Home 2024
Yearly Archives: 2024
திருவொற்றியூர் பள்ளி வாயு கசிவில் விலகாத மர்மம்: வல்லுநர்களின் உதவியை நாட அதிகாரிகள் திட்டம்
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக் கசிவுக்கான காரணம் புலப்படாததால் பல்துறை வல்லுநர்களின் உதவியை நாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
திருவொற்றியூர் கிராமத் தெரு பகுதியில் இயங்கும் விக்டோரியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் கடந்த அக்.25-ம் தேதி திடீரென பரவிய வாயு நெடி காரணமாக 39 மாணவிகள் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் முகமை மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில், பள்ளி வளாகத்தில் காற்றுத்தர பரிசோதனை நடத்தப்பட்டது. எனினும், வாயு...
நாகர்கோவிலில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்.
திருச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய நர்சை சில வாலிபர்கள் பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்தும், இரவு பணியில் ஈடுபடும் செவிலியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க கோரியும் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எம். ஆர். பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் ஜிஜி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கிறிஸ்டோபர், சி. ஐ. டி. யு. இந்திரா, ஹேமலதா, மாநில செயலாளர் சுபின்,...
வடசேரியில் மது விற்ற முதியவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று கிருஷ்ணன்கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற வரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வ. ஊ. சி. தெருவை சேர்ந்த முருகேசன் (வயது 65) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருவட்டாறு: ஆதிகேசவன் கோயில் கிருஷ்ணன் சன்னதி கொடியேற்றம்
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசித்திருவிழா கடந்த 31-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-வது நாளான நேற்று ( 4-ம் தேதி) இரவு கோவிலின் உள்ளே உள்ள திருவம்பாடி கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றம் நடந்தது.கோகுல் தந்திரி, கருட இலச்சினை பொறிக்கப்பட்ட கொடியை பூஜை செய்து கொடிமரத்தில் ஏற்றினார். விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு பரதநாட்டி யம், சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், தொடர்ந்து கதகளி ஆகியவை நடக்கிறது. நாளை (புதன்கிழமை) இரவு 9 மணிக்கு சாமி பல்லக்கில் பவனி வருதல்,...
மார்த்தாண்டன்துறை: நாலட்ஜ் பவுண்டேசன் சார்பில் கல்வி விருது
கிள்ளியூர் தொகுதி, மார்த்தாண்டன்துறையில் செயல்பட்டு வரும் நாலட்ஜ் பவுண்டேசன் சார்பில் கல்வியாண்டின் 10 மற்றும் 12-ம் வகுப்பு இறுதி தேர்வுகளில் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2023-2024 கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்களில் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மார்த்தாண்டன்துறையை சார்ந்த
அக்சயா, அஜினா ஆன்டணி, ஜெஸ்லின் ஆன்மார்ட்டின், சாண்டா தாஸ், ஜோயல் தார்த்தீஸ், பிறின்சி, பென்னா வில்சன், அக்சயா ஷிபானி, ஜெபின்சன் ஜாண் ஆகிய மாணவ, மாணவியர்...
கொல்லங்கோடு: கடத்தல் வாகனத்தை திருப்பி அனுப்பிய போலீசார்
கிள்ளியூர் பகுதிக்கு உட்பட்ட கொல்லங்கோடு காவல் நிலையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சொகுசு வேன் ஒன்றில் 8 மீனவர்கள் உட்பட 42 கேன்களில் 1500 லிட்டர் அரசின் மானிய விலை மண்ணெண்ணெய் இருந்துள்ளது. தமிழக மானிய விலை மண்ணெண்ணெய் கேரளா கொண்டு செல்வது சட்டப்படி குற்றம் என்று கூறி சொகுசு வேனை பறிமுதல் செய்து, கொல்லங்கோடு போலீஸ் நிலையம் கொண்டு வந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ...
பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.
மெல்பர்ன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் முகமது ரிஸ்வான் 44, பாபர் அஸம் 37, இர்பான் கான் 22, ஷாகீன் ஷாஅப்ரிடி 24 ரன்கள் சேர்த்தனர். இறுதிக்கட்டத்தில் நசீம் ஷா 39 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 40 ரன்கள் விளாசினார். ஆஸ்திரேலிய அணி தரப்பில்...
ஹாக்கியில் தமிழ்நாடு வெற்றி!
31 அணிகள் கலந்து கொண்டுள்ள ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது.
இதில் ‘சி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - ஆந்திரா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கேப்டன் கார்த்தி இரு கோல்கள் அடித்தார் (16 மற்றும் 57-வது நிமிடம்). செல்வராஜ் கனகராஜ் (21-வது நிமிடம்), திலீபன் (38-வது நிமிடம்), ஜோஷுவா பெனடிக்ட் வெஸ்லி (40-வது நிமிடம்), மனோஜ் குமார்...
தொலைந்து போன இந்திய அணியின் தற்காப்பு ஆட்டம்!
நியூஸிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3-0 என முழுமையாக இழந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
பெங்களூரு ஆடுகளத்தில் வானிலையும், டாஸில் எடுத்த முடிவும் எதிர்வினையாக அமைந்ததாக தோல்விக்கான காரணத்தை கற்பித்தது இந்திய அணி. தொடர்ந்து புனே டெஸ்ட் போட்டியில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான மிட்செல் சாண்ட்னரிடம் இந்திய அணி சரணடைந்தது. அப்போது ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை மேற்கொண்டால் மட்டுமே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற காரணம் முன்வைக்கப்பட்டது....
பயணிகளின் வசதிக்காக சூப்பர் செயலி: விரைவில் அறிமுகப்படுத்துகிறது ரயில்வே
தற்போது ரயிலில் பயணம் செய்வதற்கு பொதுமக்கள், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாகழகம் எனப்படும் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். 85 சதவீதம் பேர் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் சரக்கு ரயில் போக்குவரத்து, ரயில்வே சுற்றுலா என தனித்தனியாகச் செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ரயில் போக்குவரத்தை உபயோகிப்பவர்கள், ஒருங் கிணைந்த சேவை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.
இதைத் தொடர்ந்து ரயில்வேஅமைச்சகத்தின் அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பயன்படுத்தும் வகையில்சூப்பர் ஆப் எனும் செல்போன் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது....














