Google search engine
Home 2024

Yearly Archives: 2024

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான நல திட்டங்களை செயல்படுத்துவது அவசியம்: இபிஎஸ்

சென்னை: தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நலத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் மாணவ, மாணவிகள் விடுதிகளில் குடிநீர் சுத்திகரிக்கும் கருவிகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. மாணவர்களின் ஆங்கில மொழிப் புலமையை அதிகரிக்க, சிறப்பு ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. 8,800 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ.265 கோடியில் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு,...

உபா சட்டத்தின்கீழ் சிறைப்படுத்தப்பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கை: திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை: உபா சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப் பட்டுள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சாய்பாபா மறைவெய்திய செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவர், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற பொய்யான குற்றச்சாட்டின் பேரில் 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு கொடுமையான உபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். மாற்றுத்திறனாளியான அவருக்கு அவர் பயன்படுத்தும் சக்கர நாற்காலியைக் கூட கொடுக்காமல் சிறையில் கொடுமைப்படுத்தினார்கள். 10 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த...

நடிகர் விஜய் கட்சி மாநாடு: தொகுதிவாரியாக தற்காலிக பொறுப்பாளர் நியமனம் – புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்க தற்காலிக பொறுப்பாளர்களை நியமனம் செய்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் அறிவித்துள்ளார். நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை என்ற கிராமத்தில் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடியில் கொடி கம்பம் அமைக்கவும் திட்டமிட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. கட்சி மாநில மாநாட்டு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 27 குழுக்களை அமைத்து, அதற்கான தலைவர்கள்,...

போக்குவரத்து கழகங்களுக்கு 1,614 பேருந்துகள் கொள்முதல்: டெண்டர் கோரும் அறிவிப்பு வெளியீடு

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,614 பேருந்துகளை தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சாலை போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டஅறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. அந்த வகையில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு ஏற்ப கேஎப்டபிள்யூ என்னும் ஜெர்மன் வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெறப்படும் நிதியுதவியில் குளிர்சாதன வசதியில்லா பிஎஸ் 6 வகையிலான 1,614 டீசல் பேருந்துகள் புதிதாக கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதில், மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 245, விழுப்புரம்...

உள்ளாட்சி அமைப்புகளின் மறு வரையறையால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாதிப்பு: மமக எம்எல்ஏ அப்துல் சமது கருத்து

திருவாரூர்: மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது, மும்மொழிக் கொள்கைக்கு வழி வகுப்பதாகவும், இந்தி திணிப்பை வலியுறுத்துவதாகவும் உள்ளது. மேலும், 3, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது, மாணவர்கள் இடைநிற்றலை அதிகப்படுத்தும். இதனால், பள்ளிக்கல்வி படுமோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்ற அச்ச உணர்வு நீடிக்கிறது. இதன் காரணமாகவே தமிழக அரசு, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது. உள்ளாட்சித் தொகுதிகள் மறு வரையறை என்பது...

10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் அட்டவணை: அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியீடு

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புக்கான 2024-25 கல்வியாண்டின் பொதுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (அக்டோபர் 14) காலை வெளியிட்டார். அதன்படி, “பிளஸ் 2 செய்முறைத் தேர்வு அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி 7-ல் தொடங்கி பிப்ரவரி 14-ல் முடிவடையும். பிளஸ் 1 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 15-ல் தொடங்கி பிப்ரவரி 21-ல் நிறைடவையும், 10-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 22 தொடங்கி 28 ஆம் தேதி நிறைவுபெறும். 12 ஆம் வகுப்பு...

நாகர்கோவிலில் பெண்ணை ஹெல்மெட்டால் தாக்கியவர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் நெல்சன் ஜாய். இவரது மனைவி உஷா (வயது 50). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த அடைக்கல ஆனந்த் (45) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் உஷா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குவைத்து அடைக்கல ஆனந்தை பார்த்த உஷா, கொடுத்த பணம் மற்றும் நகையை கேட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட, ஆத்திரத்தில் அடைக்கல ஆனந்த் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால்...

குமரி: வடகிழக்கு பருவ மழையை சமாளிக்க தயார்- அமைச்சர்

“வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில முழுவதும் ஒரு உயிர் சேதம் கூட ஏற்படாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பதாக" அமைச்சர் தங்கம் தென்னரசு நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

தக்கலை: ஆசை வார்த்தை கூறி ரூ. 35 லட்சம் மோசடி

தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியை சேர்ந்த ஸ்வீட்லின் ஞானரெஜி ( 47). இவர் அங்குள்ள உள்ள ஒரு சொகுசு விடுதியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த விடுதியில் கேரள மாநிலம் பகுதியை சேர்ந்த சனல் (37) என்பவர் தங்கியுள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் பேரில் சனல் தமிழகத்தில் அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் நல்ல பழக்கம் உள்ளதாக கூறியுள்ளார். இதை நம்பிய ஸ்வீட்லின் ஞானரஜி தனது மனைவிக்கு அரசு கல்லூரியில் பேராசிரியர் வேலை வாங்கித் தர கேட்டு, சனலிடம் ரூ. 35 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தை...

கருங்கல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார மாநாடு

0
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிள்ளியூர் கிழக்கு வட்டார ஒன்பதாவது மாநாடு நேற்று கருங்கலில் நடைபெற்றது. முதலில்   மறைந்த தலைவர்கள் ஜி. எஸ். மணி, ராஜ், மரியநாயகம் , ஜெயக்குமார், மத்தியாஸ் நினைவரங்கம் நடைபெற்றது. மாநாட்டு கொடியை வட்டார கமிட்டி உறுப்பினர் சோபனராஜ் ஏற்றிவைத்தார்.   மாநாட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் அந்தோணி தொடங்கி வைத்தார். வட்டார செயலாளர் சாந்தகுமார் வேலை அறிக்கையும், நிதிகாப்பாளர் றசல்ராஜ் நிதிநிலை அறிக்கையும் முன்வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின்தாஸ் பேசினார். மாநாட்டை நிறைவு செய்து...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...