Home 2024
Yearly Archives: 2024
மக்களுக்கு தேவையில்லாத 1,500 சட்டங்களை நீக்கியுள்ளோம்: மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்
அருப்புக்கோட்டை: கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு தேவையில்லாத 1,500 சட்டங்களை நீக்கியுள்ளோம் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமை மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார். முன்னதாக ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் தரிசனம்செய்தார். பின்னர், நெசவாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு தேவையில்லாத 1,500 சட்டங்களை நீக்கியுள்ளோம். கைத்தறி பாதுகாப்புச் சட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்துதெரிவித்துள்ளீர்கள். இது தொடர்பாக ஜவுளித் துறை...
பருவமழை பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க கவனம் செலுத்த வேண்டும்: கட்சி தலைவர்கள் அரசுக்கு அறிவுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தொடர் கவனம்செலுத்த வேண்டும் என தமிழக அரசை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழகத்தில் கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, சேலம் உட்பட பல மாவட்டங்களில் கடந்தசில நாட்களாக கனமழை பெய்துகொண்டிருக்கிறது. இதனால் அந்தபகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு, சாலைகள் வெள்ளநீரால் மூழ்கிய நிலையிலும், ஆங்காங்கே மின் கம்பிகள் அறுந்து விழுந்துஉயிரிழப்புகளும் கூட ஏற்பட்டுள்ளன. இவ்வாறு மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எந்தவிதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையில் ஈடுபடாமல் திமுக...
கன்னியாகுமரி: வீடுகளுக்கு பட்டா வழங்க கோரி குமரி ஆட்சியரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பேரை காலனியில் 65 வருடங்களுக்கு முன்னே பனையோலை சொசைட்டி இலவசமாக வீடுகள் வழங்கப்பட்டது. வீடுகள் வழங்கப்பட்ட நாளிலிருந்து 2018 வரை வீட்டு வரி செலுத்தி வந்துள்ளோம். அதற்கு பிறகு நாங்கள் வீட்டு வரி செலுத்தும்போது வீட்டு வரி கட்ட அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களது வீட்டிற்கு பட்டா வழங்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.
குமரி: கடலில் மிதந்த மாணவனின் சடலம்; பரபரப்பு
வள்ளவிளை அருகே மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரிற்றில் ரோய் (16). இவர் தூத்தூர் கடற்கரை பகுதியில் உள்ள பயஸ் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவருக்கு கால்பந்து விளையாடுவதில் மிகவும் ஆர்வம் உள்ளதாக கூறப்படுகிறது. இவரும் இவரின் நண்பர்கள் இருவரும் சேர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (11-ம் தேதி ) பொழியூர் பொழிமுகத்துக்கு சென்றுள்ளனர். பொழிமுகத்தின் மறுகரையில் கால்பந்து விளையாடுவதை பார்த்து இவர்கள் மூன்று பேரும் பொழி முகத்தை கடந்து கால்பந்து விளையாடும் மைதானத்திற்கு செல்ல முயற்சித்தனர்.
அப்பொழுது திடீர்னு இந்த மாணவன்...
நாகர்கோவிலில் சீரமைக்கப்பட்ட சாலைகளை ஆணையர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் 52 வார்டுகளிலும் பழுதடைந்து காணப்பட்ட பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தார் சாலையாகவும், கான்கிரீட் தளமாகவும் போடப்பட்டு வருகின்றன. அவ்வாறு சீரமைக்கப்பட்ட சாலைகளைஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அந்த வகையில் தம்மத்துக்கோணம், வண்ணான்விளை, ஆயுதப்படை மைதான சாலை மற்றும் பிள்ளையார்புரம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். ஒப்பந்தத்தில் கூறப்பட்ட அளவில் சாலை உயரம் உள்ளதா? சாலையானது தரமானதாக போடப்பட்டு உள்ளதா என்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பத்மநாபபுரம்: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணி
பத்மநாபபுரம் நகராட்சி உரக்கிடங்கு மருந்து கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. நகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொண்டுவரப்பட்டு மட்டும் குப்பை, மட்கா குப்பை என பிரிக்கப்படுவதுடன் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நகரில் உள்ள கழிவு நீரை கொண்டு வந்து சுத்திகரிக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஐ யு டிஎம் மற்றும் 15ஆவது நிதி குழு சார்பில் ரூபாய் ஒரு கோடியே 85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியினை பூமி...
அருமனை: பெட்டிக்கடையில் குட்கா விற்ற நபர் கைது
அருமனை அருகே உள்ள குழிச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (44). அந்த பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து பள்ளி மாணவர்கள் உள்ளிட்டவருக்கு விற்பனை செய்வதாக அருமனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸ் எஸ் ஐ சரவணன் தலைமையிலான போலீசார் பெட்டிக்கடைக்கு நேற்று சென்று சோதனை நடத்தினர். அப்போது கடையில் எட்டு பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இது அடுத்து போலீசார்...
பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அஸம் நீக்கம்
இஸ்லாமாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து பாகிஸ்தான் வீரர் பாபர் அஸம் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தானை, இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர்...
ஆசிய டேபிள் டென்னிஸ் இந்தியாவுக்கு 3 பதக்கம்
புதுடெல்லி: ஆசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
கஜகஸ்தானின் அஸ்டானாவில் இந்த போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் அரை இறுதிப் போட்டியில் இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி ஜோடி 411, 9-11, 8-11 என்ற கணக்கில் ஜப்பானின் மிவாஹரிமோட்டோ, மியூகிஹாரா ஜோடியிடம் தோல்வி கண்டது. மகளிர் அணிப் பிரிவில் மணிகா பத்ரா, அய்ஹிகா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி ஆகியோரைக் கொண்ட இந்திய அணி, அரை இறுதியில் ஜப்பானிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வி கண்டது.
ஆடவர்...
கேப்டனும், பயிற்சியாளரும் கொடுத்த சுதந்திரத்தால் சாதித்தோம்: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி
ஹைதராபாத்: வங்கதேச அணிக்கெதிரான சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் கேப்டனும், பயிற்சியாளரும் கொடுத்த சுதந்திரத்தால் சாதித்தோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
வங்கதேச அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன் தினம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.
சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 111, அபிஷேக் சர்மா 4, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில்...














