கிள்ளியூர் பகுதிக்கு உட்பட்ட கொல்லங்கோடு காவல் நிலையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சொகுசு வேன் ஒன்றில் 8 மீனவர்கள் உட்பட 42 கேன்களில் 1500 லிட்டர் அரசின் மானிய விலை மண்ணெண்ணெய் இருந்துள்ளது. தமிழக மானிய விலை மண்ணெண்ணெய் கேரளா கொண்டு செல்வது சட்டப்படி குற்றம் என்று கூறி சொகுசு வேனை பறிமுதல் செய்து, கொல்லங்கோடு போலீஸ் நிலையம் கொண்டு வந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவற்றை நாகர்கோவில் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைப்பது என முடிவு எடுக்கப்பட்ட நிலையில் மக்கள் பிரதிநிதிகள் தலையிடு காரணமாக மேலிடத்திலிருந்து வந்த வாய்மொழி உத்தரவு அடுத்து போலீசார் மண்ணெண்ணெய் கடத்தல் வாகனத்தை போலீசார் திருப்பி அனுப்பினர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.