உயர் அதிகாரிகளின் சுணக்கத்தால் பதவி உயர்வின்றி ஓய்வுபெறும் காவல் அதிகாரிகள்

0
72

சென்னை: உயர் அதிகாரிகளின் சுணக்கத்தால், பதவி உயர்வின்றி டிஎஸ்பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் அடுத்தடுத்து ஓய்வு பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும், இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் 40-க்கும்மேற்பட்ட கூடுதல் எஸ்.பி பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், போதிய தகுதி இருந்தும் அந்த இடங்களில் பணியமர்த்தப்படாமல் டிஎஸ்பி எனப்படும் துணை கண்காணிப்பாளர்கள் (1996-ல் நேரடிஎஸ்.ஐ.யாக தேர்வு செய்யப்பட்ட வர்கள்) ஓய்வு பெறுகின்றனர்.

இந்தப் பதவி உயர்வு வழங்கப்படாததால் அதன்கீழ் தமிழகம் முழுவதும் உள்ள இன்ஸ்பெக்டர்கள் (1997-ம் ஆண்டு நேரடி எஸ்.ஐ), டி.எஸ்.பி.யாகப் பதவி உயர்வு பெற முடியாமல், அவர்களும் பணிஓய்வு பெறுகின்றனர். அதுமட்டுமின்றி இவர்கள், 12 ஆண்டு ஜூனியர்களுடன், ஒரே ரேங்க்கில் பணிசெய்யும் நிலையும் ஏற்பட்டுள்ள தாக சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், தகுந்த நேரத்தில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாததால், அடுத்த நிலையில் 2011 நேரடிஎஸ்.ஐ.யாகத் தேர்வு செய்யப்பட்ட வர்களுக்கும் இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு வழங்கப்படாத நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் சுணக்கமே காரணம் என கூறப்படுகிறது. எனவே, பணியில் உள்ள அனைவருக்கும், உரிய நேரத்தில் பதவிஉயர்வு வழங்க வேண்டும் என்றகோரிக்கை காவல் துறையினரிடையே வலுவடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here