணியன் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டார். அப்போது அப்பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு சிற்றுண்டி வழங்கினார்.
தொடர்ந்து நேற்று காலை சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில்...
தமிழகத்தில் அரசு சட்டக் கல்லூரிகளில் நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் விளக்கம்
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் நிரந்தரமாக இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லுரிகளில் காலியாக உள்ள இணைப் பேராசிரியர் பணிக்கு நேரடி நியமனங்களை மேற்கொள்ளக் கோரி வசந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018-ல் வழக்கு தொடர்ந்தார். இதில் சட்டக்கல்வி இயக்குநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில், அனுமதிக்கப்பட்ட 20இணைப் பேராசிரியர்...
2026-ல் அதிமுக ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது: தொண்டர்களுக்கு பழனிசாமி கடிதம்
சென்னை: தமிழர்கள் செழித்து வாழ்ந்திட உழைப்போம், உறுதி ஏற்போம். எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்திடுவதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் 53-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
காரிருள் சூழ்ந்து காட்டாட்சி நடைபெற்ற நேரத்தில், தமிழக மக்களை மீட்டெடுக்கத் தோன்றிய நம்பிக்கை நட்சத்திரமாக எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக-வின் 53-வது ஆண்டுவிழாவை கொண்டாடுகிறோம். அதிமுக தோன்றிய காலக்கட்டத்தில் ஏற்பட்ட அரசியல்...
சென்னைக்கு விலகியது அதி கனமழை ஆபத்து: வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்
சென்னை: சென்னையில் இன்று (அக்.16) அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை அர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கடக்கலாம் என்றாலும்கூட அதன் காற்றுக் குவிப்பு மேல் நோக்கி நகர்ந்ததால் சென்னைக்கு இன்று (அக்.16) அதி கனமழை பெய்ய வாய்ப்பில்லை. இது சென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி; சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், இயல்பான அளவில் வடகிழக்கு பருவமழை...














