Google search engine
Home 2024

Yearly Archives: 2024

ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால்

தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரஃபேல் நடால். அடுத்த மாதம் நடைபெறும் டேவிஸ் கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார். 38 வயதான ரஃபேல் நடால், இதுவரை ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதில் 14 பட்டங்கள் பிரெஞ்சு ஓபன் தொடரில் வென்றதாகும். சுமார் 20+ ஆண்டு காலம் களிமண் களத்தில் தனது ஆட்டத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தியவர். கடைசியாக கடந்த 2022-ல் பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றிருந்தார். இந்த சூழலில் எதிர்வரும் டேவிஸ் கோப்பை...

மும்பையில் கனமழை: தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரம் மற்றும் அதனையொட்டி உள்ள பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பொழிவு. இடி, மின்னலுடன் மழை பொழிந்த காரணத்தால் நவராத்திரி கொண்டாட்டத்தில் இடையூறு. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மும்பை, பால்கர், தானே, ராய்காட், புனே மற்றும் பிற பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது. மழையின் போது பலத்த காற்றும் வீசியது. தானே, முலுண்ட், குர்லா, காட்கோபர், தாதர், வோர்லி, பாந்த்ரா, பிகேசி, போரிவலி, அந்தேரி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்.11)...

பாரதம் போற்றும் கொடை வள்ளல், தொழில் புரட்சி நாயகன்: தொழிலதிபர் ரத்தன் டாடா மறைந்தார்

மும்பை: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (86) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவில் காலமானார். அவரது உடல் மும்பையில் நேற்று தகனம் செய்யப்பட்டது. கடந்த 1937-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி நவால் டாடா, சூனி கமிசாரியட் தம்பதியின் மூத்த மகனாக ரத்தன் டாடா பிறந்தார். மும்பை, சிம்லா, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த அவர் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிட பொறியியலில் பட்டம் பெற்றார். கடந்த 1962-ம் ஆண்டில் டாடா குழுமத்தில் பணியில் சேர்ந்தார். தனது உழைப்பு, புத்திகூர்மையால்...

ஹரியானா தோல்வி: கார்கே தலைமையில் ஆலோசனை

புதுடெல்லி: ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக பாஜக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இது, அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஹரியானா தேர்தலில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்வி குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. உயர்மட்ட தலைவர்கள் அடங்கிய இதற்கான கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுசெயலர்...

சட்டப் பேரவைத் தலைவராக தேர்வு: காஷ்மீர் முதல்வராகிறார் உமர் அப்துல்லா

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் (ஜேகேஎன்சி) சட்டப் பேரவைக் குழு தலைவராக உமர்அப்துல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச முதல்வராக அவர் விரைவில் பதவியேற்கவுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கடந்த 2019-ல் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த அரசியலமைப்பு சட்டத்தின் 370—வது சிறப்புப் பிரிவு நீக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1-ம் தேதிகளில் 3 கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 8-ம் தேதிவெளியான முடிவுகளில் தேசிய மாநாடு...

கும்பமேளாவில் சனாதனி அல்லாதவர் உணவு விடுதி அமைக்க தடை: அகில இந்திய அகாடா பரிஷத் தீர்மானம்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பிரம்மாண்டமான கும்பமேளா விழா தொடங்க உள்ளது. இதை அகில இந்திய அகாடா பரிஷத்தினர் நடத்துகின்றனர். இந்நிலையில், கும்பமேளா விழா ஏற்பாடுகள் குறித்து அவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். விழா தொடர்பான பல தீர்மானங்களை இயற்றி அவற்றை அமல் படுத்தும்படி உ.பி. மாநில அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், அகாடா பரிஷத்தினர் நேற்று நடத்திய கூட்டத்தில் சில புதிய தீர்மானங்களை இயற்றியுள்ளனர். அதன்படி, கும்பமேளாவில் உணவு விடுதிகளை சனாதனத்தினர் மட்டுமே அமைக்க வேண்டும். சனாதனி...

“ஏழைகளின் ரட்சகர்” – ரத்தன் டாடா உடனான நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த மும்பை செய்தித்தாள் முகவர்!

மும்பை: ரத்தன் டாடாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த செய்தித்தாள் விற்பனை செய்துவரும் ஹரிகேஷ் சிங் என்பவர் டாடா குறித்து பகிர்ந்துள்ள தகவல்கள் வைரலாகி வருகின்றன. பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பல்துறை பிரபலங்கள் தொடங்கி சாமானிய மக்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல், மும்பை வோர்லி மயானத்தில் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது....

கோயில் நிலத்தை விற்க முயன்றதாக புகார்: காரைக்கால் துணை ஆட்சியரிடம் விசாரணை

காரைக்கால்: கோயில்பத்து பகுதியில் பார்வதீஸ்வரர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அரசு மனைப் பட்டா வழங்குவதாகக் கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக காரைக்கால் துணை ஆட்சியர் ஜி.ஜான்சன் போலீஸில் புகார் அளித்தார். மேலும், வருவாய்த் துறை சார்பில் யாருக்கும் மனைப் பட்டா வழங்கவில்லை என்றும், இதுதொடர்பாக மக்கள் யாரிடமும் பணம் தர வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தார். இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறி யிருப்பதாகவும், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து காரைக்காலைச் சேர்ந்த...

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மருத்துவ பரிசோதனை

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி (72), பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலை மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார். அவர் மருத்துவமனைக்கு வந்தபோது, மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை. சில பரிசோதனைகள் செய்த பின், மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு திரும்பினார். வழக்கமான பரிசோதனைக்காக ஆளுநர் வந்து சென்றதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

அறத்துடன் கூடிய தொழிலுக்கு அளவுகோலாக திகழ்ந்தவர்: ரத்தன் டாடா மறைவுக்கு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்

சென்னை: தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி: ஆளுநர் ஆர்.என்.ரவி: மிகச்சிறந்த தேசியவாதியும், ஒப்பற்ற தொழிலதிபரும், எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த மனிதருமான ரத்தன் டாடாவின் மறைவால் ஆழ்ந்த வருத்தமுற்றேன். அவரது மறைவு ஒரு மிகப்பெரிய தேசிய இழப்பு. முதல்வர் மு.க.ஸ்டாலின்: ரத்தன் டாடாவின் தொலைநோக்கு மிக்க தலைமை டாடா குழுமத்தின் வளர்ச்சியை வடிவமைத்ததோடு அறத்துடன் கூடிய தொழில்புரிதலுக்கான அளவுகோலாகவும் உலக அளவில் விளங்கியது. நாட்டின் வளர்ச்சியிலும் புதுமையிலும் மனிதநேயச்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...