Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மெட்ரோ ரயில்கள் இன்று இயங்கும்: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று (அக்.16)வழக்கம்போல இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கத்தை பொறுத்து, மின்சார ரயில் சேவையில் மாற்றம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும், பறக்கும் ரயில் மார்க்கத்தில் வழக்கம்போல ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று கனமழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. மாநகர பேருந்து சேவையும் பாதிக்கப்பட்டது. ரயில்பாதையில் மழைநீர் தேங்கியதால், விரைவு மற்றும் மின்சார ரயில்களின் சேவையில்...

தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் தேமுதிக அலுவலகத்தில் தங்க அழைப்பு: மக்களுக்கு உதவ தொண்டர்களுக்கு தலைவர்கள் அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் தேமுதிக அலுவலகத்தில் தங்குவதற்கு, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ வேண்டும் என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தங்களது தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்துள்ளது. இதனால் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் அக்.15, 16, 17 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக...

கனமழை நீடிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கிருஷ்ணகிரி/ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் மாணவ, மாணவிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். பாரூரில் 34.6, நெடுங்கல்லில் 26 மிமீ மழை பதிவானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, வேப்பனப்பள்ளி, பர்கூர், ஊத்தங்கரை, சூளகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய, விடியப் பெய்த மிதமான மழை காலை 7.15 மணி வரை நீடித்தது. தொடர்ந்து, சாரல் மழை பெய்த நிலையில் மழையில் நனைந்தபடி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள்...

சென்னையில் 8 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடல்: 51 சாலைகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன

சென்னை: சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்ததால், 8 சுரங்கப்பாதைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டன. சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போக்குவரத்து போலீஸார் நேற்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். முதல் கட்டமாக மழைநீர் சூழ்ந்ததால் பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம், சூரப்பட்டு அண்டர் பாஸ் ஆகிய 8 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. தண்ணீர் தேக்கம், வாகன நெரிசல் காரணமாக...

கொட்டிய கனமழை: சேலத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் பல இடங்களில் சாரல் மழை மட்டுமே காணப்பட்ட நிலையில் சேலம், ஏற்காடு உள்பட சில இடங்களில் கனமழை கொட்டியது. வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக ஓமலூரில் 18 மிமீ, சங்ககிரியில் 16.1 மிமீ, தலைவாசலில் 15 மிமீ, மழை கொட்டியது. பிற இடங்களில் பெய்த மழை விவரம் (மிமீ.,-ல்): மேட்டூர் 13.8, டேனிஷ்பேட்டை...

ஃபஹத், ரஜினியின் ‘வேட்டையன்’ நீக்கப்பட்ட காட்சி – “நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க!”

சென்னை: ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சியை (deleted scene) படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஜினி - ஃபஹத் பாசில் இடையிலான உரையாடலாக நீளும் அந்தக் காட்சியின் ஓரிடத்தில் ரஜினி, “பேட்ரிக் நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க” என ஃபஹத் பாசிலிடம் கூறுகிறார். அதற்கு பதிலளிக்கும் ஃபஹத் பாசில், “உங்கள விடவா சார்” என கேட்கிறார். 31 நொடிகள் மட்டுமே உள்ள ஜாலியான இந்த உரையாடல் காட்சி படத்தில் இடம்பெறவில்லை. எனினும் லைகா நிறுவனம் இந்த வீடியோவை தனது...

சினிமாவுக்கு சிறு இடைவெளி விடும் அஜித்!

சினிமாவுக்கு சிறு இடைவெளி விட திட்டமிட்டு இருக்கிறார் அஜித். அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ‘விடாமுயற்சி’ படத்துக்கு ஒரே ஒரு பாடல் மட்டும் பாக்கி இருக்கிறது. ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு சுமார் ஒரு ஆண்டு சினிமாவுக்கு இடைவெளி விட இருக்கிறார் அஜித். இந்த ஓர் ஆண்டில் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ள உள்ளார். அதற்கு முன் தயாரிப்பு,...

தொடங்கியது வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நாளை மிக கனமழை வாய்ப்பு

சென்னை: தென்மேற்கு பருவமழை இன்று (அக்.15) இந்திய பகுதிகளிலிருந்து நிறைவு பெற்று, வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் துவங்கியுள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி...

“சென்னையில் கனமழை பாதிப்பு… முழு களப்பணி தேவை” – தினகரன்

சென்னை: “ஒருநாள் மழைக்கே சென்னை மாநகர் மக்களின் இயல்பு வாழ்க்கையை முழுவதுமாக முடக்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை அரசு எவ்வாறு பாதுகாக்கிற போகிறது?” என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளபக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (திங்கள்கிழமை) இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் மாநகர் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக முடங்கியிருக்கிறது. சென்னை...

இந்தியாவுடன் டெஸ்ட் தொடர்: கேமரூன் கிரீன் விலகல்

மெல்பர்ன்: இந்தியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 22-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. ஜனவரி 7-ம் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. இந்நிலையில் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் நேற்று அறிவித்தார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் அவதிப்பட்டு வருகிறார்....

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...