Home 2024
Yearly Archives: 2024
ஹாக்கி இந்தியா லீக் போட்டி: ஹர்மன்பிரீத் சிங் ரூ.78 லட்சத்துக்கு ஏலம்
புதுடெல்லி: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் பங்கேற்கவுள்ள சூர்மா ஹாக்கி கிளப் அணி சார்பாக இந்திய ஹாக்கி அணியின் கேட்டன் ஹர்மன்பிரீத் சிங் ரூ. 78 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்ஐ) சார்பில் ஐபிஎல் போட்டி பாணியில் ஹாக்கி இந்தியா லீக் (எச்ஐஎல்) போட்டி கடந்த 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கடைசியாக 2017-ல் நடைபெற்ற எச்ஐஎல் போட்டியில் கலிங்கா அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின்னர் 6 ஆண்டுகளாக இந்த தொடர் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது 7 ஆண்டுகளுக்கு பின்னர்...
வாஷிங்டன் சுந்தருக்கு சிறந்த ஃபீல்டர் விருது
புதுடெல்லி: வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு சிறந்த ஃபீல்டர் விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது பெற்றது குறித்து வாஷிங்டன் சுந்தர் கூறும்போது, “இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் மற்றும் பயிற்சிக் குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஃபீல்டிங்கில் என்னுடைய 100 சதவீத திறமையை வெளிக்கொண்டு வர முயற்சி செய்கிறேன்” என்றார். இந்தத் தொடரில் 3 விக்கெட்களை வாஷிங்டன் சுந்தர் கைப்பற்றியிருந்தார்.
தலித், நலிவுற்ற மக்களை இந்துக்கள் ஆதரிக்க வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் வேண்டுகோள்
நாக்பூர்: மகாராஷ்டிராவின் நாக்பூரிலுள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நேற்று முன்தினம் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.
இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகமும் உதவி செய்ய வேண்டும். கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை பெண் டாக்டர் உயிரிழப்பு அவமானகரமான செயல். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க நாம் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். தர்மம் என்பது ஒரு மதம் கிடையாது. இது இந்தியாவின் அடையாளம். இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் இடையிலான போரால் உலகளவில் என்னென்ன...
அடுத்தாண்டு பருவமழைக்குள் மழைநீரை சேகரிக்க 10 லட்சம் கட்டமைப்புகள்: மத்திய அரசு தீவிரம்
புதுடெல்லி: மத்திய ஜல்சக்தி துறை அமைச்சக அதிகாரி கூறியதாவது: நாடு முழுவதும் நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கான புதிய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன்கீழ், நாடுமுழுவதும் தடுப்பணைகளை கட்டுதல், நீர்த்தேக்கங்களை உருவாக்குதல், கிணறுகளை ஆழப்படுத்தி சீரமைத்தல் உட்பட 10 லட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜல் சஞ்சய், ஜன் பகிதாரி (ஜேஎஸ்ஜேபி) என்ற இந்த புதிய முன்முயற்சி, கடந்த 2019-ம் ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள 256 மாவட்டங்களின் 1,592 தொகுதிகளில் தொடங்கப்பட்ட ‘‘எங்கே விழுந்தாலும், எப்போது விழுந்தாலும்...
ஆன்லைன் மூலம் மட்டுமே சபரிமலை தரிசனம்: கேரள அரசின் முடிவுக்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு
திருவனந்தபுரம்: ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்கள் மட்டுமே இனி சபரிமலை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற கேரள அரசின் முடிவுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நடப்பு ஆண்டுக்கான சபரிமலை சீஸன் நவம்பர் நடுப்பகுதியில் தொடங்க உள்ளது. சபரிமலையில் மண்டலம்-மகரவிளக்கு பூஜைகளுக்கு வரும் பக்தர்கள் இனி ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஸ்பாட்புக்கிங் எனப்படும் நேரடியாக வந்து பதிவு செய்யும் முறை இனி கிடையாது என கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் விஎன் வாசவன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த முறையால்...
உ.பி. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணியில் விரிசல்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 273 தொகுதிகளை கைப்பற்றி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்தது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி 37, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 தொகுதிகளைக் கைப்பற்றின. இந்த சூழலில் உத்தர பிரதேசத்தில் காலியாக உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்...
பயணிகள் குறைந்ததால் எம்ஜிஆரின் சொந்த ஊரில் மூடப்படும் ரயில் நிலையம் @ கேரளா
வடவனூர்: எம்ஜிஆர் இலங்கையின் கண்டியில் பிறந்தாலும், குழந்தைப் பருவத்திலேயே கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடகன்னிகாபுரத்துக்கு வந்துவிட்டார். அவரது குழந்தைப் பருவகாலம் முழுவதும் அந்த வடவனூர், வடகன்னிகாபுரம் கிராமங்களில்தான் கழிந்தது.
இந்த வடகன்னிகாபுரத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1898-ல் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. இது தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள பாலக்காடு ரயில்வே டிவிஷனின் கீழ் வருகிறது. இந்த பழமை வாய்ந்த ரயில் நிலையம் பாலக்காடு - பொள்ளாச்சி தடத்தில் அமைந்துள்ளது. 1898 முதல் 2008-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி வரை இந்த ரயில்...
3 ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம்: அல்ஜீரியா சென்றார் குடியரசுத் தலைவர் முர்மு
புதுடெல்லி: அக்டோபர் 13-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 3 ஆப்பிரிக்க நாடுகளில் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடந்த 9-ம் தேதி தெரிவித்தது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையின் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அரசு முறை பயணமாக அல்ஜீரியா, மவுரிடானியா மற்றும் மலாவி நாடுகளுக்கு புறப்பட்டார். இந்த 3 ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் பயணம்...
ஜம்மு காஷ்மீரில் முடிவுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “2019 ஆம் ஆண்டின் ஜம்மு காஷ்மீர் மறுகட்டமைப்பு சட்டத்தின் 73ஆவது பிரிவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் ஆட்சி அமைக்க தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து உரிமை கோரிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின் கீழ் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு...
குரூப் 4 காலி பணியிடங்களை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும்போது வெறும் 8,932 என நிர்ணயித்துள்ளதை மாற்றி குறைந்தபட்சம் 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுகளில் தொகுதி 4-ன் கீழ் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து...














