சினிமாவுக்கு சிறு இடைவெளி விட திட்டமிட்டு இருக்கிறார் அஜித். அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ‘விடாமுயற்சி’ படத்துக்கு ஒரே ஒரு பாடல் மட்டும் பாக்கி இருக்கிறது. ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு சுமார் ஒரு ஆண்டு சினிமாவுக்கு இடைவெளி விட இருக்கிறார் அஜித். இந்த ஓர் ஆண்டில் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ள உள்ளார். அதற்கு முன் தயாரிப்பு, திட்டமிடல், பந்தயம் என 6 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.
அதனை முடித்தவுடன் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார் அஜித். சினிமா, பந்தயம், பைக் பயணம் என இருந்ததால் குடும்பத்துடன் நேரம் செலவிடவில்லை அஜித். இதனால் 6 மாதங்கள் குடும்பத்துக்கு என ஒதுக்கவுள்ளார். ஆகையால் இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு, ஓராண்டு கழித்தே மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளவுள்ளார் அஜித். அந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, சிவா இயக்கவுள்ளார்.