9-ம் தேதி அல்பாசி ஆராட்டு விழா: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் மூடல்

0
48

கேரள மாநிலம் திருவனந்தபுரத் தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோயில் உள்ளது. இங்குஆண்டுதோறும் ஐப்பசி மற்றும் பங்குனி மாத திருவிழாவின் போதுஇங்குள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படும். அதன்படி, ஐப்பசி திருவிழாவின் போது பரிவேட்டை மற்றும் ஆராட்டு விழா நடைபெறும்.

அப்போது பத்மநாப சுவாமி கோயிலில் இருந்து சுவாமி சிலைகள் வீதியுலாவாக எடுத்துச் செல்லப்படும். அந்த ஊர்வலம் ஆண்டுதோறும் திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதை வழியாகவே செல்லும். அதற்காகவே அன்றைய தினம் விமான நிலைய ஓடுபாதை மூடப்படும். ஏனெனில், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே இந்த ஊர்வலம் செல்லும் பாதையில்தான் விமான நிலையம் கட்டப்பட்டது.

கோயில் ஊர்வலம் நடைபெறும்போது, விமான நிலைய ஓடுபாதையை மூடவும், ஊர்வலம்சென்ற பிறகே ஓடுபாதையைதிறக்கவும் அப்போதே முடிவாகி உள்ளது. அந்த வழக்கம் இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி வரும் 9-ம் தேதிஐப்பசி ஆராட்டு விழா நடைபெறுவதை முன்னிட்டு திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய ஓடு பாதை 5 மணி நேரம் மூடப்பட உள்ளது. அன்றைய தினம் மாலை 4 மணியில் இருந்து இரவு 9 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டு இருக்கும். அதற்கேற்ப சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் வருகை மற்றும் புறப்படும் நேரங்கள் மாற்றி அமைக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here