Google search engine
Home 2024

Yearly Archives: 2024

போலீஸ் அதிகாரியை மிரட்டியதாக மத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு

க‌ர்நாடகாவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டியதாக மத்திய அமைச்சர் குமாரசாமி மீது பெங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக லோக் ஆயுக்தாவின் சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி சந்திரசேகர் பெங்களூருவில் உள்ள சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தார். அதில், ''மத்திய கனரக மற்றும் தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, அவரது மகன் நிகில், குமாரசாமியின் ஆதரவாளர் சுரேஷ் குமார் ஆகியோர் கடந்த 28-ம் தேதி முதல் எனக்கு எதிராக ஊடகங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம்...

வெளிநாடுகளில் சைபர் குற்ற கும்பல் பிடியில் 3,000 உத்தர பிரதேச இளைஞர்கள் சிக்கித் தவிப்பு: மீட்கும் பணி தீவிரம்

வெளிநாடுகளில் சைபர் குற்ற கும்பலின் பிடியில் உ.பி.யின் 3.000 இளைஞர்கள் சிக்கித் தவிக்கின்றனர். மத்திய அரசின் உதவியுடன் இவர்களை மீட்கும் பணியில் மாநில காவல் துறை இறங்கியுள்ளது. நாட்டில் சமீப காலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதில் ’டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற குற்றம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் நடத்தப்படுகிறது. மத்திய, மாநில அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இதில் குறி வைக்கப்படுகின்றனர். இக்குற்றங்கள் கம்போடியா, தாய்லாந்து மற்றும் வியாட்நாமில் இருந்து அதிகம் செய்யப்படுகின்றன. இந்த மூன்று நாடுகளும் சைபர் குற்றங்கள் நிகழும் முக்கிய...

வக்பு சட்டத் திருத்தத்தில் இரட்டை நிலை: கேரள கட்சிகள் மீது பாஜக கடும் தாக்கு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் இரட்டை நிலையை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) கட்சிகள் கடைபிடித்து வருகின்றன என்று பாஜக மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கேரள மாநில பாஜக பொறுப்பாளரான பிரகாஷ் ஜவடேகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வக்ஃப் வாரியங்களில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தற்போது இந்த சட்ட மசோதாவானது, நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி)...

புரோபா-3 விண்கலத்தை ஏவுகிறது இஸ்ரோ: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

சூரிய ஒளிவட்டத்தை ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியனின் புரோபா-3 விண்கலத்தை, பிஎஸ்எல்வி -எக்ஸ்எல் ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ அடுத்த மாதம் விண்ணுக்கு அனுப்புகிறது என மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் நேற்று கூறினார். இந்திய விண்வெளி கருத்தரங்கம் 3.0 புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பங்கேற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது: சூரியனின் ஒளிவட்டம் பற்றிய ஆய்வில் ஐரோப்பிய விஞ்ஞானிகளுடன், இஸ்ரோ விஞ்ஞானிகளும் ஈடுபடவுள்ளனர். இதற்காக ஐரோப்பிய யூனியனின் புரோபா-3 விண்கலத்தை இஸ்ரோ பிஎஸ்எல்வி-எக்ஸ்எல்...

எங்காவது ஓரிடத்தில் நிறுத்தித்தானே ஆகவேண்டும்: அரசியலில் ஓய்வு குறித்து சரத் பவார் சூசகம்

இனி வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், எங்காவது ஓரிடத்தில் நிறுத்தித்தானே ஆகவேண்டும் எனவும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (83) சூசகமாக தெரிவித்துள்ளார். அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிய இன்னும் 18 மாதங்கள் இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியான சரத் பவார் கடந்த 1999-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தார். மகாராஷ்டிர அரசியலில் நீண்ட அரசியல் அனுபவத்தை கொண்டவர் அவர். மேற்கு மகாராஷ்டிராவில்...

பொதுவெளியில் பாஜக தலைவரின் காலை தொட்டு வணங்கிய நிதிஷ் குமாருக்கு லாலு பிரசாத் கண்டனம்

பொதுவெளியில் பாஜக தலைவரின் காலை தொட்டு வணங்கிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் செயலுக்கு ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தார். பிஹாரில் நடைபெற்ற சித்திரகுப்தா பூஜையில் பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஆர்.கே. சின்ஹா பங்கேற்றார். அப்போது, பொது வெளியில் அவரின் காலைத் தொட்டு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வணங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, பொதுவெளியில் பாஜக தலைவரின் காலைத் தொட்டு வணங்கிய நிதிஷ் குமாரின் செயலுக்கு...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 25-ம் தேதி தொடக்கம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 25-ம் தேதி தொடங்கும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் குளிர்கால கூட்டத் தொடரை நவம்பர் 25 -ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை நடத்த குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில்...

அணைகள், ஏரிகளில் மதகு பராமரிப்பு கண்காணிப்பு: அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்

அணைகள் மற்றும் ஏரிகளில் மதகுகள் பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நீர்வளத் துறையின் அறிவிப்புகளில் நிறைவேற்றப்பட்டு வரும் பணிகள் குறித்து தலைமை செயலகத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நீர்வளத் துறை திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து சிறப்பு கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது அப்போது, அமைச்சர் பேசும்போது, “தமிழ்நாடு முழுவதும் நீர்வளத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தி அடுத்தாண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடித்து...

பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத்தை பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டியுள்ளது வேதனை: ஐகோர்ட்

பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நிவாரணத்தைப் பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய இக்கட்டான நிலை உள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா வேதனை தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக்கூறி ரூ. 13.66 லட்சம் வசூலித்து ஏமாற்றியதாக வேலூரைச் சேர்ந்த மனோகர் தாஸ் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ஜெயசிங் வசந்த் ரஞ்சித் என்பவருக்கு எதிராக கோயம்பேடு போலீஸில் புகார் அளித்திருந்தார். தனது புகார் மீது எப்ஐஆர் பதிவு செய்த போலீஸார் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவி்ல்லை எனக்கூறி...

சீமான், சாட்டை துரைமுருகனால் உயிருக்கு ஆபத்து: பாதுகாப்பு கேட்டு திருச்சி சூர்யா வழக்கு

சீமான், சாட்டை துரைமுருகன் ஆகியோரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, திருச்சி சூர்யா போலீஸ் பாதுகாப்பு கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. திருச்சியைச் சேர்ந்த சூர்யா. இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருச்சியில் குடும்பத்துடன் வசிக்கிறேன். எனது தந்தை திருச்சி சிவா நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். நான் பாஜக.வில் ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளராக இருந்தேன். சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாத மேடைகளிலும் பங்கேற்கிறேன். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...