Google search engine
Home 2024

Yearly Archives: 2024

நாய்கள் கடித்து உயிருக்கு போராடிய குரங்கு குட்டியை பராமரித்த மருத்துவருக்கு பார்க்க அனுமதி

தெரு நாய்கள் கடித்ததால் உயிருக்கு போராடிய குரங்கு குட்டிக்கு சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர், வண்டலூர் பூங்காவில் உள்ள அந்த குட்டியைப் பார்வையிட அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கால்நடை மருத்துவர் ஏ.வல்லயப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் கடந்த 2023 டிசம்பர் 4-ம் தேதி நடந்தது. தெருநாய்கள் கடித்ததால் காயமடைந்த ஒரு குரங்கு குட்டியை வனத்துறை பாதுகாவலர் ஒருவர் அங்கு கொண்டு வந்தார். எனது பராமரிப்பில்...

தமிழகம் முழுவதும் பழனிசாமி விரைவில் சுற்றுப்பயணம்

அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்த தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கும் விரைவில் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக, மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநில செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்டம் தோறும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அதிக அளவில் இளைஞர்களை கட்சிக்குள் சேர்ப்பது, அவர்களுக்கு பொறுப்புகள் வழங்குவது, தற்போது அதிமுக மீதான மக்களின்...

காவிரியில் தமிழக பங்கை மாதம்தோறும் வழங்க வேண்டும்: மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தல்

காவிரியில் தமிழகத்துக்கான பங்கினை மாதம்தோறும் வழங்க வேண்டும். காவிரியில் திறந்துவிடப்படும் உபரிநீரை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தமிழக நீர்வளத்துறை செயலர் க.மணிவாசன் தெரிவித்தார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35-வது கூட்டம் ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலர் க.மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியம், உறுப்பினர் எல்.பட்டாபிராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். உதவி செயற்பொறியாளர் குளஞ்சிநாதன், உதவிப் பொறியாளர் நிஷா ஆகியோர்...

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (நவ.7) ஒருசில இடங்களிலும், நாளை (நவ.8) பெரும்பாலான இடங்களிலும், 9 முதல் 12-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல்...

அரசுப் பள்ளிகளில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: கண்காணிப்பை தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம்

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் பள்ளிக்கல்வித் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நிலை, உட்கட்டமைப்பு வசதிகள், அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென அனைத்து அலுவலர்களுக்கும் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை,...

இரவு வாகன சோதனையின்போது தாக்கிவிட்டு தப்பிய வழிப்பறி கொள்ளையரை விரட்டி பிடித்த போலீஸார்: காவல் ஆணையர் பாராட்டு

இரவு வாகன சோதனையின்போது தங்களை தாக்கி விட்டு தப்பிய வழிப்பறி கொள்ளையர்கள் இருவரை போலீஸார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். பணியின்போது விழிப்புடன் செயல்பட்ட போலீஸாரை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுத்து நிறுத்த போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.அதன்படி, பரங்கிமலை போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் தலைமைக் காவலர்கள் பிரகாஷ், பிரவீன்குமார் மற்றும் முதல்...

முன்னாள் உள்துறை செயலர் கே.மலைச்சாமி காலமானார்: சென்னையில் நாளை உடல் அடக்கம்

தமிழக முன்னாள் உள்துறை செயலர் கே.மலைச்சாமி வயது முதிர்வு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 87. அவரது உடல் அரசு மரியாதையுடன் சென்னையில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது. தமிழக அரசின் உள்துறை செயலராக இருந்தவர் கே.மலைச்சாமி. இவர் சென்னை அண்ணாநகரில், எண்.89, ஏசி பிளாக், 2-வது தெருவில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தார். இவர் வயது முதிர்வு காரணமாக தனது இல்லத்தில் நேற்று காலமானார். இறுதிச் சடங்குகள் அவரது இல்லத்தில் நாளை (நவ.8) காலை 10 மணிக்கு நடைபெறும். அதனைத்...

பயிர் கடன், உரம் வழங்குவது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அவர்களின் கோரிக்கைகளை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விவசாயத்தை பாதுகாக்க, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அவர்களின் கோரிக்கைகளை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளின் மூலம், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் கடன் முறையாக, முழுமையாக வழங்கப்பட வில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, விவசாயப் பரப்பளவுக்கு ஏற்ப, கடன் பெற்று விவசாயம் செய்ய விவசாயிகள்...

ஸ்டான்லி அரசு மருத்துவமனை, தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள், விமானம், ரயில், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு புரளியை கிளப்பும் வகையில் அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்தவாறு மர்ம நபர்கள் இ-மெயில்கள் மூலம் இவ்வாறு மிரட்டி வருகின்றனர். அதன்படி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தகவல் அறிந்து ராயபுரம் காவல் நிலைய போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும்...

கவுரிவாக்கம் சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை

சென்னை அடுத்த கவுரிவாக்கத்தில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை அடுத்த கவுரிவாக்கத்தில் தாம்பரம் - வேளச்சேரி சாலையில் சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனை (புற்றுநோய் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி) அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து, சிருங்கேரி சாரதா பீடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் ஆசியுடன், புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சையை மருத்துவமனை நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்த...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...