Google search engine
Home 2024

Yearly Archives: 2024

காப்புக்காடு: குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்

புதுக்கடை காவல் நிலையம் மற்றும் விளாத்துறை ஊராட்சி பொதுமக்கள் இணைந்து போதை மற்றும் கஞ்சா , பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்களுக்கு எதிரான  விழிப்புணர்வு முகாம் நேற்று (13-ம் தேதி) மாலை 6 மணிக்கு நடைபெற்றது. காப்புக் காட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஜானகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.   இதில் குமரி முத்தமிழ் மன்ற தலைவர் முழங்குழி பா. லாசர், மற்றும் சொல்வேந்தர்  பாபு, விளைத்துறை ஊராட்சி தலைவர் ஓமனா, ஒன்றிய கவுன்சிலர் சிவகாமினி , வார்டு...

நித்திரவிளை: வீட்டின் மீது முறிந்து விழுந்த மின்கம்பம்

நித்திரவிளை அருகே இரவிபுத்தன் துறை செயிண்ட் ஜோசப் காலனி பகுதியை சேர்ந்தவர் பவுலி (55). இவரது கணவர் ஜான்ரோஸ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர் தனது இரண்டு மகள்களுடன் நேற்று காலை 8 மணி அளவில் வீட்டின் உள்ளே இருக்கும்போது, வீட்டின் அருகே நிற்கும் மின் கம்பம் இரண்டாக உடைந்து பவுலின் வீட்டின் மேல் விழுந்து உள்ளது. அதிர்ஷ்டவசமாக மின்கம்பம் உடைந்து விழுந்த போது மின்சாரம் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் அறிந்து நம்பாளி மின் அலுவலக ஊழியர்கள்...

நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் விஜயதசமி வாழ்த்து

புதுடெல்லி: விஜயதசமி தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “விஜயதசமியின் புனிதமான தருணத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி விழா. இந்த திருவிழா உண்மை மற்றும் ஒழுக்கத்தின் மதிப்புகளில் நமது நம்பிக்கையை குறிக்கிறது. மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் நீதியின் பக்கம் நிற்போம் என்று இந்த நல்ல சந்தர்ப்பத்தில் உறுதிமொழி...

‘இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?’ – ரயில் விபத்தை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: “அரசு விழித்துக் கொள்ளும் முன் இன்னும் எத்தனைக் குடும்பங்கள் அழிய வேண்டும்” என்று மைசூரு தார்பங்கா ரயில் விபத்தை சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இது தொடர்பாக அவர் இன்று (அக்.12) தனது எக்ஸ் பக்கத்தில், “மைசூரு - தார்பங்கா ரயில் விபத்து பாலாசோர் விபத்தின் கோரத்தை நினைவூட்டுகிறது. ஒரு பயணிகள் ரயில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற விபத்துகளில் நிறைய உயிர்ப்பலிகள் ஏற்பட்டுவிட்டன. அவற்றிலிருந்து கற்றுக் கொள்ளப்பட்ட பாடம் என்ன?. பொறுப்பேற்பு...

“வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்” – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் 

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார். மேலும், “கவரைப்பேட்டை ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக 10 இடங்களில் திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ரயில் பயணிகளை பாதுகாப்பாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க 20 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது” என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார். சென்னையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று (அக்.12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:...

IND vs NZ டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு – பும்ரா துணை கேப்டன்

மும்பை: நியூஸிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் துணை கேப்டனாக பும்ரா அறிவிக்கப்பட்டுள்ளார். 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 170 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். வரும் 16-ம் தேதி முதல் இந்த தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி 24-ம் தேதி அன்று புனேவில் நடைபெறுகிறது. கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நவம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது. வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட்...

லாவோஸில் பிரதமர் மோடியை சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

வியன்டியன்: லாவோஸில் பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்திப்பு. காலிஸ்தான் பிரிவினைவாதியின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த ஓராண்டுக்கு முன்பு ட்ரூடோ குற்றம்சாட்டினார். இந்நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ‘ஆசியான்’ என அழைக்கப்படுகிறது. அதேபோல, கிழக்கு ஆசியா அமைப்பில் 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த 2 அமைப்புகளின் உச்சி மாநாடுகள் லாவோஸ் நாட்டின் தலைமையில் அந்நாட்டின் தலைநகர் வியன்டியேனில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தான் பிரதமர் மோடி மற்றும் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துள்ளனர். இது...

திருச்சியில் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய விமானிக்கு குவியும் வாழ்த்துகள்

திருச்சி: திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு நேற்று மாலை புறப்பட்ட விமானத்தில் தொழில்நுடப் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்த விமானம் மீண்டும் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், விமானிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த விமானத்தில் 141 பயணிகள் இருந்தனர். முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் மக்கள் விமானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்தது: “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பாதுகாப்பாகத்...

மோசமான வானிலை: துபாய் – கோழிக்கோடு விமானம் கோவையில் தரையிறக்கம்

கோவை: மோசமான வானிலை காரணமாக துபாயில் இருந்து கோழிக்கோடு சென்ற விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது. துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி இன்று (அக்.12) காலை சென்று கொண்டிருந்த 'ஃப்ளை துபாய்' நிறுவனத்தை சேர்ந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணித்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவிய காரணத்தால் அரை மணி நேரத்துக்கு மேல் வானில் வட்டமிட்ட அந்த விமானம் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதையடுத்து இன்று காலை 7. 45 மணியளவில் கோவையில்...

சட்டக் கல்லூரி மாணவருக்கு தமிழ் வழி கல்வி சான்றிதழ்: உயர் நீதிமன்றம்  உத்தரவு.

மதுரை: மதுரை சட்டக் கல்லூரி மாணவருக்கு தமிழ் வழி கல்விச் சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் தீபக் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் மதுரை சட்டக் கல்லூரியில் கடந்த 1997-ல் தமிழ் வழியில் சட்டம பயின்றேன் .குற்றவியல் வழக்கறிஞர் பணியிடத்திற்கான தேர்வு எழுத உள்ளேன். எனவே, தமிழ் வழியில் பயின்றதற்கான பிஎஸ்டிஎம் (PSTM) சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார் . இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், “1978 கல்வித்துறை அரசாணையின்படி,...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...