Home 2024
Yearly Archives: 2024
சென்னை பெசன்ட் நகரில் இன்று ‘முரசொலி’ செல்வம் உடல் தகனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் சகோதரரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மைத்துனருமான முரசொலி செல்வம் பெங்களூரில் நேற்று காலமானார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘நான் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை இழந்து நிற்கிறேன்’ என உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘முரசொலி’ நாளிதழில் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றிவர் முரசொலி செல்வம் (82). இவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சகோதரி மகனும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடன்பிறந்த சகோதரரும் ஆவார். கருணாநிதியின் மூத்த...
4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் டிஆர்பி தேர்வு மூலம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கோவி.செழியன், துறையின் செயல்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உயர்கல்வித் துறை செயலர் கே.கோபால், தொழில்நுட்ப கல்வி ஆணையர் ஆபிரகாம், கல்லூரி கல்வி...
15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:
லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மத்திய கிழக்கு அரபிக் கடலில் கர்நாடகா– கோவா கடற்கரை பகுதிகளில் நீடிக்கிறது. இது, அடுத்த சில தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின்...
டாடா குடும்பத்தின் ‘ஊட்டி வரை உறவு’
உதகை: உதகையில் உள்ள ‘தி ரத்தன் டாடா ஆபீசர்ஸ் ஹாலிடே ஹோம்’ தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மரபைப் போற்றுவதாகவும், உதகையின் அடையாளமாகவும் திகழ்கிறது.
இதுகுறித்து நீலகிரி ஆவணக்காப்பக இயக்குநர் டி.வேணுகோபால் கூறியதாவது: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் தாத்தா சர் ரத்தன் டாடா. அவர் டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்செட்ஜி டாடாவின் 2-வது மகன்.சர் ரத்தன்ஜி கலையின் ஆர்வலராகவும், தானத்தில் சிறந்தவராகவும் இருந்தார். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் நிறைய பேருக்கு தாராளமாக நன்கொடை அளித்தார். 1916-ல் ஆங்கிலேய அரசுஅவருக்கு `நைட்' பட்டம் வழங்கியது. சர் ரத்தன்ஜி 1893-ல்...
சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதற்கான ஆதாரம் எதுவுமில்லை: ஹெச்.ராஜா கருத்து
விழுப்புரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
விழுப்புரத்தில் உள்ள பாஜகஅலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஹரியனா, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் ஆதரவு ஊடகங்களின் பொய்பிரசாரங்களையும் மீறி, அம்மாநிலமக்கள் சிந்தித்து வாக்களித்துள்ளனர். ஹரியானாவில் தேசியஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து, பிரதமரின் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் வழிபாட்டுக்கு கட்டணம்வசூலிக்கப்படுகிறது. ஆனால்,சிதம்பரம் நடராஜர் கோயிலில்...
நாகை மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகரணங்கள் பறிப்பு: இலங்கை கடல் கொள்ளையர் அட்டூழியம்
நாகப்பட்டினம்: நாகை மீனவர்கள் 18 பேர் மீது தாக்குதல் நடத்தி, அவர்களது வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
நாகை மாவட்டம் செருதூர் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், சக மீனவர்கள் 4 பேருடன் கடந்த 8-ம் தேதி காலை ஃபைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு 2 ஃபைபர் படகுகளில் வந்த இலங்கையை சேர்ந்த 9 கடல் கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி தமிழக மீனவர்களை...
ஆயுத பூஜை, தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு: சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் பயணம்
சென்னை: ஆயுதபூஜை, தொடர் விடுமுறை காரணமாக பேருந்து, ரயில்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் மட்டும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் கல்வி, பணி, தொழில் உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் தங்கியுள்ளனர். இவர்கள் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, நாளை விஜயதசமி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என பண்டிகையுடன் தொடர்...
கருங்கல்: சாம்சங் நிறுவன விவகாரம்; சி.ஐ.டி.யூ கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். தொழிற்சங்க அமைக்கும் பதிவை தொழிலாளர் துறை உடனடி செய்ய வேண்டும். உட்பட கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அடாவடித்தனமாக காவல்துறை அத்துமீறி தொழிலாளர்களையும், சங்க தலைவர்களையும் கைது செய்த செயலை கண்டித்தும் சிறையில் அடைத்தவர்களின் உடனடி விடுதலை செய்ய கோரியும் சி ஐ டி யூ சார்பில் கருங்கலில் நேற்று (அக்.,10) ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் ராஜா தலைமை தாங்கினார்....
கருங்கல்: போலீஸ்காரர் வீட்டு கதவு உடைத்து திருட்டு
கருங்கல் அருகே கம்பிளார் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் லாசர். இவர் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி, குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்த லாசர் கடந்த 2-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றார். 8-ம் தேதி பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர் தங்க லீலா என்பவரிடம் லாசரின் வீடு திறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து அங்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் சிதறி கிடந்தன....
குழித்துறை: நன்றி அறிவிப்பு கூட்டமாகமாறிய உண்ணாவிரத போராட்டம்
குழித்துறை அருகே மருதன்கோடு பகுதியில் இருந்த மகாத்மா காந்தி சிலை கடந்த மாதம் இரவில் மர்ம ஆசாமிகளால் சேதப்படுத்தப்பட்டது. இதில் குற்றவாளியை போலீசார் கைது செய்ய முடியாமல் திணறி வந்தனர். இதனை தொடர்ந்து மகாத்மா காந்தி சிலையை சேதப் படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கழுவன்திட்டையில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக காங்கிரஸ் கட்சியினர் நேற்று (அக்.,10) அங்கு கூடினர். அப்போது அங்கு வந்த மார்த்தாண்டம் போலீஸ் துணை சூப்பிரண்ட் நல்லசிவம் காந்தி சிலையை செய்த படுத்திய...














