மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள சர்வீஸ் ரோடு ஒருவழி பாதியாக உள்ளது. காந்தி மைதானத்தில் இருந்து செல்லும் அனைத்து டவுன் பஸ்களும் சர்வீஸ் ரோடு வழியாக சென்று வருகின்றன. இந்த ரோடு வழியாக தினசரி நூற்றுக்கணக்கான கார்கள், பள்ளி வாகனங்கள், பைக்குகளும் சென்று வருகின்றன.
இந்த நிலையில் ரோடு சுமார் ஆறு மாதமாக பல்லாங்குழிகளாக படுமோசமாக காணப்பட்டது. சில பகுதிகளில் குழிகள் ஒரு அடி ஆழத்துக்கு மேல் உள்ளது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. எனவே இதை சீரமைக்க பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
தற்போது மார்த்தாண்டம் சர்வீஸ் ரோட்டில் பல்லாங்குழிகளில் ஜல்லி தார் போட்டு முதல் கட்ட சீரைமைப்பு பணி நடக்கிறது. இதை நேற்று தாரகை கத்பட் எம்எல்ஏ பார்வையிட்டு, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.