Home 2024
Yearly Archives: 2024
பொது, தனியார் கூட்டு முயற்சியில் எண்ணூர், உப்பூர் அனல்மின் திட்டம்: உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்துடன் ஆலோசனை
எண்ணூர் மற்றும் உப்பூர் அனல்மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை பொது, தனியார் கூட்டு முயற்சியில் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திடம் மின்வாரியம் ஆலோசனை கேட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் 660 மெகாவாட் திறனில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இதன் கட்டுமானப் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனால், வேறொரு நிறுவனத்திடம் கடந்த 2022, மார்ச் மாதம் பணி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அந்நிறுவனமும் பணியை தாமதம்...
தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவி வரும் சூழலில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை (நவ. 7) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...
பள்ளி ஆய்வு பணியில் கல்வி அதிகாரிகள் மெத்தனம்: கேள்விக்குறியாகி வரும் மாணவர்களின் பாதுகாப்பு
பள்ளி ஆய்வு பணியில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இதில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 25-ம் தேதி வகுப்பறையில் வாயு பரவி 39 மாணவிகள் மயக்கம் அடைந்த பரபரப்பு அடங்குவதற்குள் அப்பள்ளியில் நேற்று மீண்டும் 4 மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர். முதல் சம்பவம் நடந்தபோது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பள்ளியிலேயே முற்றுகையிட்டு தொடர் ஆய்வு மேற்கொண்டபோதிலும் இன்னும் காரணம்...
ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கோவை விளாங்குறிச்சியில் ரூ.158.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தகவல் தொழில்நுட்பத் துறையின் திறனை உணர்ந்து, விரைவான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உகந்த வணிகச் சூழலை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. இதன்மூலமாக பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவை நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குத் தமிழ்நாடு விருப்பத் தேர்வாக உருவாகியுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகள் தமிழ்நாட்டில் தழைத்து...
ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று
ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்கும் வகையில், தடையின்மை சான்று வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் ஒற்றைச் சாளர திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் உத்தேச தடையின்மை சான்று வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வீட்டுவசதித் துறை செயலர் காகர்லா உஷா வெளியட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், வணிகத்தை எளிதாக மேற்கொள்ளும் வகையிலும், தமிழக அரசால் ஒற்றைச் சாளர முறையில் கட்டிட அனுமதி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு துறைகளிடம் இருந்து தடையின்மை சான்று...
உயர் நீதிமன்றத்தில் புதிதாக 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்
உயர் நீதிமன்றத்தில் புதிதாக மேலும் 2 கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் ஆஜராகி வாதிட தலைமை வழக்கறிஞர், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், மாநில அரசு ப்ளீடர் மற்றும் சிறப்பு வழக்கறிஞர்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேலும் 2 பேரை புதிதாக கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களாக நியமித்து தமிழக அரசின் பொதுத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தமிழ்நாடு...
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூரில் குழாய் குடிநீர் விநியோகம் ஒருநாள் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு
கிழக்கு கடற்கரை சாலை 6 வழி சாலையாக மாற்றப்படுவதால், விஜிபி வளாகம் எதிரில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை 24 மணி நேரம் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிழக்கு கடற்கரை சாலை (ECR) 6 வழி சாலையாக மாற்றப்படுவதால் நெடுஞ்சாலைத்துறையின்...
வடசென்னையில் ரூ.50 கோடியில் 10 நூலகங்களை மேம்படுத்த அரசு திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
கொளத்தூரில் திறக்கப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் போல வடசென்னையில் ரூ.50 கோடியில் 10 நூலகங்களை மேம்படுத்தி, பகிர்ந்த பணியிட மையம் மற்றும் கல்வி மையம் அமைக்கவுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை திரு.வி.க.நகர், எழும்பூர், துறைமுகம், ராயபுரம், ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர் பகுதிகளில் உள்ள முழுநேரம் மற்றும் பகுதிநேர கிளை நூலகங்களை வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் மேம்படுத்தி, பகிர்ந்த பணியிட மையம் மற்றும் கல்வி மையம் அமைக்கப்படவுள்ளது.
இதையொட்டி அமைச்சர் நேற்று களஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர்...
குழந்தை தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்: மருத்துவ கவுன்சில் நோட்டீஸுக்கு பெண் மருத்துவர் விளக்கம்
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் தமிழக மருத்துவ கவுன்சில் அனுப்பிய நோட்டீஸுக்கு பெண் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த யூடியூபரான இர்பான் - ஆசிபா தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. பிரசவ சிகிச்சையின்போது அறுவை சிகிச்சை அரங்கில் இருந்த இர்பான், அங்கிருந்த மருத்துவரின் அனுமதியுடன் தாய் மற்றும் குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் வெட்டினார்.
இதுதொடர்பான விடியோவை தனது யூடியூப் பக்கத்தில் இர்பான் பதிவிட்டது பெரும் சர்ச்சையானது. தொடர்ந்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம்...
போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமித்தால்தான் மகப்பேறு இறப்பு குறையும்: அரசு மருத்துவர் சட்டப் போராட்ட குழு வலியுறுத்தல்
தமிழகத்தில் மகப்பேறு இறப்பை குறைக்க போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை நியிமிக்காமல், 'வார் ரூமை' மட்டும் அமைப்பது தீர்வாகாது என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு மருத்துவமனைகளில் இருக்கும் குறைபாடுகளை சரிசெய்ய சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹு உத்தரவிட்டுள்ளார். துறையில் உள்ள அடிப்படை தேவைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வை ஏற்படுத்தாமல் மாற்றம் காண முடியாது.
குறிப்பாக, தமிழகத்தில் கிட்டத்தட்ட கடந்த 10, 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவமனைகளில் புதிதாக...














