மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிள்ளியூர் கிழக்கு வட்டார ஒன்பதாவது மாநாடு நேற்று கருங்கலில் நடைபெற்றது. முதலில் மறைந்த தலைவர்கள் ஜி. எஸ். மணி, ராஜ், மரியநாயகம் , ஜெயக்குமார், மத்தியாஸ் நினைவரங்கம் நடைபெற்றது. மாநாட்டு கொடியை வட்டார கமிட்டி உறுப்பினர் சோபனராஜ் ஏற்றிவைத்தார்.
மாநாட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் அந்தோணி தொடங்கி வைத்தார். வட்டார செயலாளர் சாந்தகுமார் வேலை அறிக்கையும், நிதிகாப்பாளர் றசல்ராஜ் நிதிநிலை அறிக்கையும் முன்வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின்தாஸ் பேசினார். மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் பெல்லார்மின் பேசினார். இளவேனில் நன்றி கூறினார்.
கருங்கலில் போக்குவரத்து பணிமனை அமைக்கவும், கடலோர பகுதிகளில் அணுசுரங்கம் அமைக்கும் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். கனிமவள பாறைகளை சூறையாடி மக்கள் வாழ்வாதாரங்களை பறிப்பதை தடைசெய்ய கேட்டும், மிடாலக்காடு பகுதியில் வானொலி கூண்டை இடித்து, குடிநீர் கிணறை மூடி சுற்றுபகுதியை தனிநபர் ஆக்கிரமித்ததை திரும்ப பெற கேட்டும், சேதமுற்ற சாலைகளை செப்பனிட கேட்டும், சிற்றாறு பட்டணம் கால்வாயை சீரமைத்து அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர்விட வலியுறுத்தியும் பல தீர்மானிக்கங்கள் நிறைவேற்ற பட்டன.