Google search engine
Home 2024

Yearly Archives: 2024

நித்திரவிளை: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மகள் ஷாலு (17). பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக கடந்த 27ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று (5-ம் தேதி) மாலை 6 மணிக்கு மீண்டும் பெங்களூருக்கு புறப்பட இருந்தார்.      பிற்பகல் 3 மணிக்கு திடீரென தனது அறைக்கு சென்றவர்  பின்னர் வெளியில் வரவில்லை. தாயார் கதவை திறந்து பார்த்தபோது மகள் ஷாலு தூக்கில்...

இயக்குநர் மீது மஞ்சு வாரியர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

0
மோகன்லால், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ் நடித்த ‘ஓடியன்’ என்ற படத்தை இயக்கியவர் ஸ்ரீகுமார் மேனன். ஏராளமான விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ளார். இவர் மீது நடிகை மஞ்சு வாரியர், கடந்த 2019-ம் ஆண்டு போலீஸில் புகார் கொடுத்தார். திருவனந்தபுரம் டிஜிபியிடம் நேரில் கொடுத்த அந்தப் புகாரில் தன்னையும் தனது நண்பர்களையும் சமூக வலைதளங்களில் ஸ்ரீகுமார் மேனன் தொடர்ந்து அவமானப் படுத்தி வருவதாகவும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சுவதாகவும் கூறியிருந்தார். இதற்கு அப்போது பதிலளித்த ஸ்ரீகுமார் மேனன், “உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை....

உடல் எடை குறித்து கேள்வி: கோபமாக பதில் அளித்த சமந்தா

சமந்தா நடித்துள்ள ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ வெப் தொடர், பிரைம் வீடியோவில் வரும் 7-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சமூக வலைதளம்மூலம் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடினார், சமந்தா. ஏராளமான கேள்விகள் வந்தன. ஒரு ரசிகர், ‘கொஞ்சம் உடல் எடையை அதிகரியுங்கள்’ என்று கூறியிருந்தார். இந்த கேள்விக்கு அதிருப்தி தெரிவித்த சமந்தா, “நான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பது தெரியும். மருத்துவரின் அறிவுறுத்தல்களின்படி எனது உணவை எடுத்துக்கொள்கிறேன். கடுமையான அழற்சி எதிர்ப்பு உணவை எடுப்பதால் என் உடல் எடையில் ஏற்ற இறக்கம் ஏற்படாமல் பார்த்துக்...

அமரன் படத்தில் நடிக்க என் தந்தைதான் காரணம்! – சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள படம் ‘அமரன்'. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் படம் அக்.31-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: என் அப்பா, ஜி.தாஸ் சிறைத்துறை அதிகாரியாக இருந்தவர். எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர். இந்தப் படத் தில் நடிக்க அவர்தான் முதல் காரணம். கடந்த 21 வருடங்களாக அவர் நினைவுகளோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவரை மீண்டும் பார்க்கவும் அவராக...

காக்கி யூனிஃபார்ம் மீது காதல் உண்டு: நகுல்

போலீஸ் கதாபாத்திரத்தில், நடிகர் நகுல் நடித்துள்ள படம் ‘தி டார்க் ஹெவன்'. இதை ‘டி3’ படத்தை இயக்கிய பாலாஜி இயக்கியுள்ளார். மணிகண்டன் பி.கே.ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். ரேணு சவுந்தர், சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ்.மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. படத்தின் ஹீரோ நகுல் பேசும்போது, “இதில் போலீஸாக நடித்திருக்கிறேன். சின்ன வயதில் இருந்தே காக்கி யூனிபார்ம் மீது எனக்கு காதல் உண்டு. நான் நடிக்க...

தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாடு – ம.பி. ஆட்டம் டிரா

ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் நேற்று மத்திய பிரதேசத்துடன் மோதியது. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. தமிழ்நாடு அணி தரப்பில் செல்வராஜ் கனகராஜ் (42-வது நிமிடம்), சண்முகவேல் (53-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மத்திய பிரதேச அணி சார்பில் குமார் கனோஜியா (35-வது...

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் 2024: விதித் குஜராத்தியை 5 மணி நேரம் போராடி வென்றார் அர்ஜுன் எரிகைசி

இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று தொடங்கியது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவு முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, சகநாட்டைச் சேர்ந்த விதித் குஜராத்தியுடன் மோதினார். அர்ஜுன் எரிகைசி கருப்பு காய்களுடனும், விதித் குஜராத்தி வெள்ளை காய்களுடனும் விளையாடினர். இதில் 96-வது நகர்த்தலின் போது அர்ஜுன் எரிகைசி வெற்றியை வசப்படுத்தினார். இதனால் அவர், முழுமையாக ஒரு புள்ளியை பெற்றார். இந்த ஆட்டம்சுமார் 5...

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் 2036-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்த விருப்பம் தெரிவித்து கடிதம் வழங்கியது இந்தியா

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் 'விருப்பக் கடிதத்தை' சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் எதிர்கால போட்டியை நடத்தும் உரிமையை வழங்கும் கமிஷனிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடனான பல மாத முறைசாரா உரையாடலுக்குப் பிறகு ஒரு லட்சிய திட்டத்தில் முதல் உறுதியான நடவடிக்கையை இந்திய ஒலிம்பிக் சங்கம் எடுத்துள்ளது. இந்த கடிதத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) கடந்த அக்டோபர் 1-ம்தேதி சமர்ப்பித்ததாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மகத்தான வாய்ப்பின் மூலம்...

உத்தரபிரதேச அரசு அமல்படுத்திய மதரஸா கல்விச் சட்டம் செல்லும்: உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

உத்தரபிரதேச மாநில அரசு கொண்டு வந்து அமல்படுத்திய மதரஸா கல்விச் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டில், உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான அரசு, மதரஸா கல்விச் சட்டத்தை கொண்டு வந்தது. இதை எதிர்த்து அன்ஷுமன் சிங் ரத்தோர் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உத்தரபிரதேச மாநில அரசு கொண்டு வந்துள்ள மதரஸா கல்விச் சட்டம் - 2004 என்பது அரசியல் சாசனத்துக்கே எதிரானது. இந்தச் சட்டம்...

ஆந்திராவின் கஜானாவையே ஜெகன் காலி செய்து விட்டார்: அமைச்சர் நாராயணா குற்றச்சாட்டு

 ரூ.10 லட்சம் கோடி கடனுடன் ஆந்திராவின் கஜானாவையே முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி காலி செய்துவிட்டார் என ஆந்திர மாநில நகராட்சி வளர்ச்சி துறை அமைச்சர் நாராயணா குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திர மாநில நகராட்சி வளர்ச்சி துறை அமைச்சர் நாராயணாவுக்கு காக்கிநாடா மாவட்ட பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அவர் நேற்று அம்மாவட்டத்திற்கு சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிலர் கூட்டணி கட்சிகளுக்கிடையே பிரச்சனை வெடித்து வருவதாக வீண் புரளியை கிளப்பி வருகின்றனர். அப்படி ஏதும் நடக்கவில்லை. அப்படி ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவற்றை பேசி...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...