பயணிகளின் வசதிக்காக சூப்பர் செயலி: விரைவில் அறிமுகப்படுத்துகிறது ரயில்வே

0
53

தற்போது ரயிலில் பயணம் செய்வதற்கு பொதுமக்கள், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாகழகம் எனப்படும் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். 85 சதவீதம் பேர் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல் சரக்கு ரயில் போக்குவரத்து, ரயில்வே சுற்றுலா என தனித்தனியாகச் செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ரயில் போக்குவரத்தை உபயோகிப்பவர்கள், ஒருங் கிணைந்த சேவை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.

இதைத் தொடர்ந்து ரயில்வேஅமைச்சகத்தின் அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பயன்படுத்தும் வகையில்சூப்பர் ஆப் எனும் செல்போன் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் ஆப்மூலம் விரைவாக டிக்கெட்களைபயணிகள் முன்பதிவு செய்ய முடியும் என்று தெரியவந்துள்ளது.

அதேபோல், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் பயணிகள் எளிதில் பெற முடியும். மேலும், டிக்கெட்டை ரத்து செய்தால் அடுத்த 24 மணி நேரத்தில் பணத்தை ரயில்வே பயணிகள் திரும்ப பெறுவதற்கான வசதிகள் இந்த செல்போன் செயலியில் இடம்பெறும்.

அதுமட்டுமல்லாமல் பிஎன்ஆர் எண் மூலம் டிக்கெட் உறுதியானதா என்பதை சரிபார்த்தல், ரயில்கள் செல்லும் நிகழ்விடத்தை பார்த்தல், உணவு ஆர்டர் செய்தல் போன்ற பல்வேறு சேவைகளை பயணிகள் பெற முடியும்.

இந்த புதிய செல்போன் செயலியானது, இரண்டு பிரிவுகளைக் கொண்டிருப்பதாக அமையும். இதில் ஒன்று பயணி களுக்கானது. இரண்டாவது சரக்கு வாடிக்கையாளர்களுக்கானதாக இருக்கும். அதன்படி சரக்கு அனுப்புவது, அதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்பது, கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட வசதிகளும் இந்தசெல்போன் செயலியியில் இடம்பெறும்.

ரயில்வேயின் இந்த சூப்பர் ஆப் செயலி அநேகமாக இந்த ஆண்டு இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வே சூப்பர் செயலி பயன்பாட்டுக்கு வரும்போது, ரயில்வே பயணிகள் அனைத்து வசதிகளையும் இந்த ஒரே செயலி மூலம் எளிதில் பெற முடியும். ரயில் பயணிகள் சிரமம் இன்றி டிக்கெட் முன்பதிவு செய்ய வழிவகை ஏற்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here