Google search engine
Home 2024

Yearly Archives: 2024

9-ம் தேதி அல்பாசி ஆராட்டு விழா: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் மூடல்

கேரள மாநிலம் திருவனந்தபுரத் தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோயில் உள்ளது. இங்குஆண்டுதோறும் ஐப்பசி மற்றும் பங்குனி மாத திருவிழாவின் போதுஇங்குள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படும். அதன்படி, ஐப்பசி திருவிழாவின் போது பரிவேட்டை மற்றும் ஆராட்டு விழா நடைபெறும். அப்போது பத்மநாப சுவாமி கோயிலில் இருந்து சுவாமி சிலைகள் வீதியுலாவாக எடுத்துச் செல்லப்படும். அந்த ஊர்வலம் ஆண்டுதோறும் திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதை வழியாகவே செல்லும். அதற்காகவே அன்றைய தினம் விமான நிலைய ஓடுபாதை மூடப்படும். ஏனெனில், நாடு சுதந்திரம்...

உ.பி.யின் பரேலி நகரில் தடையை மீறி எருமைகள் சண்டை நிகழ்ச்சி: மேனகா காந்தி புகாரில் நிகழ்ச்சியாளர்கள் மீது வழக்குப் பதிவு

 வட மாநிலங்களில் தீபாவளியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றில் ஒன்றாக பரேலியில் எருமைகள் சண்டை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை முடிந்த கோவர்தன் பூஜை அன்று ராணுவக் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற எருமைகள் சண்டை நிகழ்ச்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாயின. அதில், இரண்டு எருமைகள் ஆவேசமாக மோதிக் கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது. அங்கு சுற்றியிருந்த மக்கள்கைகளில் கம்புகளை வைத்துக் கொண்டு எருமைகள் ஓடிவிடாமல் இரண்டும் மோதிக் கொள்ள தூண்டுகின்றனர். இந்த மோதலில் ரத்தக்காயங்களுடன் எருமைகள் சண்டையிடுவதை கூட்டத்தினர் ஆரவாரமிட்டு...

விலங்குகளால் உயிரிழந்தால் இழப்பீடு ரூ.25 லட்சமாக உயர்வு: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

காட்டு விலங்குகள் தாக்கி உயிரிழக்கும் நபரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீடுத் தொகையை ரூ.25 லட்சமாக அதிகரித்து மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. உமரியா மாவட்டத்தில் உள்ளபாந்தவ்கர் புலிகள் காப்பகம் அருகே யானைகள் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய பிரதேசமுதல்வர் மோகன் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: யானைகள் உள்ளிட்ட காட்டுவிலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல் தொடர்கதையாக உள்ளது. இதனால், ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு இதுவரை ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த நிவாரணத் தொகையை ரூ.25 லட்சமாக...

கோயில் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்: கனடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்

இந்து கோயில் மீது காலிஸ்தான் தீவிரவாதக் குழுவினர் திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், கனடாவுக்கு இந்தியா கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளது. கனடாவின் டொரண்டோ மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் உள்ள இந்து சபா கோயில் மீது காலிஸ்தான் தீவிரவாத குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தினர். கோயிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கனடாவில் தூதரக முகாமுக்கு இந்திய அதிகாரிகளின் வருகையைக் கண்டித்து இந்தப் போராட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. இந்தத் தாக்குதலின்போது அப்பகுதி வன்முறைக் களமாக...

டெல்லியில் பட்டாசு தடையை அமல்படுத்தாதது ஏன்? – அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைப்படி கடந்த 2020-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைநாளில் பட்டாசு வெடிக்க தடைவிதிக்கப்படுகிறது. இந்த ஆண்டும்டெல்லி அரசு சார்பில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி டெல்லியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் காற்று மாசுஅபாய அளவை தொட்டுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்...

நடிகர் சுமன் கலந்து கொள்ளவிருந்த சிலை திறப்பு விழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பாபண்ண கவுட். 18-ம் நூற்றாண் டின் தொடக்கத்திலேயே இவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டம் செய்து உயிர் தியாகம் செய்தவர். இவருக்கு சிலை வைக்க இரு கோஷ்டியின ரிடையே கடந்த 2 ஆண்டுகளாக மோதல் நடந்து வந்தது. இந்நிலையில், கிழக்கு கோதா வரி மாவட்ட துணை ஆட்சிய ரான ராணி சுஷ்மிதா இரு கோஷ் டியினரை அழைத்து பேசி சுமுக தீர்வை கண்டார். இதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டு, பாபண்ணாவுக்கு ஒரு பொது இடத் தில் சிலை வைக்க தீர்மானித்தனர்....

உத்தராகண்டில் 650 அடி ஆழமான பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 36 பேர் உயிரிழப்பு: நடந்தது என்ன?

உத்தராகண்டில் 650 அடி ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில் 36 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உத்தராகணட் மாநிலம் பவுரி கார்வால் மாவட்டம் நைனி தண்டாவில் இருந்து புறப்பட்ட ஒரு பஸ், நைனிடால் மாவட்டம் ராம்நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. 40 பேர் பயணிக்கக் கூடிய அந்த பஸ்ஸில் 63 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று காலை 7...

தமிழகத்தில் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அழைப்பு

முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று தமிழகஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம்தேதி சுதந்திர தினவிழா உரையில்,“பொதுப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர்மருந்தகங்கள் தொடங்கப்படும்“ என்று அறிவித்தார். இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக கடந்த அக். 29-ம்தேதி முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட...

தஞ்சாவூருக்கு 7-ம் தேதி வரும் உதயநிதியை வரவேற்க கோயில் பணம் செலவிடுவதா? – ஹெச்.ராஜா கேள்வி

தஞ்சாவூர் செல்லும் உதயநிதி ஸ்டாலினுக்கு அனைத்து கோயில்களின் நிதியில் இருந்தும் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என நிர்பந்தம் செய்யப்படுவதாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: உதயநிதி ஸ்டாலினை பழநி முருகன் மாநாட்டில் பேச வைத்தனர். ‘‘இது ஆன்மிக மாநாடு அல்ல’’ என்று அவர் பேசுகிறார். அப்படியென்றால், அதற்கு ஏன்கோயில் நிதியை செலவு செய்தனர். கோயில் நிதியை எடுத்து அரசியல் மாநாடு நடத்துகின்றனர். கோயில் நிதியை திமுக அரசு தவறாக பயன்படுத்தி...

இந்து மக்கள் கட்சி, திராவிடர் கழகம் ஒரே இடத்தில் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டம்: சர்ச்சை பேச்சுகளால் பரபரப்பு

இந்து மக்கள் கட்சி, திராவிடர் கழகம் ஒரே இடத்தில் அடுத்தடுத்து நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தின. அப்போது எழுந்த சர்ச்சைபேச்சுகளால் பரபரப்பு ஏற்பட்டது. வன்கொடுமை தடுப்பு சட்டம் போல் பிராமணர்களை பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் காலை ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடந்தது. கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிட கட்சிகள் பிராமணர்களை இழிவுபடுத்தி பேசுவதாகக் கூறி கண்டன...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...