Google search engine
Home 2024

Yearly Archives: 2024

தாவூத் இப்ராகிமை போல் செயல்படும் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு சர்வதேச தாதாக்களுடன் தொடர்பு

புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் பாபா சித்திக்கீ, கடந்த சனிக்கிழமை இரவு மும்பைபாந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் உட்பட 3 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். ஷிவ்குமார் கவுதம் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த கொலைக்கு பொறுப்பேற்பதாக பிரபல மும்பை தாதா லாரன்ஸ் பிஷ்னோய் முகநூலில் பதிவிட்டுள்ளார். கடந்த காலங்களில் மும்பை நிழல் உலக தாதாவாக தாவூத் இப்ராகிம் செயல்பட்டு வந்தார். அவர் பாணியை லாரன்ஸ் பிஷ்னோயும் தொடர்வது குறித்து பல தகவல்கள் வெளியாகி உள்ளன....

தொழுவத்தை சுத்தம் செய்தால் புற்றுநோய் குணமாகும்: உ.பி. அமைச்சரின் சர்ச்சை கருத்து

லக்னோ: பசு தொழுவத்தை சுத்தம் செய்து, அங்கேயே படுத்துறங்கி வந்தால் புற்றுநோய் குணமாகும் என உ.பி. அமைச்சர் சஞ்சய் சிங் கங்குவார் கூறியுள்ளார். உத்தரபிரதேச பாஜக அரசில் கரும்பு வளர்ச்சித் துறைக்கான அமைச்சராக இருப்பவர் சஞ்சய் சிங் கங்குவார். இவர் தனது பிலிபித் தொகுதிக்குட்பட்ட பகாடியாஎன்றஇடத்தில் பசு காப்பகத்தை நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “ரத்த அழுத்த நோயாளிகள் தினமும் காலை, மாலை இருவேளையும் பசுவின் முதுகில் செல்லமாக தடவிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு தடவிக் கொடுத்தால் ரத்த அழுத்த மருந்துகளின்...

சூரியசக்தி மின் நிறுவு திறனில் தமிழகம் 3-வது இடம்

சென்னை: தமிழகத்தில் சூரியசக்தி மின்நிலையங்களின் நிறுவு திறன் 9,270 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், சூரியசக்தி மின் நிறுவு திறனில் தமிழகம் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. சுற்றுச்சூழலைப் பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. பெரிய நிறுவனங்கள் தங்களது சொந்த பயன்பாட்டுக்கும், எஞ்சிய மின்சாரத்தை மின்வாரியத்துக்கும் விற்பனை செய்வதற்கு வேண்டி அதிக திறன் கொண்ட சூரியசக்தி மின்நிலையங்களை அமைக்கின்றன.இவை தவிர, கட்டிடங்கள் மற்றும் விவசாய நிலங்களில் குறைந்த திறனில் மேற்கூரை சூரியசக்தி...

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ரூ.68 கோடியில் விடுதி, கட்டிடங்கள்: காணொலியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் மற்றும் கிருஷ்ணாபுரம், அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயிலில் ரூ.5.81 கோடி மதிப்பில் 4 பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.68.36கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்டவற்றை திறந்துவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 2,226 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. கோயில்களுக்கு சொந்தமான ரூ.6,755 கோடி மதிப்பிலான 7,005.70 ஏக்கர் சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.5,433.56 கோடி மதிப்பிலான 20,607 திருப்பணிகளில் 9,083பணிகள் நிறைவுபெற்றுள்ளன. புதிய திட்டங்களுக்கு அடிக்கல்: அந்த வகையில்,...

இன்று 93-வது பிறந்த தினம்: ‘ஏவுகணை நாயகன்’ கலாமின் கனவு நிறைவேறுமா?

ராமேசுவரம்: தமிழகத்தின் தென்கோடியில் உள்ளராமேசுவரம் தீவில் சிறு படகு உரிமையாளரின் மகனாக 1931-ம் ஆண்டு அக்.15-ம் நாள் பிறந்தார் அப்துல் கலாம். அவரின் முழு பெயர் ஆவுல் பக்கீர் ஜலாலுதீன் அப்துல் கலாம். கலாமுடன் உடன் பிறந்த சகோதரர்கள் 3 பேர். ஒரு சகோதரி. 1958-ம் ஆண்டு புதுடெல்லியில் உள்ள தொழில்நுட்ப மையத்தில் முதுநிலை விஞ்ஞானி உதவியாளராக சேர்ந்தார். பின்னர் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் பணியாற்றினார். அப்துல் கலாம், 1980-ம் ஆண்டு எஸ்எல்வி. ராக்கெட் திட்டப் பணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்....

சென்னையில் விசிக ஆர்ப்பாட்டம்

சென்னை: இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொண்டு,பாலஸ்தீன மக்களின் கோரிக்கையை அங்கீகரிக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, விசிக துணை பொதுச் செயலாளர்கள் வன்னியரசு, எஸ்.எஸ்.பாலாஜி,ஆளூர் ஷா நவாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலுக்கு மத்திய அரசு துணை போகக்கூடாது என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது: உலக நாடுகள்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்து இயக்கம்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்

பெரம்பலூர்: தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் பேருந்துகளை ஒப்பந்தஅடிப்படையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். பெரம்பலூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அக். 24-ம் தேதி ஆம்னி பேருந்துஉரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், பண்டிகைக் காலங்களில் கூடுதல்கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படும். இதையும் மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிப்பவர்களை அரசால்எதுவும் செய்ய முடியாது. அதுகுறித்து புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை...

ஓட்டல் கண்காணிப்பாளர் கொலை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதியாதது ஏன்? – போலீஸ் விளக்கமளிக்க தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு

சென்னை: பல்லாவரத்தில் ஓட்டல் கண்காணிப்பாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என போலீஸ் அதிகாரிவிளக்கம் அளிக்க தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண் (30). இவர் சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலில், பிரபல தனியார் ஓட்டல் ஒன்றில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச்12-ம் தேதி ஓட்டலுக்கு வந்த அனகாபுத்தூரை சேர்ந்த சங்கர் (55) மற்றும் அவரது மகன் அருண்குமார் (30) ஆகியோர் பார்சல் சாப்பாடு வாங்கியுள்ளனர். பின்னர் கூடுதலாக ஒரு...

கலைஞர் நூற்றாண்டு பூங்கா 4 நாட்கள் மூடல்

சென்னை: கனமழை காரணமாக கலைஞர் நூற்றாண்டு பூங்கா 4 நாட்களுக்கு மூடப்படுவதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைவெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை, சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழைபெய்யும் என வானிலை ஆய்வுமையத்தால் அறிவிக்கப்பட்டு, ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 15-ம் தேதி (இன்று) முதல் 18-ம் தேதி வரை 4 நாட்கள் செயல்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 17,596 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்/தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6,445 கனஅடியாக இருந்த நீர் வரத்து நேற்றுவிநாடிக்கு 17,596 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்துடெல்டா பாசனத்துக்கு வெளியேற் றப்படுவது விநாடிக்கு 3,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ள நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 89.26 அடியாக இருந்த நிலையில், நேற்று89.92 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...