வெள்ளிப் பதக்கம் வென்றார் தீபிகா குமாரி

0
75

டிலாக்ஸ்கலா: மெக்சிகோ நாட்டில் உள்ள டிலாக்ஸ்கலா நகரில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ரீகர்வ் பிரிவு இறுதி சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் தீபிகா குமாரி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன அணியில் இடம் பிடித்திருந்த லி ஜியாமனுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் தீபிகா குமாரி 0-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். உலகக் கோப்பை வில்வித்தை தொடரில் தீபிகா குமாரி பதக்கம் வெல்வது இது 5-வது முறையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here