காஞ்சிபுரம் சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். தொழிற்சங்க அமைக்கும் பதிவை தொழிலாளர் துறை உடனடி செய்ய வேண்டும். உட்பட கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அடாவடித்தனமாக காவல்துறை அத்துமீறி தொழிலாளர்களையும், சங்க தலைவர்களையும் கைது செய்த செயலை கண்டித்தும் சிறையில் அடைத்தவர்களின் உடனடி விடுதலை செய்ய கோரியும் சி ஐ டி யூ சார்பில் கருங்கலில் நேற்று (அக்.,10) ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் ராஜா தலைமை தாங்கினார். மீன் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சாகாய பாபு துவக்கி வைத்து பேசினார். போராட்டத்தை விளக்கி சி ஐ டியூ நிர்வாகிகள் செல்வதாஸ், ரசல் ஆனந்தராஜ், அல்போன்ஸ், கம்யூனிஸ்ட் மார்க் கட்சியின் ஒன்றிய செயலாளர் சாந்தகுமார் பேசினர். சிஐடியூ மாவட்ட துணைத்தலைவர் பொன். சோபனராஜ் முடித்து வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கெடுத்தனர்.