Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மார்த்தாண்டம்: வணிகர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு

மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வர்த்தக சங்க அரங்கத்தில் நேற்று (அக்.,10) நடைபெற்றது. புதிய தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜா செல்வராஜ் வரவேற்று பேசினார். புதிய செயலாளர் சுரேஷ் குமார் அறிமுக உரை நிகழ்த்தினார். விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரம் ராஜா புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: -  வணிகர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நீங்கள் முதல் ஆளாக நிற்க வேண்டும். மார்த்தாண்டம் மேம்பாலம் பழுதுபோட்டுள்ளது....

நாகர்கோவிலில் உலக மனநல தின விழிப்புணர்வு ஊர்வலம்

மனநலம் குறித்த விழிப்புணர்வையும், சிகிச்சை முறை அதன் தேவை குறித்த விழிப்புணர்வையும் பொது மக்களுக்கு ஏற்படுத்திட உலக மனநல தின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நேற்று (அக்.,10) மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பாக குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா துவக்கி வைத்தார்.

ஊட்டுவாழ் மடம் செல்லும் சுரங்கப்பாதை பணிகள் தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஊட்டுவாழ் மடத்திற்கு செல்வதற்காக சந்திப்பு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஊட்டுவாழ் மடத்திலிருந்து வருபவர்கள் சுரங்கப்பாதையில் வந்து இடது பக்கமாக செல்லும் வகையில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இப்பணிகள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்: ஆயுத பூஜையையொட்டி கண்ணை கவரும் மின் விளக்குகள்

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விழாக்களை முன்னிட்டு குமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பொன்ப்ப நாடார் வாடகை கார் ஓட்டுனர் சங்கம் சார்பாக ஆயுத பூஜையையொட்டி நேற்று (அக்.,10) கண்ணை கவரும் மின்விளக்குகள் அமைத்துள்ளனர். இந்த வண்ண மின் அலங்காரத்தை கண்டு களிக்க பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து பார்த்து செல்பி எடுத்தும் சென்றனர்.

அகில இந்திய முற்போக்கு பெண்கள் குமரி ஆட்சியரிடம் மனு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட சிங்கன்காவு பகுதியில் குடியிருப்பு பகுதியில் விதிமுறைகளை பின்பற்றாமல், பேக்கரி பண்டங்கள் உற்பத்தி செய்யும் நோக்கில் பேக்கரி துவங்குவதற்கான பணிகள் நடைபெறுகிறது. அரசு அனுமதி பெறாமல் நடைபெறும் இந்த பேக்கரியால் சுகாதார கேடு ஏற்பட வாய்புள்ளது. எனவே இந்த பேக்கரிக்கு தடை விதிக்க கோரி சி பி ஐ எம் எல் அகில இந்திய முற்போக்கு பெண்கள் நேற்று (அக்.,10) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரை இறுதியில் இந்திய அணி தோல்வி

அஸ்தானா: கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியா அரை இறுதி சுற்றில், ஜப்பானை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றது. ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர் அணி பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். ஜப்பான் அணிக்கு எதிரான மோதலில் முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி 2-3 (8-11 11-9 8-11 13-11 7-11)...

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 492 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி பதிலடி; ஜோ ரூட் சாதனை

முல்தான்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 3-வது நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 492 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது. ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோர் சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் குவித்திருந்த முன்னாள் வீரரான அலாஸ்டர் குக்கின் சாதனையை ஜோ ரூட் முறியடித்தார். முல்தான் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 149 ஓவர்களில் 556 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. கேப்டன் ஷான் மசூத் 151, சல்மான்...

இந்திய டெஸ்ட் தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு

ஆக்லாந்து: நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 16-ம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 17 பேர் கொண்ட நியூஸிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கேப்டனாக டாம் லேதம் அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த நட்சத்திர பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சனும் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர், முதல்கட்ட போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா யு-19 அணி வெற்றி

சென்னை: ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட்போட்டியில் இந்தியா யு-19 அணிஇன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள்வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தடெஸ்ட் போட்டியில் இந்தியா யு-19 அணி முதல் இன்னிங்ஸில் 492ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா யு-19 அணி 80.2 ஓவர்களில்277 ரன்களுக்கு ஆட்டமிழந்துபாலோ-ஆன் ஆனது. 215 ரன்கள்பின்தங்கிய நிலையில் நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்துவிளையாடிய ஆஸ்திரேலியா யு-19அணி 31.3 ஓவர்களில் 95 ரன்களுக்குசுருண்டது. இன்னிங்ஸ் மற்றும் 120ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற...

“மனிதநேய பண்பாளர்…” – ரத்தன் டாடாவுக்கு சூர்யா முதல் பிரியங்கா சோப்ரா வரை புகழஞ்சலி

சென்னை: தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மும்பை மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரத்தன் டாடா என்னுடைய ஹீரோ. என் வாழ்நாள் முழுவதும் நான் பின்பற்ற முயற்சித்த ஒருவர். தேசத்தை கட்டியெழுப்புவதில் அவரது பங்களிப்பு முக்கியமானது. நவீன இந்தியாவில் அவர் பெயர் எப்போதும் நிலைத்திருக்கும். நெறிமுறை, ஒருமைப்பாடு, மனிதநேயம், தேச பக்தி தான் அவரிடம் இருந்த உண்மையான செல்வம்....

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...