நித்திரவிளை: தீ விபத்தில் சிக்கியவர் உயிரிழப்பு

0
183

நித்திரவிளை அருகே காஞ் சாம்புறம் பகுதியில் தூத்தூர் பகுதியை சேர்ந்த ரொனால்டோ என்பவர் சைக்கிள் கடை வைத்துள்ளார். இந்த கடையில் கடந்த 9- ம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் மின்கசிவு காரணமாக திடீரென தீ பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது இந்த கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பள்ளம் மதுசூதனபுரம் பகுதியை சேர்ந்த வைரவன் (66) என்பவர் புகையில் சிக்கினார்.

தீயை அணைக்க வந்த தீயணைப்பு வீரர்கள் வைரவனை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த வைரவன் நேற்று (அக்.,15) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here