Google search engine
Home 2024

Yearly Archives: 2024

கவரைப்பேட்டை ரயில் விபத்து: மீட்கப்பட்ட பயணிகள் சிறப்பு ரயில் மூலம் அனுப்பிவைப்பு

சென்னை: சென்னை அருகே நேற்றிரவு விபத்துக்குள்ளான மைசூரு - தார்பங்கா பாகமதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் மாற்று ரயில் மூலம் இன்று (அக்.12) காலை 4.45 மணியளவில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மைசூருவில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில் கும்மிடிபூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் இரண்டு பெட்டிகள் தீ பிடித்து எரிந்தன. பயணிகள் சிறு காயங்களுடன் தப்பித்த நிலையில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம்...

கவரைப்பேட்டை ரயில் விபத்து: மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட ரயில்கள்

சென்னை: கவரைப்பேட்டையில் மைசூருவில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெட்டிகளில் தீ பிடித்தது. வெள்ளிக்கிழமை (அக்.11) இரவு 8.27 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மீட்பு பணிகள் தற்போது அங்கு நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் 12 முதல் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டது. உயிரிழப்பு ஏதும் இந்த விபத்தில் ஏற்படவில்லை என தகவல் கிடைத்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய...

கோட்டார் காவல் நிலையத்தில் ஆயுத பூஜை விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று (அக்.,11) போலீசார் காவல் நிலையத்தை தூய்மைப்படுத்தி காவலர்களின் வாகனங்கள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்டவற்றிற்கு மாலை அணிவித்து பூஜை செய்து ஆயுத பூஜையை விமர்சையாக கொண்டாடினர். இதில் ஏஎஸ்பி லலித்குமார், ஆய்வாளர் அருள்பிரகாஷ் முன்னிலையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்

குமரி: விளையாட்டு பொருட்களுக்கு ஆயுத பூஜை..சிறுவனின் வைரல் வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடையை சேர்ந்த ஷாஜு என்பவரின் 3 வயது சிறுவன் ஷாமல் யாத்ராவுக்கு அவரது பெற்றோர் விளையாடுவதற்காக பல்வேறு வகையான விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர். நேற்று (அக்.,11) ஆயுத பூஜையை ஒட்டி விளையாட்டுப் பொருட்களை ஒரே இடத்தில் வைத்து சிறுவன் ஷாமல் யாத்ரா பூஜை செய்து தரையில் படுத்து வணங்கி ஆயுத பூஜையை கொண்டாடியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அருமனை: சாலையில் ஜல்லி குவியல்; போக்குவரத்து பாதிப்பு

அருமனை அடுத்த இடைக்கோடு பஞ்சாயத்து 17 வது வார்டுக்கு உட்பட்ட உத்தரங்கோடு பகுதி உள்ளது. இந்த சாலை மார்த்தாண்டத்தில் இருந்து மலையோர பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாகும். இந்த பகுதியில் மழை நீர் வடிகால் ஓடை செய்யும் பணி நடைபெற உள்ளது. இதற்க்காக இன்று (அக்.,12) சாலையில் நடுவே ஜல்லி குவியை கொட்டியுள்ளனர். இதனால் இந்த பகுதியில்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர். எனவே சம்மந்தபட்ட பகுதியில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நித்திரவிளை: கலிங்கராஜபுரத்தில் முதியவர் மாயம்

நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் பாவல்ஸ் (63). மீன்பிடி தொழிலாளி. தற்போது வேலை செய்ய முடியாமல் வீட்டில் இருந்துள்ளார்.   இவரது மனைவி தாமஸ் மேரி. சம்பவ தினம் தாமஸ் மேரி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது பாவல்சை காணவில்லை. அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தாமஸ் மேரி நித்திரவிளை போலீசில் தனது கணவரை கண்டுபிடித்து தர கேட்டு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முச்சதம் விளாசினார் ஹாரி புரூக்: தோல்வியின் பிடியில் பாகிஸ்தான்

முல்தான்: பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் முச்சதம் விளாசியதால் முதல் இன்னிங்ஸில் அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது. முல்தானில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 556 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து, 3-ம் நாள் ஆட்டநேர இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 492 ரன்கள் குவித்திருந்தது. இந்நிலையில் நேற்று 4-ம் நாள் ஆட்டத்தை ஜோ ரூட் 176, ஹாரி புரூக் 141 ரன்களுடன் தொடங்கினர். தொடர்ந்து அபாரமாக...

பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

புதுடெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) முதல் பெண் தலைவரான பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே ஐஓஏ கவுன்சில் உறுப்பினர்கள் விதிகளை மீறி செயல்படுகின்றனர் என்று பி.டி.உஷா குற்றம்சாட்டி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், ஐஓஏ தலைவருக்கான அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக செயல்படுகிறார் என அவர் மீது உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இந்திய ஒலிம்பிக்...

2018 – 2020 சொதப்பல்… 2021-ல் இருந்து ‘வேற லெவல்’ – ‘ரூட்டுத் தல’ ஆன ஜோ ரூட்!

முல்டானில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டெஸ்ட் வரலாற்றில் இல்லாத விசித்திர முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் ஜோ ரூட் 262 ரன்களை விளாசி, ஹாரி புரூக்குடன் சேர்ந்து 454 ரன்கள் கூட்டணி அமைத்து பல டெஸ்ட் சாதனைகளை முறியடித்தார். மேலும் ஒரே காலண்டர் வருடத்தில் ஆயிரம் ரன்களை 5வது முறையாக எடுத்து சாதித்துள்ளார் ஜோ ரூட். பாகிஸ்தானுக்கு இப்படித் தோற்பது ஒன்றும் புதிதல்ல என்பது வேறு கதை! எப்படி சில அணிகள் வெற்றி பெற முடியாத சூழ்நிலையிலிருந்து வெற்றி...

ஹைதராபாத்தில் நாளை இந்தியா, வங்கதேசம் இடையேயான 3-வது டி20 போட்டி

ஹைதராபாத்: இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி நாளை (அக்டோபர் 12) ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் தொடங் கியது. குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...