டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைப்படி கடந்த 2020-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைநாளில் பட்டாசு வெடிக்க தடைவிதிக்கப்படுகிறது. இந்த ஆண்டும்டெல்லி அரசு சார்பில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி டெல்லியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் காற்று மாசுஅபாய அளவை தொட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
தீபாவளி பண்டிகை நாளில் டெல்லியில் பட்டாசு தடையை முறையாக அமல்படுத்தாதது ஏன் என்பது குறித்து டெல்லி அரசும் டெல்லி காவல் துறையும் ஒரு வாரத்தில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அடுத்ததீபாவளி நாளில் பட்டாசு தடையைமுறையாக அமல்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற விவரங்களையும் பதில் மனுவில் குறிப்பிடவேண்டும். கடந்த 10 நாட்களில்பஞ்சாப், ஹரியானாவில் எந்தெந்தஇடங்களில் வேளாண் கழிவுகள்எரிக்கப்பட்டன. அதனால் ஏற்பட்டபாதிப்புகள் குறித்து இரு மாநிலஅரசுகளும் விளக்கம் அளிக்க வேண் டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.