Google search engine
Home 2024

Yearly Archives: 2024

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

முல்தான்: பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கவுள்ளது. முல்தானில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி கண்டு 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் முல்தான் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது இங்கிலாந்து. அந்த அணியின் ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோர் முதல் டெஸ்டில் அபாரமாக விளையாடி சதம் விளாசினர். இந்தப் போட்டியிலும் அவர்களது ஆதிக்கம் தொடரும் என்று கூறலாம். அதே நேரத்தில்...

முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி: மேற்கு இந்தியத் தீவுகள் வெற்றி

தம்புல்லா: தம்புல்லாவில் நடைபெற்ற முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட்போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தம்புல்லாவில் உள்ள ரண்கிரி தம்புல்லா சர்வதேச மைதானத்தில் முதலாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் அசலங்கா 35 பந்துகளில் 59 ரன்கள் (9 பவுண்டரிகள்)...

தேசிய அட்யா பட்யா போட்டி: தமிழக ஆடவர் அணி சாம்பியன்

சென்னை: 31-வது ஆடவர் தேசிய அட்யா பட்யா போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியை புதுச்சேரி அட்யா பட்யா சங்கம் மற்றும் அட்யா பட்யா ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து புதுச்சேரி ஆசிர்வதிக்கப்பட்ட மதர் தெரசா மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர், குஜராத், ஆந்திரா என மொத்தம் 17 மாநிலங்கள் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றன. இந்தப் போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆடவர் இறுதிச்சுற்று போட்டியில்...

பாகிஸ்தானை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறிய நியூஸி: வெளியேறிய இந்தியா – மகளிர் டி20 WC

துபாய்: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றில் இருந்து இந்தியா வெளியேறி உள்ளது. ‘குரூப் - ஏ’ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் 54 ரன்களில் வெற்றி பெற்றது இதன் மூலம் நியூஸிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. அதே பிரிவில் இருந்த இந்திய அணி வெளியேறி உள்ளது. திங்கட்கிழமை (அக்.14) நடைபெற்ற நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள்...

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 3% அகவிலைப்படி

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் இதுகுறித்த அறிவிப்பு தீபாவளிக்கு முன்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 9-ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போதே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புவெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. எனினும், வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பணவீக்க...

பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்: நிறுவனங்களில் பயிற்சி பெற 1.55 லட்சம் பேர் பதிவு

புதுடெல்லி: பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் நிதி உதவியுடன் பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பயிற்சி பெறுவதற்காக 24 மணி நேரத்தில் 1.55 லட்சம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து பெருநிறுவன விவகார அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் 1.25 லட்சம் பேர் விண்ணப்பம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1,55,109 பேர் பிரதமரின் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். 21-24 வயது பிரிவினருக்கான இன்டர்ன்ஷிப் பயிற்சி டிசம்பர்2-ம் தேதி தொடங்க உள்ளது.இதில், தேர்வு செய்யப்படு பவருக்கு மாத உதவித் தொகையாக...

காஷ்மீர் பேரவைக்கு 5 உறுப்பினர்களை நியமிக்கும் ஆளுநர் அதிகாரத்துக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுடெல்லி: காஷ்மீர் பேரவைக்கு 5 உறுப்பினர் களை நியமிக்க வகை செய்யும் துணைநிலை ஆளுநரின் அதிகா ரத்துக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 90-ல் 49 இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றது. இக்கூட்டணியைச் சேர்ந்த தேசிய மாநாட்டு கட்சி 42, காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடங்களில் வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த உமர் அப்துல்லா முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இதனிடையே, ஜம்மு காஷ்மீரைச்...

கவுரி லங்கேஷ் கொலையில் ஜாமீனில் வந்தவர்களுக்கு விழா: இந்துத்துவ அமைப்பு நடத்தியது

பெங்களூரு: பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் வழக்கில் ஜாமீனில்வெளியே வந்தவர்களுக்கு இந்துத்துவ அமைப்பினர் பாராட்டு விழா நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (55) கடந்த 2017-ம் ஆண்டு செப். 5-ம் தேதி வீட்டின் அருகே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 7 ஆண்டுகளாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த 9-ம்தேதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பரசுராம் வக்மோர், மனோகர்யாதவ் உள்ளிட்ட 6...

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் எப்போது? – இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று (அக்.15) மாலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடப்படுகிறது. இது குறித்த அறிவிப்பின் நிமித்தம் மாலை 3.30 மணியளவில் தேர்தல் ஆணையர்கள் - செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . ஜார்கண்ட் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைகிறது. மகாராஷ்டிரா சட்டபேரவை பதவிக்காலம் வரும் நவம்பர் 26-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இந்த இரு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறது. தயார் நிலையில் அரசியல் கட்சிகள்: மகாராஷ்டிராவை பொறுத்தவரை காங்கிரஸ்,...

மகாராஷ்டிரா ஸ்கில்ஸ் யுனிவர்சிட்டிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா பெயர்

மும்பை: மகாராஷ்டிரா ஸ்டேட் ஸ்கில்ஸ் டெவலப்மென்ட் யுனிவர்சிட்டியின் (எம்எஸ்எஸ்யு) பெயர் ரத்தன் டாடா மகாராஷ்டிரா ஸ்டேட் ஸ்கில்ஸ் டெவலப்மென்ட் யுனிவர்சிட்டி என மாற்றப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த புகழ்பெற்றதொழிலதிபரும் நன்கொடையாள ருமான ரத்தன் டாடாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக, ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என மகாராஷ்டிர அமைச்சரவை கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது....

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...