கருங்கல் அருகே கம்பிளார் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் லாசர். இவர் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி, குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்த லாசர் கடந்த 2-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றார். 8-ம் தேதி பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர் தங்க லீலா என்பவரிடம் லாசரின் வீடு திறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து அங்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் சிதறி கிடந்தன. இது குறித்து லாசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கூறியபடி சோதனை செய்ததில் பீரோவில் இருந்த ரெண்டே முக்கால் பவன் தங்க நகை மற்றும் வீட்டில் இருந்து செம்பு குட்டுவம், செம்புக்குடம் டேபிள் பேன், சேலைகள் ஆகியவை மாயமாகி இருந்தன. உறவினர் ஜிஸ்பா என்பவர் கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.