Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மதுராந்தகம் அஹோபில மடம் சம்ஸ்கிருத கல்லூரியில் மத்திய சம்ஸ்கிருத பல்கலை. குழுவினர் ஆய்வு

ஆதர்ஷ் சம்ஸ்கிருத மகாவித்யா லயா திட்டத்தின்கீழ் தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழக குழுவினர் மதுராந்தகம் அஹோபில மடம் சம்ஸ்கிருத கல்லூரியில் ஆய்வு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சந்நிதி தெருவில்  அஹோபில மடத்தின் ஆதர்ஷ் சம்ஸ்கிருதகல்லூரி இயங்கி வருகிறது.  மாலோலன் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் இக்கல்லூரியில் சிரோமணி (எம்ஏ), மத்யமாசிரோமணி (பிஏ), பிராக் சிரோமணி படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆதர்ஷ் சம்ஸ்கிருத மகாவித்யாலயா திட்டத்தின்கீழ் மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் சம்ஸ்கிருத கல்லூரிகளுக்கு கல்விதரத்துக்கு ஏற்ப கிரேடு ஏ, பி,...

காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு – ‘ஏஐ’ பயன்பாட்டில் வெளிப்படை தன்மை தேவை: சட்டப்பேரவை தலைவர் வலியுறுத்தல்

‘செயற்கை நுண்ணறிவு’ (ஏஐ) பயன்பாடு வெளிப்படை, உண்மைத் தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்று காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் சட்டபேரவைத் தலைவர் மு.அப்பாவு வலியுறுத்தினார். ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் 67-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு நேற்று தொடங்கியது. நாளை (நவ.8) வரை நடைபெறும் இந்த மாநாட்டில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று பங்கேற்றார். மாநாட்டின் ஒரு பகுதியாக ‘நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு - வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியா உட்பட பல்வேறு...

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நாள்பட்ட தீக்காயத்தை விரைந்து குணப்படுத்தும் பிராணவாயு சிகிச்சை

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாள்பட்ட தீக்காயங்களை விரைவாககுணப்படுத்த உயர் அழுத்த பிராணவாயு சிகிச்சை அளிக்கப் படுகிறது. நோயாளிகள் டிவி பார்த்து கொண்டே சிகிச்சை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் தீ விபத்தால் ஏற்படும் காயங்களை குணப்படுத்த சிறப்பு தீக்காய பிரிவு மற்றும் அதிநவீன உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளன. நீண்ட நாட்களாக குணமாகாமல் இருக்கும் காயங்களை சரி செய்ய நோயாளிகளுக்கு உயர் அழுத்த பிராணவாயு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை மூலம் நோயாளிகளின் திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் 3...

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 13-ம் தேதி தர்ணா போராட்டம்: ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

மத்திய அரசு சுகாதாரத் திட்டம் மேம்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு சிறப்பான மருத்துவ சேவையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது உட்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு வரும் 13-ம் தேதி டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தவுள்ளது. இது குறித்து இந்தக் குழுவின் துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.மோகன்தாஸ் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு சுகாதாரத் திட்டம் மேம்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு சிறப்பான மருத்துவ சேவையை உத்தரவாதப்படுத்த வேண்டும். மத்திய அரசு சுகாதாரத் திட்டம் இல்லாத...

மருத்துவர்கள் குறைவாக உள்ள சிறிய மருத்துவமனைகளில் 24 மணி நேர சேவையை ரத்து செய்ய வேண்டும்: அரசு மருத்துவர்கள் சங்கம்

மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள சிறிய மருத்துவமனைகளில் 24 மணி நேர சேவையை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் தெரிவித்தனர். இதுதொடர்பாக சென்னையில் அவர்கள் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: எங்களது நீண்டநாள் கோரிக்கையான அரசாணை 354-ஐ மறுஆய்வு செய்து ஊதியம் மற்றும் பணி உயர்வு வழங்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அரசாணை 293-ஐ மாற்றம் செய்து வழங்கியதில் ஆரம்ப சுகாதார நிலைய மற்றும் பல் மருத்துவர்களுக்கு கிடைக்கவேண்டிய பலன்களை...

சென்னை | புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில், தடா - சூலூர்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு: சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டைக்கு நவ. 7, 9, 12 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், ஆவடி - சென்னை சென்ட்ரலுக்கு நவ. 7, 9, 12 ஆகிய தேதிகளில் காலை 6.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சூலூர்பேட்டை - நெல்லூருக்கு...

ஒழுகினசேரியில் நகர் நல மையத்தை திறக்க மக்கள் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரூ. 60 லட்சம் செலவில் நகர் நல சுகாதார மையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் கட்டப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் திறக்கப்படாமல் கட்டிய நிலையிலேயே மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கட்டடத்தை திறந்து நகர் நல மையத்தை செயல்பட வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தக்கலை: போலீஸிடம் தற்கொலை மிரட்டல் விடுத்து தப்ப முயன்ற கைதி

அருமனை அருகே உள்ள சிதறால் பகுதியை சேர்ந்தவர் டேவிட் ஜான் (39). ஆயுதப்படை தலைமைக் காவலரான இவர் நேற்று (5-ம் தேதி)  பாளையங்கோட்டை சிறையில் இருந்து போலீஸ்  வாகனத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரசூல் என்ற முத்தையா (25) என்பவரை நாகர்கோவில் கொண்டு வந்தார். பின்னர்  பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் உள்ள ஒரு வழக்கு ஆஜர் படுத்துவதற்காக அரசு பஸ்ஸில் தக்கலைக்கு அழைத்து வந்தார்.        நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் தக்கலை பஸ் நிலையம் வந்தனர். அப்போது டேவிட் ஜானிடம் ரசூல் முத்தையா...

திருவட்டார்: திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

புதுக்கடை அருகே உள்ள தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ரிப்பாய் (40). இவர் மீது குமரி மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் திருவட்டார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு  நடந்த திருட்டு வழக்கில் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளிவந்த கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நீதிமன்ற வாய்தாவுக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவரை பிடிக்க பத்மநாபபுரம்  குற்றவியல் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. போலீசார்...

நித்திரவிளை: மாணவர்களுக்கு  கஞ்சா விற்ற 2 பேர் கைது

நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் போலீசார் நேற்று (5-ம் தேதி) மாலையில் விரி விளை அருகே உள்ள கணபதியான்கடவு  பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை  போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள்.      தொடர்ந்து அவர்களை சோதனையிட்ட. போது கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. தவிசாரணையில் இவர்கள் புதுக்கடை பகுதி பைங்குளத்தை சேர்ந்த அஜித்குமார் (28), அர்ஜுன் சிங் (31)...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...