கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட சிங்கன்காவு பகுதியில் குடியிருப்பு பகுதியில் விதிமுறைகளை பின்பற்றாமல், பேக்கரி பண்டங்கள் உற்பத்தி செய்யும் நோக்கில் பேக்கரி துவங்குவதற்கான பணிகள் நடைபெறுகிறது. அரசு அனுமதி பெறாமல் நடைபெறும் இந்த பேக்கரியால் சுகாதார கேடு ஏற்பட வாய்புள்ளது. எனவே இந்த பேக்கரிக்கு தடை விதிக்க கோரி சி பி ஐ எம் எல் அகில இந்திய முற்போக்கு பெண்கள் நேற்று (அக்.,10) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.